திருப்புகழ் 288 பொற் பதத்தினை (திருத்தணிகை)

Thiruppugal 288 Porpadhaththinai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்த தத்த தத்த தத்த தத்த தத்த தத்த தத்த
தத்த தத்த தத்த தத்த – தனதான

பொற்ப தத்தி னைத்து தித்து நற்ப தத்தி லுற்ற பத்தர்
பொற்பு ரைத்து நெக்கு ருக்க – அறியாதே

புத்த கப்பி தற்றை விட்டு வித்த கத்து னைத்து திக்க
புத்தி யிற்க லக்க மற்று – நினையாதே

முற்ப டத்த லத்து தித்து பிற்ப டைத்த கிர்த்ய முற்றி
முற்க டைத்த வித்து நித்த – முழல்வேனை

முட்ட விக்க டைப்பி றப்பி னுட்கி டப்ப தைத்த விர்த்து
முத்தி சற்றெ னக்க ளிப்ப – தொருநாளே

வெற்ப ளித்த தற்ப ரைக்கி டப்பு றத்தை யுற்ற ளித்த
வித்த கத்தர் பெற்ற கொற்ற – மயில்வீரா

வித்தை தத்வ முத்த மிழ்ச்சொ லத்த சத்தம் வித்த ரிக்கு
மெய்த்தி ருத்த ணிப்பொ ருப்பி – லுறைவோனே

கற்ப கப்பு னக்கு றத்தி கச்ச டர்த்த சித்ர முற்ற
கற்பு ரத்தி ருத்த னத்தி – லணைவோனே

கைத்த ரக்கர் கொத்து கச்சி னத்து வஜ்ர னுக்க மைத்த
கைத்தொ ழுத்த றித்து விட்ட – பெருமாளே.

பதம் பிரித்தது

தத்த தத்த தத்த தத்த தத்த தத்த தத்த தத்த
தத்த தத்த தத்த தத்த – தனதான

பொற்பதத்தி னைத் துதித்து நற்பதத்திலுற்ற பத்தர்
பொற்பு உரைத்து நெக்கு உருக்க – அறியாதே

புத்தகப் பிதற்றை விட்டு வித்தகத்து உனைத்துதிக்க
புத்தியிற்கலக்க மற்று – நினையாதே

முற்படத்தலத்துதித்து பிற்படைத்த கிர்த்ய முற்றி
முற்கடைத் தவித்து நித்தம் – உழல்வேனை

முட்ட இக் கடைப்பிறப்பி னுட் கிடப்பதைத் தவிர்த்து
முத்தி சற்று எனக்களிப்பது – ஒருநாளே

வெற்பளித்த தற்பரைக்கு இடப்புறத்தை யுற்றளித்த
வித்தக அத்தர் பெற்ற கொற்ற – மயில்வீரா

வித்தை தத்வ முத்தமிழ்ச்சொல் அத்த சத்தம் வித்தரிக்கு
மெய்த்திருத்தணிப்பொருப்பில் – உறைவோனே

கற்பகப்புனக்குறத்தி கச்சடர்த்த சித்ர முற்ற
கற்புரத்திருத்தனத்தில் – அணைவோனே

கைத்து அரக்கர் கொத்து கச்சினத்து வஜ்ரனுக்கு அமைத்த
கைத்தொ ழுத்த றித்து விட்ட – பெருமாளே.

English

poRpadhaththinai thudhiththu naRpadhaththil utrabakthar
poRpu raiththu nekku rukka – aRiyAdhE

puththagap pidhatrai vittu viththa gatthunaith thudhikka
budhdhiyiR kalakka matru – ninaiyAdhE

muRpadath thalath udhiththu piRpa daiththa kirthyamutri
muRka daith thaviththu niththa – muzhalvEnai

muttavik kadaippiRappin utkidappa dhaith thavirththu
muththi satre nakka Lippa – dhoru nALE

veRpa Liththa thaRpa raikki dappu Raththai utraLiththa
viththa gaththar petra kotra – mayil veerA

viththai thathva muththamizhsol aththa saththam viththarikku
meyth thiruththaNip poruppil – uRaivOnE

kaRpagap punak kuRaththi kachcha darththa chithram
utra kaRpurath thiruth thanaththil – aNaivOnE

kaiththarakkar koththu gachchinaththu vajranuk amaiththa
kaiththo zhuththa Riththu vitta – perumALE.

English Easy Version

poRpadhaththinai thudhiththu naRpadhaththil utrabakthar
poRpu raiththu nekku rukka – aRiyAdhE

puththagap pidhatrai vittu viththa gatthunaith thudhikka
budhdhiyiR kalakka matru – ninaiyAdhE

muRpadath thalath udhiththu piRpa daiththa kirthyamutri
muRka daith thaviththu niththa – muzhalvEnai

muttavik kadaippiRappin utkidappa dhaith thavirththu
muththi satre nakka Lippa – dhoru nALE

veRpa Liththa thaRpa raikki dappu Raththai utraLiththa
viththa gaththar petra kotra – mayil veerA

viththai thathva muththamizhsol aththa saththam viththarikku
meyth thiruththaNip poruppil – uRaivOnE

kaRpagap punak kuRaththi kachcha darththa chithramutra
kaRpurath thiruth thanaththil – aNaivOnE

kaiththarakkar koththu gachchinaththu vajranuk amaiththa
kaiththozhuth thaRiththu vitta – perumALE.