திருப்புகழ் 272 தாக்கு அமருக்கு (திருத்தணிகை)

Thiruppugal 272 Thakkuamarukku

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தாத்தன தத்தன தானன தானன
தாத்தன தத்தன தானன தானன
தாத்தன தத்தன தானன தானன – தனதான

தாக்கம ருக்கொரு சாரையை வேறொரு
சாக்ஷிய றப்பசி யாறியை நீறிடு
சாஸ்த்ர வழிக்கதி தூரனை வேர்விழு – தவமூழ்குந்

தாற்பர்ய மற்றுழல் பாவியை நாவலர்
போற்பரி வுற்றுனை யேகரு தாதிகல்
சாற்றுத மிழ்க்குரை ஞாளியை நாள்வரை – தடுமாறிப்

போக்கிட மற்றவ்ரு தாவனை ஞானிகள்
போற்றுத லற்றது ரோகியை மாமருள்
பூத்தம லத்ரய பூரியை நேரிய – புலையேனைப்

போக்கிவி டக்கட னோஅடி யாரொடு
போய்ப்பெறு கைக்கிலை யோகதி யானது
போர்ச்சுடர் வஜ்ரவை வேல்மயி லாவருள் – புரிவாயே

மூக்கறை மட்டைம காபல காரணி
சூர்ப்பந கைப்படு மூளியு தாசனி
மூர்க்க குலத்திவி பீஷணர் சோதரி – முழுமோடி

மூத்தவ ரக்கனி ராவண னோடியல்
பேற்றிவி டக்கம லாலய சீதையை
மோட்டன் வளைத்தொரு தேர்மிசை யேகொடு – முகிலேபோய்

மாக்கன சித்திர கோபுர நீள்படை
வீட்டிலி ருத்திய நாளவன் வேரற
மார்க்கமு டித்தவி லாளிகள் நாயகன் – மருகோனே

வாச்சிய மத்தள பேரிகை போல்மறை
வாழ்த்தம லர்க்கழு நீர்தரு நீள்சுனை
வாய்த்ததி ருத்தணி மாமலை மேவிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தாத்தன தத்தன தானன தானன
தாத்தன தத்தன தானன தானன
தாத்தன தத்தன தானன தானன – தனதான

தாக்கு அமருக்கு ஒரு சாரையை வேறொரு
சாக்ஷியற பசி யாறியை நீறிடு
சாஸ்த்ர வழிக்கு அதி தூரனை வேர்விழு – தவமூழ்கும்

தாற்பர்யம் அற்று உழல் பாவியை நாவலர்
போல் பரிவுற்று உனையே கருதாது இகல்
சாற்று தமிழ்க்குரை ஞாளியை நாள்வரை – தடுமாறி

போக்கிடமற்ற வ்ருதாவனை ஞானிகள்
போற்றுதல் அற்ற துரோகியை மாமருள்
பூத்த மலத்ரய பூரியை நேரிய – புலையேனை

போக்கிவி டக் கடனோ கதியானது அடியாரொடு
போய் பெறுகைக்கு இலையோ கதியானது
போர்ச்சுடர் வஜ்ரவை வேல்மயிலா – அருள்புரிவாயே

மூக்கறை மட்டை மகாபல காரணி
சூர்ப்பநகைப் படு மூளி உதாசனி
மூர்க்க குலத்தி விபீஷணர் சோதரி – முழுமோடி

மூத்த அரக்கன் இராவணனோடு இயல்
பேற்றிவிட கமலாலய சீதையை
மோட்டன் வளைத்து ஒரு தேர்மிசையே கொடு – முகிலேபோய்

மாக்கன சித்திர கோபுர நீள்படை
வீட்டில் இருத்திய நாள் அவன் வேரற
மார்க்க முடித்த விலாளிகள் நாயகன் – மருகோனே

வாச்சிய மத்தள பேரிகை போல் மறை
வாழ்த்த மலர்க்கழு நீர்தரு நீள்சுனை
வாய்த்த திருத்தணி மாமலை மேவிய – பெருமாளே.

English

thAkkama rukkoru sAraiyai vER oru
sAkshi aRappasi ARiyai neeR idu
sAsthra vazhikku athi dhUranai vErvizha – thavamUzhgum

thARparya matruzhal pAviyai nAvalar
pORpari vutrunayE karu dhAdhigal
sAtru thamizhkkurai nyALiyai nALvarai – thadumARi

pOkkidam atra vridhAvanai nyAnigaL
pOtrudhal atra dhurOgiyai mA maruL
pUththa malathraya pUriyai nEriya – pulaiyEnai

pOkkividak kadanO adiyArodu
pOy perugaik kilaiyO gathi yAnadhu
pOr sudar vajra vai vEl mayilA aruL – purivAyE

mUkkaRai mattai mahA bala kAraNi
sUrppanagai padu mULi udhAsani
mUrkka kulaththi vibeeshaNar sOdhari – muzhumOdi

mUththa arakkani rAvaNa nOdiyal
pEtrividak kamalAlaya seethaiyai
mOttan vaLaiththoru thErmisaiyE kodu – mugilE pOy

mAggana chiththira gOpura neeL padai
veettil iruththiya nAL avan vEr aRa
mArga mudiththa vilALigaL nAyagan – marugOnE

vAchchiya maththaLa bErigai pOl maRai
vAzhththa malark kazhuneer tharu neeL sunai
vAyththa thiruththaNi mA malai mEviya – perumALE.

English Easy Version

thAkkama rukkoru sAraiyai vER oru
sAkshi aRappasi ARiyai neeR idu
sAsthra vazhikku athi dhUranai vErvizha – thavamUzhgum

thARparya matruzhal pAviyai nAvalar
pORpari vutru unayE karu dhAdhigal
sAtru thamizhkkurai nyALiyai nALvarai – thadumARi

pOkkidam atra vridhAvanai nyAnigaL
pOtrudhal atra dhurOgiyai mA maruL
pUththa malathraya pUriyai nEriya – pulaiyEnai

pOkkividak kadanO adiyArodu
pOy perugaik kilaiyO gathi yAnadhu
pOr sudar vajra vai vEl mayilA aruL – purivAyE

mUkkaRai mattai mahA bala kAraNi
sUrppanagai padu mULi udhAsani
mUrkka kulaththi vibeeshaNar sOdhari – muzhumOdi

mUththa arakkani rAvaNa nOdu iyal
pEtrividak kamalAlaya seethaiyai
mOttan vaLaiththu oru thErmisaiyE kodu – mugilE pOy

mAggana chiththira gOpura neeL padai
veettil iruththiya nAL avan vEr aRa
mArga mudiththa vilALigaL nAyagan – SitAmarugOnE

vAchchiya maththaLa bErigai pOl maRai
vAzhththa malark kazhuneer tharu neeL sunai
vAyththa thiruththaNi mA malai mEviya – perumALE.