திருப்புகழ் 282 புருவ நெறித்து (திருத்தணிகை)

Thiruppugal 282 Puruvaneriththu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தத்தத் தனதன தத்தத்
தனதன தத்தத் – தனதான

புருவநெ றித்துக் குறுவெயர் வுற்றுப்
புளகித வட்டத் – தனமானார்

பொருவிழி யிற்பட் டவரொடு கட்டிப்
புரளும சட்டுப் – புலையேனைக்

கருவிழி யுற்றுக் குருமொழி யற்றுக்
கதிதனை விட்டிட் – டிடுதீயக்

கயவனை வெற்றிப் புகழ்திகழ் பத்மக்
கழல்கள்து திக்கக் – கருதாதோ

செருவசு ரப்பொய்க் குலமது கெட்டுத்
திரைகட லுட்கப் – பொரும்வேலா

தினைவன முற்றுக் குறவர் மடப்பைக்
கொடிதன வெற்பைப் – புணர்மார்பா

பெருகிய நித்தச் சிறுபறை கொட்டிப்
பெரிகைமு ழக்கப் – புவிமீதே

ப்ரபலமுள் சுத்தத் தணிமலை யுற்றுப்
ப்ரியமிகு சொக்கப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதன தத்தத் தனதன தத்தத்
தனதன தத்தத் – தனதான

புருவம் நெறித்துக் குறு வெயர்வு உற்றுப்
புளகித வட்டத் – தன மானார்

பொரு விழியில் பட்டவரொடு கட்டிப்
புரளும் அசட்டுப் – புலையேனை

கரு வழி உற்றுக் குரு மொழி அற்றுக்
கதி தனை விட்டிட்டிடு – தீயக்

கயவனை வெற்றிப் புகழ் திகழ் பத்மக்
கழல்கள் துதிக்கக் – கருதாதோ

செரு(ம்) அசுரப் பொய்க் குலம் அது கெட்டுத்
திரை கடல் உட்கப் – பொரும் வேலா

தினை வனம் உற்றுக் குறவர் மடப் பைங்
கொடி தன வெற்பைப் – புணர் மார்பா

பெருகிய நித்தச் சிறு பறை கொட்டிப்
பெரிகை முழக்கப் – புவி மீதே

ப்ரபலம் உள் சுத்தத் தணி மலை உற்று
ப்ரியம் மிகு சொக்கப் – பெருமாளே.

English

puruvane Riththuk kuRuveyar vutRup
puLakitha vattath – thanamAnAr

poruvizhi yiRpat tavarodu kattip
puraLuma sattup – pulaiyEnaik

karuvizhi yutRuk kurumozhi yatRuk
kathithanai vittit – tidutheeyak

kayavanai vetRip pukazhthikazh pathmak
kazhalkaLthu thikkak – karuthAthO

seruvasu rappoyk kulamathu kettuth
thiraikada lutkap – porumvElA

thinaivana mutRuk kuRavar madappaik
kodithana veRpaip – puNarmArpA

perukiya niththac chiRupaRai kottip
perikaimu zhakkap – puvimeethE

prapalamuL suththath thaNimalai yutRup
priyamiku sokkap – perumALE.

English Easy Version

puruvam neRiththuk kuRu veyarvu utRup
puLakitha vattath – thana mAnAr

poru vizhiyil pattavarodu kattip
puraLum asattup – pulaiyEnai

karu vazhi utRuk kuru mozhi atRuk
kathi thanai vittittidu – theeyak

kayavanai vetRip pukazh thikazh pathmak
kazhalkaL thuthikkak – karuthAthO

seru(m) asurap poyk kulam athu kettuth
thirai kadal utkap – porum vElA

thinai vanam utRuk kuRavar madap
paingodi thana veRpaip – puNar mArpA

perukiya niththac chiRu paRai kottip
perikai muzhakkap – puvi meethE

prapalam uL suththath thaNi malai utRu
priyam miku sokkap – perumALE.