திருப்புகழ் 289 மருக்குல மேவும் (திருத்தணிகை)

Thiruppugal 289 Marukkulamevum

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத்தன தானம் தனத்தன தானம்
தனத்தன தானம் – தனதான

மருக்குல மேவுங் குழற்கனி வாய்வெண்
மதிப்பிள வாகும் – நுதலார்தம்

மயக்கினி லேநண் புறப்படு வேனுன்
மலர்க்கழல் பாடுந் – திறநாடாத்

தருக்கனு தாரந் துணுக்கிலி லோபன்
சமத்தறி யாவன் – பிலிமூகன்

தலத்தினி லேவந் துறப்பணி யாதன்
தனக்கினி யார்தஞ் – சபைதாராய்

குருக்குல ராஜன் தனக்கொரு தூதன்
குறட்பெல மாயன் – நவநீதங்

குறித்தயில் நேயன் திருப்பயில் மார்பன்
குணத்ரய நாதன் – மருகோனே

திருக்குள நாளும் பலத்திசை மூசும்
சிறப்பது றாஎண் – டிசையோடும்

திரைக்கடல் சூழும் புவிக்குயி ராகுந்
திருத்தணி மேவும் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனத்தன தானம் தனத்தன தானம்
தனத்தன தானம் – தனதான

மருக் குல(ம்) மேவும் குழல் கனி வாய் வெண்
மதிப் பிளவு ஆகும் – நுதலார் தம்

மயக்கினிலே நண்பு உறப் படுவேன் உன்
மலர்க் கழல் பாடும் – திற(ன்) நாடாத்

தருக்கன் உதாரம் துணுக்கு இலி லோபன்
சமத்து அறியா அன்பு – இலி மூகன்

தலத்தினிலே வந்து உறப் பணியாத(வ)ன்
தனக்கு இனியார் தம் – சபை தாராய்

குருக் குல ராஜன் தனக்கு ஒரு தூதன்
குறள் பெல மாயன் – நவ நீதம்

குறித்து அயில் நேயன் திருப் பயில் மார்பன்
குண த்ரய நாதன் – மருகோனே

திருக் குள(ம்) நாளும் பலத் திசை மூசும்
சிறப்பு அது உறா எண் – திசையோடும்

திரைக் கடல் சூழும் புவிக்கு உயிராகும்
திருத்தணி மேவும் – பெருமாளே.

English

marukkula mEvum kuzhaRkani vAyveN
mathippiLa vAkum – nuthalArtham

mayakkini lEnaN puRappadu vEnun
malarkkazhal pAdun – thiRanAdAth

tharukkanu thAran thuNukkili lOpan
samaththaRi yAvan – pilimUkan

thalaththini lEvan thuRappaNi yAthan
thanakkini yArtham – sapaithArAy

kurukkula rAjan thanakkoru thUthan
kuRatpela mAyan – navaneetham

kuRiththayil nEyan thiruppayil mArpan
kuNathraya nAthan – marukOnE

thirukkuLa nALum palaththisai mUsum
siRappathu RAeN – disaiyOdum

thiraikkadal sUzhum puvikkuyi rAkum
thiruththaNi mEvum – perumALE.

English Easy Version

maruk kula(m) mEvum kuzhal kani vAy veN
mathip piLavu Akum – nuthalAr tham

mayakkinilE naNpu uRap paduvEn un
malark kazhal pAdum – thiRa(n) nAdAth

tharukkan uthAram thuNukku ili lOpan
samaththu aRiyA anpu – ili mUkan

thalaththinilE vanthu uRap paNiyAtha(va)n
thanakku iniyAr tham – sapai thArAy

kuruk kula rAjan thanakku oru thUthan
kuRaL pela mAyan – nava neetham

kuRiththu ayil nEyan thirup payil mArpan
kuNa thraya nAthan – marukOnE

thiruk kuLa(m) nALum palath thisai mUsum
siRappu athu uRA eN – thisaiyOdum

thiraik kadal sUzhum puvikku uyirAkum
thiruththaNi mEvum – perumALE.