திருப்புகழ் 274 துப் பார் அப்பு (திருத்தணிகை)

Thiruppugal 274 Thupparappu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தனனத் – தனதான

துப்பா ரப்பா டற்றீ மொய்க்கால்
சொற்பா வெளிமுக் – குணமோகம்

துற்றா யப்பீ றற்றோ லிட்டே
சுற்றா மதனப் – பிணிதோயும்

இப்பா வக்கா யத்தா சைப்பா
டெற்றே யுலகிற் – பிறவாதே

எத்தார் வித்தா ரத்தே கிட்டா
எட்டா அருளைத் – தரவேணும்

தப்பா மற்பா டிச்சே விப்பார்
தத்தாம் வினையைக் – களைவோனே

தற்கா ழிச்சூர் செற்றாய் மெய்ப்போ
தத்தாய் தணிகைத் – தனிவேலா

அப்பா கைப்பா லைப்போல் சொற்கா
வற்பா வைதனத் – தணைவோனே

அத்தா நித்தா முத்தா சித்தா
அப்பா குமரப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தனனத் – தனதான

துப் பார் அப்பு ஆடல்தீ மொய்க்கால்
சொல் பா வெளி – முக்குணமோகம்

துற்றாய பீறல் தோலிட்டே
சுற்றா மதனப் – பிணிதோயும்

இப் பாவக் காயத்து ஆசைப்பாடு
எற்றே உலகிற் – பிறவாதே

எத்தார் வித்தாரத்தே கிட்டா
எட்டா அருளைத் – தரவேணும்

தப்பாமற் பாடிச் சேவிப்பார்
தத்தாம் வினையைக் – களைவோனே

தற்கு ஆழிச்சூர் செற்றாய் மெய்ப்
போதத்தாய் தணிகைத் – தனிவேலா

அப் பாகைப் பாலைப் போல் சொல்
காவற் பாவை – தனத்தணைவோனே

அத்தா நித்தா முத்தா சித்தா
அப்பா குமரப் – பெருமாளே.

English

thuppA rappAdal thee moykkAl
choRpA veLimuk – guNamOgam

thutrA yappeeRal thO littE
sutrA madhanap – piNi thOyum

ippA vakkA yaththA saippA
detrE ulagkil – piRavAdhE

eththAr viththAr aththE kittA
ettA aruLaith – thara vENum

thappAmaR pAdi sEvippAr
thaththAm vinaiyaik – kaLaivOnE

thaRkA zhichUr setrAy maiy bO
dhaththAy thaNigai – thanivElA

appA gaippAlai pOl soRkA
vaR pAvai thanath – aNaivOnE

aththA niththA muththA chiththA
appA kumarap – perumALE.

English Easy Version

thuppA rappAdal thee moykkAl
choRpA veLi muk – guNamOgam

thutrA ya peeRal thO littE
sutrA madhanap – piNi thOyum

ippA vakkA yathth AsaippA
detrE ulagkil – piRavAdhE

eththAr viththAr aththE kittA
ettA aruLaith – thara vENum

thappAmaR pAdi sEvippAr
thaththAm vinaiyaik – kaLaivOnE

thaRkA zhichUr setrAy maiy bO
dhaththAy thaNigai – thanivElA

appA gaippAlai pOl soRkAvaR
pAvai thanath – aNaivOnE

aththA niththA muththA chiththA
appA kumarap – perumALE.