Thiruppugal 284 Perukkaubayam
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனத்தன தானம் தனத்தன தானம்
தனத்தன தானம் – தனதான
பெருக்கவு பாயங் கருத்துடை யோர்தம்
ப்ரபுத்தன பாரங் – களிலேசம்
ப்ரமத்துட னாளும் ப்ரமித்திருள் கூரும்
ப்ரியக்கட லூடுந் – தணியாத
கருக்கட லூடுங் கதற்றும நேகங்
கலைக்கட லூடுஞ் – சுழலாதே
கடப்பலர் சேர்கிண் கிணிப்ரபை வீசும்
கழற்புணை நீதந் – தருள்வாயே
தருக்கிய வேதன் சிறைப்பட நாளுஞ்
சதுர்த்தச லோகங் – களும்வாழச்
சமுத்திர மேழுங் குலக்கிரி யேழுஞ்
சளப்பட மாவுந் – தனிவீழத்
திருக்கையில் வேலொன் றெடுத்தம ராடுஞ்
செருக்கு மயூரந் – தனில்வாழ்வே
சிறப்பொடு ஞானந் தமிழ்த்ரய நீடுந்
திருத்தணி மேவும் – பெருமாளே.
பதம் பிரித்தது
தனத்தன தானம் தனத்தன தானம்
தனத்தன தானம் – தனதான
பெருக்க உபாயம் கருத்து உடையோர் தம்
ப்ரபுத் தன பாரங்களிலே – சம்
ப்ரமத்துட(ன்) நாளும் ப்ரமித்து இருள் கூரும்
ப்ரியக் கடல் ஊடும் – தணியாத
கருக்கடல் ஊடும் கதற்றும் அநேகம்
கலைக் கடல் ஊடும் – சுழலாதே
கடப்பு அலர் சேர் கிண்கிணி ப்ரபை வீசும்
கழல் புணை நீ தந்து – அருள்வாயே
தருக்கிய வேதன் சிறைப் பட நாளும்
சதுர்த் தச லோகங் – களும் வாழச்
சமுத்திரம் ஏழும் குலக் கிரி ஏழும்
சளப்பட மாவும் – தனி வீழ
திருக் கையில் வேல் ஒன்று எடுத்து அமர் ஆடும்
செருக்கு மயூரம் – தனில் வாழ்வே
சிறப்பொடு ஞானத் தமிழ் த்ரய(ம்) நீடும்
திருத்தணி மேவும் – பெருமாளே.
English
perukkavu pAyang karuththudai yOrtham
prapuththana pArang – kaLilEsam
pramaththuda nALum pramiththiruL kUrum
priyakkada lUdun – thaNiyAtha
karukkada lUdung kathatRuma nEkam
kalaikkada lUdum – chuzhalAthE
kadappalar sErkiN kiNiprapai veesum
kazhaRpuNai neethan – tharuLvAyE
tharukkiya vEthan siRaippada nALum
sathurththasa lOkang – kaLumvAzha
samuththira mEzhung kulakkiri yEzhunj
chaLappada mAvun – thaniveezhath
thirukkaiyil vElon Reduththama rAdum
cherukku mayUran – thanilvAzhvE
siRappodu njAnan thamizhthraya needun
thiruththaNi mEvum – perumALE.
English Easy Version
perukka upAyam karuththu udaiyOr tham
praputh thana – pArangaLilE sam
pramaththuda(n) nALum pramiththu iruL kUrum
priyak kadal Udum – thaNiyAtha
karukkadal Udum kathatRum anEkam
kalaik kadal Udum – suzhalAthE
kadappu alar sEr kiNkiNi prapai veesum
kazhal puNai nee thanthu – aruLvAyE
tharukkiya vEthan siRaip pada nALum
sathurth thasa – lOkangaLum
vAzhac chamuththiram Ezhum kulak kiri Ezhum
chaLappada mAvum – thani veezha
thiruk kaiyil vEl onRu eduththu amar Adum
serukku mayUram – thanil vAzhvE
siRappodu njAnath thamizh thraya(m) needum
thiruththaNi mEvum – perumALE.