Thiruppugal 286 Poruvikkandhodu
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனனத் தந்ததனத் தனனத் தந்ததனத்
தனனத் தந்ததனத் – தனதான
பொருவிக் கந்தொடடர்ச் செருவிக் கன்றொடுமிப்
புதுமைப் புண்டரிகக் – கணையாலே
புளகக் கொங்கையிடத் திளகக் கொங்கையனற்
பொழியத் தென்றல்துரக் – குதலாலே
தெருவிற் பெண்கள்மிகக் கறுவிச் சண்டையிடத்
திரியத் திங்களுதிப் – பதனாலே
செயலற் றிங்கணையிற் றுயிலற் றஞ்சியயர்த்
தெரிவைக் குன்குரவைத் – தரவேணும்
அருவிக் குன்றடையப் பரவிச் செந்தினைவித்
தருமைக் குன்றவருக் – கெளியோனே
அசுரர்க் கங்கயல்பட் டமரர்க் கண்டமளித்
தயில்கைக் கொண்டதிறற் – குமரேசா
தருவைக் கும்பதியிற் றிருவைச் சென்றணுகித்
தழுவிக் கொண்டபுயத் – திருமார்பா
தரளச் சங்குவயற் றிரளிற் றங்குதிருத்
தணிகைச் செங்கழநிப் – பெருமாளே.
பதம் பிரித்தது
தனனத் தந்ததனத் தனனத் தந்ததனத்
தனனத் தந்ததனத் – தனதான
பொரு விக் கந்தொடு அடர்ச் செரு இக்கன் தொடும் இப்
புதுமைப் புண்டரிகக் – கணையாலே
புளகக் கொங்கை இடத்து இளகக் கொங்கை அனல்
பொழியத் தென்றல் – துரக்குதலாலே
தெருவில் பெண்கள் மிகக் கறுவிச் சண்டை இடத்
திரியத் திங்கள் – உதிப்பதனாலே
செயல் அற்று இங்கு அணையில் துயில் அற்று அஞ்சி அயர்த்(த)
தெரிவைக்கு உன் குரவைத் – தர வேணும்
அருவிக் குன்று அடையப் பரவிச் செம் தினைவித்த
அருமைக் குன்றவருக்கு – எளியோனே
அசுரர்க்கு அங்கு அயல் பட்டு அமரர்க்கு அண்டம் அளித்து
அயில் கைக் கொண்ட திறல் – குமரேசா
தரு வைக்கும் பதியில் திருவைச் சென்று அணுகித்
தழுவிக் கொண்ட புயத் – திரு மார்பா
தரளச் சங்கு வயல் திரளில் தங்கு திருத்
தணிகைச் செம் கழநிப் – பெருமாளே.
English
poruvik kanthodadarc cheruvik kanRodumip
puthumaip puNdarikak – kaNaiyAlE
puLakak kongaiyidath thiLakak kongaiyanaR
pozhiyath thenRalthurak – kuthalAlE
theruviR peNkaLmikak kaRuvic chaNdaiyidath
thiriyath thingaLuthip – pathanAlE
seyalat RingaNaiyit Ruyilat Ranjiyayarth
therivaik kunkuravaith – tharavENum
aruvik kunRadaiyap paravic chenthinaivith
tharumaik kunRavaruk – keLiyOnE
asurark kangayalpat tamarark kaNdamaLith
thayilkaik koNdathiRaR – kumarEsA
tharuvaik kumpathiyit Riruvaic chenRaNukith
thazhuvik koNdapuyath – thirumArpA
tharaLac changuvayat RiraLit Ranguthiruth
thaNikaic chengazhanip – perumALE.
English Easy Version
poru vik kanthodu adarc cheru ikkan thodum ip
puthumaip puNdarikak – kaNaiyAlE
puLakak kongai idaththu iLakak kongai anal
pozhiyath thenRal thurak – kuthalAlE
theruvil peNkaL mikak kaRuvic chaNdai idath
thiriyath thingaL uthipp – athanAlE
seyal atRu ingu aNaiyil thuyil atRu anji ayarth(tha)
therivaikku un kuravaith – thara vENum
aruvik kunRu adaiyap paravic chem thinaiviththa
arumaik kunRavarukku – eLiyOnE
asurarkku angu ayal pattu amararkku aNdam aLiththu
ayil kaik koNda thiRal – kumarEsA
tharu vaikkum pathiyil thiruvaic chenRu aNukith
thazhuvik koNda puyath – thiru mArpA
tharaLac changu vayal thiraLil thangu thiruth
thaNigaic chem kazhanip – perumALE.