திருப்புகழ் 277 நிலையாத சமுத்திர (திருத்தணிகை)

Thiruppugal 277 Nilaiyadhasamuththira

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதான தனத்தன தான தனதான தனத்தன தான
தனதான தனத்தன தான – தனதான

நிலையாத சமுத்திர மான சமுசார துறைக்கணின் மூழ்கி
நிசமான தெனப்பல பேசி – யதனூடே

நெடுநாளு முழைப்புள தாகி பெரியோர்க ளிடைக்கர வாகி
நினைவால்நி னடித்தொழில் பேணி – துதியாமல்

தலையான வுடற்பிணி யூறி பவநோயி னலைப்பல வேகி
சலமான பயித்திய மாகி – தடுமாறித்

தவியாமல் பிறப்பையு நாடி யதுவேரை யறுத்துனை யோதி
தலைமீதில் பிழைத்திட வேநி – னருள்தாராய்

கலியாண சுபுத்திர னாக குறமாது தனக்குவி நோத
கவினாரு புயத்திலு லாவி – விளையாடிக்

களிகூரு முனைத்துணை தேடு மடியேனை சுகப்பட வேவை
கடனாகு மிதுக்கன மாகு – முருகோனே

பலகாலு முனைத்தொழு வோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி
படிமீது துதித்துடன் வாழ – அருள்வேளே

பதியான திருத்தணி மேவு சிவலோக மெனப்பரி வேறு
பவரோக வயித்திய நாத – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதான தனத்தன தான தனதான தனத்தன தான
தனதான தனத்தன தான – தனதான

நிலையாத சமுத்திரமான சமுசார துறைக்கணின் மூழ்கி
நிசமானதெனப் பல பேசி – அதனூடே

நெடுநாளும் உழைப்புளதாகி பெரியோர்களிடைக் கரவாகி
நினைவால்நி னடித்தொழில் பேணி – துதியாமல்

தலையான வுடற்பிணி யூறி பவநோயின் அலைப்பல வேகி
சலமான பயித்திய மாகி தடுமாறித் – தவியாமல்

பிறப்பையு நாடி யதுவேரை யறுத்து உனையோதி
தலைமீதில் பிழைத்திடவே – நினருள்தாராய்

கலியாண சுபுத்திரனாக குறமாது தனக்கு விநோத
கவினாரு புயத்தில் உலாவி – விளையாடி

களிகூரும் உனைத்துணை தேடும் அடியேனை சுகப்பட வேவை
கடனாகும் இதுக்கன மாகு – முருகோனே

பலகாலும் உனைத்தொழுவோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி
படிமீது துதித்து உடன் வாழ – அருள்வேளே

சிவலோக மெனப்பரி வேறு பதியான திருத்தணி மேவு
பவரோக வயித்திய நாத – பெருமாளே.

English

nilaiyAdha samudhdhiramAna samusAra thuRaikkaNin mUzhgi
nijamAna dhenap pala pEsi – adhanUdE

nedu nALum uzhaippuLa dhAgi periyOrgaL idaik karavAgi
ninaivAl nin adith thozhil pENi – thudhiyAmal

thalaiyAna udaR piNi URi bava nOyin alaip palavEgi
chalamAna payiththiyam Agi – thadumARi

thaviyAmal piRappaiyu nAdi adhu vErai aRuththunai Odhi
thalameedhil pizhaiththidavE nin – aruL thArAy

kaliyANa supuththiran Aga kuRamAdhu thanakku vinOdha
kavin Aru buyaththil ulAvi – viLaiyAdi

kaLi kUrum unaith thuNai thEdum adiyEnai sukappada vEvai
kadan Agum idhuk ganamAgu – murugOnE

palakAlum unaith thozhuvOrgaL maRavAmal thiruppugazh kURi
padimeedhu thudhith thudan vAzha – aruLvELE

padhiyAna thiruththaNi mEvu sivalOkam enappari vERu
bavarOga vayidhdhiya nAtha – perumALE.

English Easy Version

nilaiyAdha samudhdhiramAna samusAra thuRaikkaNin mUzhgi
nijamAna dhenap pala pEsi – adhanUdE

nedu nALum uzhaippuLa dhAgi periyOrgaL idaik karavAgi
ninaivAl nin adith thozhil pENi – thudhiyAmal

thalaiyAna udaR piNi Uri bava nOyin alaip palavEgi
chalamAna payiththiyam Agi – thadumARi

thaviyAmal piRappaiyu nAdi adhu vErai aRuththu unai Odhi
thalameedhil pizhaiththidavE nin – aruL thArAy

kaliyANa supuththiran Aga kuRamAdhu thanakku vinOdha
kavin Aru buyaththil ulAvi – viLaiyAdi

kaLi kUrum unaith thuNai thEdum adiyEnai sukappada vEvai
kadan Agum idhuk ganamAgu – murugOnE

palakAlum unaith thozhuvOrgaL maRavAmal thiruppugazh
kURi padimeedhu thudhith thudan vAzha – aruLvELE


padhiyAna thiruththaNi mEvu sivalOkam enappari vERu
bavarOga vayidhdhiya nAtha – perumALE.