திருப்புகழ் 278 நினைத்தது எத்தனை (திருத்தணிகை)

Thiruppugal 278 Ninaiththadhueththanai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத்த தத்ததனத் – தனதான
தனத்த தத்ததனத் – தனதான

நினைத்த தெத்தனையிற் – றவறாமல்
நிலைத்த புத்திதனைப் – பிரியாமற்

கனத்த தத்துவமுற் – றழியாமற்
கதித்த நித்தியசித் – தருள்வாயே

மனித்தர் பத்தர்தமக் – கெளியோனே
மதித்த முத்தமிழிற் – பெரியோனே

செனித்த புத்திரரிற் – சிறியோனே
திருத்த ணிப்பதியிற் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனத்த தத்ததனத் – தனதான
தனத்த தத்ததனத் – தனதான

நினைத்தது எத்தனையில் – தவறாமல்
நிலைத்த புத்திதனைப் – பிரியாமல்

கனத்த தத்துவம் – உற்றழியாமல்
கதித்த நித்தியசித் – தருள்வாயே

மனித்தர் பத்தர்தமக்கு – எளியோனே
மதித்த முத்தமிழில் – பெரியோனே

செனித்த புத்திரரிற் – சிறியோனே
திருத்தணிப்பதியிற் – பெருமாளே.

English

ninaiththa dheththanaiyil – thavaRAmal
nilaiththa budhdhi thanaip – piriyAmal

ganaththa thaththuvamutr – azhiyAmal
gadhiththa niththiya chith – aruLvAyE

maniththa baththar thamak – keLiyOnE
madhiththa muththamizhil – periyOnE

jeniththa puththiraril – siRiyOnE
thiruththaNip padhiyil – perumALE.

English Easy Version

ninaiththa dheththanaiyil – thavaRAmal
nilaiththa budhdhi thanaip – piriyAmal

ganaththa thaththuvamutr – azhiyAmal
gadhiththa niththiya chith – aruLvAyE

maniththa baththar thamak – keLiyOnE
madhiththa muththamizhil – periyOnE

jeniththa puththiraril – siRiyOnE
thiruththaNip padhiyil – perumALE.