திருப்புகழ் 269 சினத்தவர் முடிக்கும் (திருத்தணிகை)

Thiruppugal 269 Sinaththavarmudikkum

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம்
தனத்தன தனத்தம் – தனதான

சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்
செகுத்தவர் ருயிர்க்குஞ் – சினமாகச்

சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென் – றறிவோம்யாம்

நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
நிசிக்கரு வறுக்கும் – பிறவாமல்

நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
நிறைப்புக ழுரைக்குஞ் – செயல்தாராய்

தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
தகுத்தகு தகுத்தந் – தனபேரி

தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்
தளத்துட னடக்குங் – கொடுசூரர்

சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்
சிரித்தெரி கொளுத்துங் – கதிர்வேலா

தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
திருத்தணி யிருக்கும் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம்
தனத்தன தனத்தம் – தனதான

சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும்
செகுத்தவர் உயிர்க்கும் – சினமாகச்

சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென்று – அறிவோம்யாம்

நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
பிறவாமல் நிசிக்கரு வறுக்கும் – பிறவாமல்

நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
நிறைப்புகழ் உரைக்குஞ் – செயல்தாராய்

தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
தகுத்தகு தகுத்தந் – தன பேரி

தடுட்டுடு டுடுட்டுண் டென துடி முழக்கும்
தளத்துட னடக்கும் – கொடுசூரர்

சினத்தையும் உடற்சங் கரித்தம லைமுற்றும்
சிரித்தெரி கொளுத்தும் – கதிர்வேலா

தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்து எண்
திருத்தணி யிருக்கும் – பெருமாளே.

English

sinaththavar mudikkum pagaiththavar kudikkum
seguththavar uyirkkum – sinamAga

sirippavar thamakkum pazhippavar thamakkum
thiruppugazh neruppendr – aRivOm yAm

ninaiththadhum aLikkum manaththaiyum urukkum
nisikkaru aRukkum – piRavAmal

neruppaiyum erikkum poruppaiyum idikkum
niRaippugazh uraikkum seyal – thArAy

thanaththana thanaththan dhimithdhimi dhimiththin
thaguththagu thaguththan – thana bEri

thaduttudu duduttuN denaththudi muzhakkun
thaLaththudan adakkum – kodusUrar

sinaththaiyu mudaRsang ariththa malai mutrunj
siriththeri koLuththung – kadhir vElA

thinaiggiri kuRappeN thanaththinil sukiththeN
thiruththaNi irukkum – perumALE.

English Easy Version

sinaththavar mudikkum pagaiththavar kudikkum
seguththavar uyirkkum – sinamAga

sirippavar thamakkum pazhippavar thamakkum
thiruppugazh neruppendr – aRivOm yAm

ninaiththadhum aLikkum manaththaiyum urukkum
nisikkaru aRukkum – piRavAmal

neruppaiyum erikkum poruppaiyum idikkum
niRaippugazh uraikkum – seyal thArAy

thanaththana thanaththan dhimithdhimi dhimiththin
thaguththagu thaguththan – thana bEri

thaduttudu duduttuN denaththudi muzhakkun
thaLaththudan adakkum – kodusUrar

sinaththaiyu mudaRsang ariththa malai mutrunj
siriththeri koLuththung – kadhir vElA

thinaiggiri kuRappeN thanaththinil sukiththu eN
thiruththaNi irukkum – perumALE.