திருப்புகழ் 271 சொரியும் முகிலை (திருத்தணிகை)

Thiruppugal 271 Soriyummugilai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தனனத் தனன தனனத்
தனன தனனத் – தனதான

சொரியு முகிலைப் பதும நிதியைச்
சுரபி தருவைச் – சமமாகச்

சொலியு மனமெட் டனையு நெகிழ்விற்
சுமட ரருகுற் – றியல்வாணர்

தெரியு மருமைப் பழைய மொழியைத்
திருடி நெருடிக் – கவிபாடித்

திரியு மருள்விட் டுனது குவளைச்
சிகரி பகரப் – பெறுவேனோ

கரிய புருவச் சிலையும் வளையக்
கடையில் விடமெத் – தியநீலக்

கடிய கணைபட் டுருவ வெருவிக்
கலைகள் பலபட் – டனகானிற்

குரிய குமரிக் கபய மெனநெக்
குபய சரணத் – தினில்வீழா

உழையின் மகளைத் தழுவ மயலுற்
றுருகு முருகப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தனனத் தனன தனனத்
தனன தனனத் – தனதான

சொரியும் முகிலைப் பதும நிதியைச்
சுரபி தருவைச் – சமமாகச்

சொ(ல்)லியும் மனம் எள் (அத்)தனையும் நெகிழ்வு
இல் சுமடர் அருகு உற்று – இயல் வாணர்

தெரியும் அருமைப் பழைய மொழியைத்
திருடி நெருடிக் – கவி பாடி

திரியு மருள் விட்டு உனது குவளைச்
சிகரி பகரப் – பெறுவேனோ

கரிய புருவச் சிலையும் வளைய
கடையில் விடம் – மெத்திய நீலக்

கடிய கணை பட்டு உருவ வெருவிக்
கலைகள் பல பட்டன – கானிற்கு

உரிய குமரிக்கு அபயம் என நெக்கு
உபய சரணத்தினில் – வீழா

உழையின் மகளைத் தழுவ மயல் உற்று
உருகு(ம்) முருகப் – பெருமாளே.

English

coriyu mukilaip pathuma nithiyaic
curapi tharuvaic – camamAkac

coliyu manamet tanaiyu nekizhviR
sumada rarukut – RiyalvANar

theriyu marumaip pazhaiya mozhiyaith
thirudi nerudik – kavipAdith

thiriyu maruLvit tunathu kuvaLaic
cikari pakarap – peRuvEnO

kariya puruvac cilaiyum vaLaiyak
kadaiyil vidameth – thiyaneelak

kadiya kaNaipat turuva veruvik
kalaikaL palapat – tanakAniR

kuriya kumarik kapaya menanek
kupaya saraNath – thinilveezhA

uzhaiyin makaLaith thazhuva mayalut
Ruruku murukap – perumALE.

English Easy Version

coriyum mukilaip pathuma nithiyaic
curapi tharuvaic – camamAkac

co(l)liyum manam eL (ath)thanaiyum nekizhvu il
sumadar aruku utRu – iyal vANar

theriyum arumaip pazhaiya mozhiyaith
thirudi nerudik – kavi pAdi

thiriyu maruL vittu unathu kuvaLaic
cikari pakarap – peRuvEnO

kariya puruvac cilaiyum vaLaiya
kadaiyil vidam meth – thiya neelak

kadiya kaNai pattu uruva veruvik
kalaikaL pala pattana – kAniRku

uriya kumarikku apayam ena nekku
upaya saraNaththinil – veezhA

uzhaiyin makaLaith thazhuva mayal utRu
uruku(m) murukap – perumALE.