Thiruppugal 281 Pazhamaiseppiya
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனன தத்தன தத்தன தத்தன
தனன தத்தன தத்தன தத்தன
தனன தத்தன தத்தன தத்தன – தனதான
பழமை செப்பிய ழைத்தித மித்துடன்
முறைம சக்கிய ணைத்துந கக்குறி
படஅ ழுத்திமு கத்தைமு கத்துற – வுறவாடிப்
பதறி யெச்சிலை யிட்டும ருத்திடு
விரவு குத்திர வித்தைவி ளைப்பவர்
பலவி தத்திலு மற்பரெ னச்சொலு – மடமாதர்
அழிதொ ழிற்குவி ருப்பொடு நத்திய
அசட னைப்பழி யுற்றஅ வத்தனை
அடைவு கெட்டபு ரட்டனை முட்டனை – அடியேனை
அகில சத்தியு மெட்டுறு சித்தியு
மெளிதெ னப்பெரு வெட்டவெ ளிப்படு
மருண பொற்பத முற்றிட வைப்பது – மொருநாளே
குழிவி ழிப்பெரு நெட்டல கைத்திரள்
கரண மிட்டுந டித்தமி தப்படு
குலிலி யிட்டக ளத்திலெ திர்த்திடு – மொருசூரன்
குருதி கக்கிய திர்த்துவி ழப்பொரு
நிசிச ரப்படை பொட்டெழ விக்ரம
குலிச சத்தியை விட்டருள் கெர்ச்சித – மயில்வீரா
தழையு டுத்தகு றத்திப தத்துணை
வருடி வட்டமு கத்தில தக்குறி
தடவி வெற்றிக தித்தமு லைக்குவ – டதன்மீதே
தரள பொற்பணி கச்சுவி சித்திரு
குழைதி ருத்திய ருத்திமி குத்திடு
தணிம லைச்சிக ரத்திடை யுற்றருள் – பெருமாளே.
பதம் பிரித்தது
தனன தத்தன தத்தன தத்தன
தனன தத்தன தத்தன தத்தன
தனன தத்தன தத்தன தத்தன – தனதான
பழமை செப்பி அழைத்து இத மித்துடன்
முறை மசக்கி அணைத்து நகக் குறி
பட அழுத்தி முகத்தை முகத்து – உறவாடிபதறி
எச்சிலை இட்டு மருத்து இடு
விரவு குத்திர வித்தை விளைப்பவர்
பல விதத்திலும் அற்பர் எனச் சொல்லும் – மட மாதர்
அழி தொழிற்கு விருப்பொடு நத்திய
அசடனைப் பழி உற்ற அவத்தனை
அடைவு கெட்ட புரட்டனை முட்டனை – அடியேனை
அகில சத்தியும் எட்டுறு சித்தியும்
எளிது எனப் பெரு வெட்டவெளிப்படும்
அருண பொன் பதம் உற்றிட வைப்பதும் – ஒரு நாளே
குழி விழிப் பெரு நெட்டு அலகைத் திரள்
கரணம் இட்டு நடித்து அமிதப்படு
குலிலி இட்ட களத்தில் எதிர்த்திடும் – ஒரு சூரன்
குருதி கக்கி அதிர்த்து விழப் பொரு
நிசிசரப் படை பொட்டு எழ விக்ரம
குலிச சத்தியை விட்டு அருள் கெர்ச்சித – மயில் வீரா
தழை உடுத்த குறத்தி பதத் துணை
வருடி வட்ட முக(த்து) திலதக் குறி
தடவி வெற்றி கதித்த முலைக் குவடு – அதன் மீதே
தரள பொன் பணி கச்சு விசித்து இரு
குழை திருத்தி அருத்தி மிகுத்திடு
தணி மலைச் சிகரத்திடை உற்று அருள் – பெருமாளே.
English
pazhamai seppiya zhaiththitha miththudan
muRaima sakkiya Naiththuna kakkuRi
padaa zhuththimu kaththaimu kaththuRa – vuRavAdip
pathaRi yecchilai yittuma ruththidu
viravu kuththira viththaivi Laippavar
palavi thaththilu maRpare naccholu – madamAthar
azhitho zhiRkuvi ruppodu naththiya
asada naippazhi yutRaa vaththanai
adaivu kettapu rattanai muttanai – adiyEnai
akila saththiyu mettuRu siththiyu
meLithe napperu vettave Lippadu
maruNa poRpatha mutRida vaippathu – morunALE
kuzhivi zhipperu nettala kaiththiraL
karaNa mittuna diththami thappadu
kulili yittaka Laththile thirththidu – morucUran
kuruthi kakkiya thirththuvi zhapporu
nisisa rappadai pottezha vikrama
kulisa saththiyai vittaruL kercchitha – mayilveerA
thazhaiyu duththaku Raththipa thaththuNai
varudi vattamu kaththila thakkuRi
thadavi vetRika thiththamu laikkuva – dathanmeethE
tharaLa poRpaNi kacchuvi siththiru
kuzhaithi ruththiya ruththimi kuththidu
thaNima laicchika raththidai yutRaruL – perumALE.
English Easy Version
pazhamai seppi azhaiththu itha miththudan
muRai masakki aNaiththu nakak kuRi
pada azhuththi mukaththai mukaththu – uRavAdi
pathaRi ecchilai ittu maruththu idu
viravu kuththira viththai viLaippavar
pala vithaththilum aRpar enac chollum – mada mAthar
azhi thozhiRku viruppodu naththiya
asadanaip pazhi utRa avaththanai
adaivu ketta purattanai muttanai – adiyEnai
akila saththiyum ettuRu siththiyum
eLithu enap peru vettaveLippadum
aruNa pon patham utRida vaippathum – oru Nale
kuzhi vizhip peru nettu alakaith thiraL
karaNam ittu nadiththu amithappadu
kulili itta kaLaththil ethirththidum – oru cUran
kuruthi kakki athirththu vizhap poru
nisisarap padai pottu ezha vikrama
kulisa saththiyai vittu aruL kercchitha – mayil veerA
thazhai uduththa kuRaththi pathath thuNai
varudi vatta muka(ththu) thilathak kuRi
thadavi vetRi kathiththa mulaik kuvadu – athan meethE
tharaLa pon paNi kacchu visiththu iru
kuzhai thiruththi aruththi mikuththidu
thaNi malais sikaraththidai utRu aruL – perumALE.