திருப்புகழ் 276 தொடத்துளக்கிகள் (திருத்தணிகை)

Thiruppugal 276 Thodaththulakkigal

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத்த தத்தன தனதன தனதன
தனத்த தத்தன தனதன தனதன
தனத்த தத்தன தனதன தனதன – தனதான

தொடத்து ளக்கிகள் அபகட நினைவிகள்
குருட்டு மட்டைகள் குமரிகள் கமரிகள்
சுதைச்சி றுக்கிகள் குசலிக ளிசலிகள் – முழுமோசந்

துறுத்த மட்டைகள் அசடிகள் கசடிகள்
முழுப்பு ரட்டிகள் நழுவிகள் மழுவிகள்
துமித்த மித்திரர் விலைமுலை யினவலை – புகுதாமல்

அடைத்த வர்க்கியல் சரசிகள் விரசிகள்
தரித்த வித்ரும நிறமென வரவுட
னழைத்து சக்கிர கிரிவளை படிகொடு – விளையாடி

அவத்தை தத்துவ மழிபட இருளறை
விலக்கு வித்தொரு சுடரொளி பரவந
லருட்பு கட்டியு னடியிணை யருளுவ – தொருநாளே

படைத்த னைத்தையும் வினையுற நடனொடு
துடைத்த பத்தினி மரகத சொருபியொர்
பரத்தி னுச்சியி னடநவி லுமையரு – ளிளையோனே


பகைத்த ரக்கர்கள் யமனுல குறஅமர்
தொடுத்த சக்கிர வளைகர மழகியர்
படிக்க டத்தையும் வயிறடை நெடியவர் – மருகோனே

திடுக்கி டக்கட லசுரர்கள் முறிபட
கொளுத்தி சைக்கிரி பொடிபட சுடரயில்
திருத்தி விட்டொரு நொடியினில் வலம்வரு – மயில்வீரா

தினைப்பு னத்திரு தனகிரி குமரிநல்
குறத்தி முத்தொடு சசிமக ளொடுபுகழ்
திருத்த ணிப்பதி மலைமிசை நிலைபெறு – பெருமாளே.

பதம் பிரித்தது

தனத்த தத்தன தனதன தனதன
தனத்த தத்தன தனதன தனதன
தனத்த தத்தன தனதன தனதன – தனதான

தொடத் துளக்கிகள் அ(ப்)பகட நினைவிகள்
குருட்டு மட்டைகள் குமரிகள் கமரிகள்
சுதைச் சிறுக்கிகள் குசலிகள் இசலிகள் – முழு மோசம்

துறுத்த மட்டைகள் அசடிகள் கசடிகள்
முழுப் புரட்டிகள் நழுவிகள் மழுவிகள்
துமித்த மித்திரர் விலை முலை இன வலை – புகுதாமல்

அடைத்தவர்க்கு இயல் சரசிகள் விரசிகள்
தரித்த வித்ரும நிறம் என வர உடன்
அழைத்து சக்கிர கிரி வளை படி கொடு – விளையாடி

அவத்தை தத்துவம் அழிபட இருளறை
விலக்குவித்து ஒரு சுடர் ஒளி பரவ ந(ல்)ல
அருள் புகட்டி உன் அடி இணை அருளுவது – ஒரு நாளே

படைத்து அனைத்தையும் வினை உற நடனோடு
துடைத்த பத்தினி மரகத சொருபி ஓர்
பரத்தின் உச்சியில் நடம் நவில் உமை அருள் – இளையோனே

பகைத்த அரக்கர்கள் யமன் உலகு உற அமர்
தொடுத்த சக்கிர வளை கரம் அழகியர்
படிக் கடத்தையும் வயிறு அடை நெடியவர் – மருகோனே

கடல் திடுக்கிட அசுரர்கள் முறிபட
கொளுத் திசைக் கிரி பொடிபட சுடர் அயில்
திருத்தி விட்டு ஒரு நொடியினில் வலம் வரு – மயில் வீரா

தினைப் புனத்து இரு தன கிரி குமரி நல்
குறத்தி முத்தொடு சசி மகளொடு புகழ்
திருத்தணிப் பதி மலை மிசை நிலை பெறு(ம்) – பெருமாளே.

English

thodaththu LakkikaL apakada ninaivikaL
kuruttu mattaikaL kumarikaL kamarikaL
suthaicchi RukkikaL kusalika LisalikaL – muzhumOsan

thuRuththa mattaikaL asadikaL kasadikaL
muzhuppu rattikaL nazhuvikaL mazhuvikaL
thumiththa miththirar vilaimulai yinavalai – pukuthAmal

adaiththa varkkiyal sarasikaL virasikaL
thariththa vithruma niRamena varavuda
nazhaiththu sakkira kirivaLai padikodu – viLaiyAdi

avaththai thaththuva mazhipada iruLaRai
vilakku viththoru sudaroLi paravana
larutpu kattiyu nadiyiNai yaruLuva – thorunALE

padaiththa naiththaiyum vinaiyuRa nadanodu
thudaiththa paththini marakatha sorupiyor
paraththi nucchiyi nadanavi lumaiyaru – LiLaiyOnE

pakaiththa rakkarkaL yamanula kuRAmar
thoduththa sakkira vaLaikara mazhakiyar
padikka daththaiyum vayiRadai nediyavar – marukOnE

thidukki dakkada lasurarkaL muRipada
koLuththi saikkiri podipada sudarayil
thiruththi vittoru nodiyinil valamvaru – mayilveerA

thinaippu naththiru thanakiri kumarinal
kuRaththi muththodu sasimaka Lodupukazh
thiruththa Nippathi malaimisai nilaipeRu – perumALE.

English Easy Version

thodath thuLakkikaL a(p)pakada ninaivikaL
kuruttu mattaikaL kumarikaL kamarikaL
suthaic chiRukkikaL kusalikaL isalikaL – muzhu mOsam

thuRuththa mattaikaL asadikaL kasadikaL
muzhup purattikaL nazhuvikaL mazhuvikaL
thumiththa miththirar vilai mulai ina valai – pukuthAmal

adaiththavarkku iyal sarasikaL virasikaL
thariththa vithruma niRam ena vara udan
azhaiththu sakkira kiri vaLai padi kodu – viLaiyAdi

avaththai thaththuvam azhipada iruLaRai
vilakkuviththu oru sudar oLi parava na(l)la
aruL pukatti un adi iNai aruLuvathu – oru nALE

padaiththu anaiththaiyum vinai uRa nadanOdu
thudaiththa paththini marakatha sorupi Or
paraththin ucchiyil nadam navil umai aruL – iLaiyOnE

pakaiththa arakkarkaL yaman ulaku uRa amar
thoduththa sakkira vaLai karam azhakiyar
padik kadaththaiyum vayiRu adai nediyavar – marukOnE

kadal thidukkida asurarkaL muRipada
koLuth thisaik kiri podipada sudar ayil
thiruththi vittu oru nodiyinil valam varu – mayil veerA

thinaip punaththu iru thana kiri kumari nal
kuRaththi muththodu sasi makaLodu pukazh
thiruththaNip pathi malai misai nilai peRu(m) – perumALE.