திருப்புகழ் 287 பொற்குடம் ஒத்த (திருத்தணிகை)

Thiruppugal 287 Portkudamoththa

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்தன தத்தன தத்தன தத்தன
தத்தன தத்தன – தானா

பொற்குட மொத்தகு யத்தைய சைப்பவர்
கைப்பொருள் புக்கிட – வேதான்

புட்குரல் விச்சைபி தற்றுமொ ழிச்சியர்
பொட்டணி நெற்றிய – ரானோர்

அற்பவி டைக்கலை சுற்றிநெ கிழ்ப்பவர்
அற்பர மட்டைகள் – பால்சென்

றக்கண்வ லைக்குள கப்படு புத்தியை
அற்றிட வைத்தருள் – வாயே

கொக்கரை சச்சரி மத்தளி யொத்துவி
டக்கைமு ழக்கொலி – யாலக்

கொக்கிற கக்கர மத்தம ணிக்கருள்
குத்தத ணிக்கும – ரேசா

சர்க்கரை முப்பழ மொத்தமொ ழிச்சிகு
றத்தித னக்கிரி – மேலே

தைக்கும னத்தச மர்த்தஅ ரக்கர்த
லைக்குலை கொத்திய – வேளே.

பதம் பிரித்தது

தத்தன தத்தன தத்தன தத்தன
தத்தன தத்தன – தானா

பொன் குடம் ஒத்த குயத்தை அசைப்பவர்
கைப் பொருள் – புக்கிடவே தான்

புள் குரல் விச்சை பிதற்றும் மொழிச்சியர்
பொட்டு அணி நெற்றியர் – ஆனோர்

அற்ப இடைக்கலை சுற்றி நெகிழ்ப்பவர்
அற்பர் அ(ம்) மட்டைகள் – பால் சென்று

அக் கண் வலைக்குள் அகப்படு புத்தியை
அற்றிட வைத்து – அருள்வாயே

கொக்கரை சச்சரி மத்தளி ஒத்து
இடக்கை முழக்கு – ஒலி ஆல

கொக்கு இறகு அக்கு அர மத்தம் அணிக்கு
அருள் குத்த(ம்) தணிக் – குமரேசா

சர்க்கரை முப்பழம் ஒத்த மொழிச்சி
குறத்தி தனக் – கிரி மேலே

தைக்கும் மனத்த சமர்த்த அரக்கர்
தலைக் குலை – கொத்திய வேளே.

English

poRkuda moththaku yaththaiya saippavar
kaipporuL pukkida – vEthAn

putkural vicchaipi thatRumo zhicchiyar
pottaNi netRiya – rAnOr

aRpavi daikkalai sutRine kizhppavar
aRpara mattaikaL – pAlsen

RakkaNva laikkuLa kappadu puththiyai
atRida vaiththaruL – vAyE

kokkarai sacchari maththaLi yoththuvi
dakkaimu zhakkoli – yAlak

kokkiRa kakkara maththama NikkaruL
kuththatha Nikkuma – rEsA

sarkkarai muppazha moththamo zhicchiku
Raththitha nakkiri – mElE

thaikkuma naththasa marththA rakkartha
laikkulai koththiya – vELE.

English Easy Version

pon kudam oththa kuyaththai asaippavar
kaip poruL pukkidavE – thAn

puL kural vicchai pithatRum mozhicchiyar
pottu aNi netRiyar – AnOr

aRpa idaikkalai sutRi nekizhppavar
aRpar a(m) mattaikaL – pAl senRu

ak kaN valaikkuL akappadu puththiyai
atRida vaiththu – aruLvAyE

kokkarai sacchari maththaLi oththu
idakkai muzhakku – oli Ala

kokku iRaku akku ara maththam aNikku aruL
kuththa(m) thaNik – kumarEsA

sarkkarai muppazham oththa mozhicchi
kuRaththi thanak – kiri mElE

thaikkum manaththa samarththa arakkar
thalaik kulai – koththiya vELE.