திருப்புகழ் 290 மலை முலைச்சியர் (திருத்தணிகை)

Thiruppugal 290 Malaimulaichchiyar

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தத்தன தனன தத்தன
தனன தத்தன – தனதான

மலைமு லைச்சியர் கயல்வி ழிச்சியர்
மதிமு கத்திய – ரழகான

மயில்ந டைச்சியர் குயில்மொ ழிச்சியர்
மனது ருக்கிக – ளணைமீதே

கலைநெ கிழ்த்தியே உறவ ணைத்திடு
கலவி யிற்றுவள் – பிணிதீராக்

கசட னைக்குண அசட னைப்புகல்
கதியில் வைப்பது – மொருநாளே

குலகி ரிக்குல முருவ விட்டமர்
குலவு சித்திர – முனைவேலா

குறவர் பெற்றிடு சிறுமி யைப்புணர்
குமர சற்குண – மயில்வீரா

தலம திற்புக லமர ருற்றிடர்
தனைய கற்றிய – அருளாளா

தருநி ரைத்தெழு பொழில்மி குத்திடு
தணிம லைக்குயர் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தத்தன தனன தத்தன
தனன தத்தன – தனதான

மலை முலைச்சியர் கயல் விழிச்சியர்
மதி முகத்தியர் – அழகான

மயில் நடைச்சியர் குயில் மொழிச்சியர்
மனது உருக்கிகள் – அணை மீதே

கலை நெகிழ்த்தியே உறவு அணைத்திடு
கலவியில் துவள் – பிணி தீரா

நோய் நீங்காத கசடனைக் குண அசடனைப் புகல்
கதியில் வைப்பதும் – ஒரு நாளே

குல கிரிக் குலம் உருவ விட்டவர்
குலவு சித்திர – முனை வேலா

குறவர் பெற்றிடு சிறுமியைப் புணர்
குமர சற்குண – மயில் வீரா

தலம் அதில் புகல் அமரர் உற்ற இடர்
தனை அகற்றிய – அருளாளா

தரு நிரைத்து எழு பொழில் மிகுத்திடு
தணி மலைக்கு உயர் – பெருமாளே.

English

malaimu laicchiyar kayalvi zhicchiyar
mathimu kaththiya – razhakAna

mayilna daicchiyar kuyilmo zhicchiyar
manathu rukkika – LaNaimeethE

kalaine kizhththiyE uRava Naiththidu
kalavi yitRuvaL – piNitheerAk

kasada naikkuNa asada naippukal
kathiyil vaippathu – morunALE

kulaki rikkula muruva vittamar
kulavu siththira – munaivElA

kuRavar petRidu siRumi yaippuNar
kumara saRkuNa – mayilveerA

thalama thiRpuka lamara rutRidar
thanaiya katRiya – aruLALA

tharuni raiththezhu pozhilmi kuththidu
thaNima laikkuyar – perumALE.

English Easy Version

malai mulaicchiyar kayal vizhicchiyar
mathi mukaththiyar – azhakAna

mayil nadaicchiyar kuyil mozhicchiyar
manathu urukkikaL – aNai meethE

kalai nekizhththiyE uRavu aNaiththidu
kalaviyil thuvaL – piNi theerA

kasadanaik kuNa asadanaip pukal
kathiyil vaippathum – oru nALE

kula kirik kulam uruva vittavar
kulavu siththira – munai vElA

kuRavar petRidu siRumiyaip puNar
kumara saRkuNa – mayil veerA

thalam athil pukal amarar utRa idar
thanai akatRiya – aruLALA

tharu niraiththu ezhu pozhil mikuththidu
thaNi malaikku uyar – perumALE.