திருப்புகழ் 291 முகத்தை மினுக்கி (திருத்தணிகை)

Thiruppugal 291 mugaththaiminukki

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத்தன தத்தன தனதன தனதன
தனத்தன தத்தன தனதன தனதன
தனத்தன தத்தன தனதன தனதன – தனதான

முகத்தைமி னுக்கிக ளசடிகள் கபடிகள்
விழித்தும ருட்டிகள் கெருவிகள் திருடிகள்
மொழிக்குள்ம யக்கிகள் வகைதனில் நகைதனில் – விதமாக

முழித்தும யற்கொளு மறிவிலி நெறியிலி
புழுக்குட லைப்பொரு ளெனமிக எணியவர்
முயக்கம டுத்துழி தருமடி யவனிடர் – ஒழிவாக

மிகுத்தழ கைப்பெறு மறுமுக சரவண
புயத்திள கிக்கமழ் நறைமலர் தொடைமிக
விசைக்கொடு மைப்பெறு மரகத கலபியும் – வடிவேலும்

வெளிப்படெ னக்கினி யிரவொடு பகலற
திருப்பதி யப்புக ழமுதியல் கவிசொலி
விதித்தனெ ழுத்தினை தரவரு மொருபொரு – ளருளாயோ


புகைத்தழ லைக்கொடு திரிபுர மெரிபட
நகைத்தவ ருக்கிட முறைபவள் வலைமகள்
பொருப்பிலி மக்கிரி பதிபெறு மிமையவ – ளபிராமி

பொதுற்றுதி மித்திமி நடமிடு பகிரதி
எழுத்தறி ருத்திரி பகவதி கவுரிகை
பொருட்பய னுக்குரை யடுகிய சமைபவள் – அமுதாகச்

செகத்தைய கட்டிடு நெடியவர் கடையவள்
அறத்தைவ ளர்த்திடு பரசிவை குலவதி
திறத்தமி ழைத்தரு பழையவ ளருளிய – சிறியோனே

செருக்கும ரக்கர்கள் பொடிபட வடிவுள
கரத்தில யிற்கொடு பொருதிமை யவர்பணி
திருத்தணி பொற்பதி தனில்மயில் நடவிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தனத்தன தத்தன தனதன தனதன
தனத்தன தத்தன தனதன தனதன
தனத்தன தத்தன தனதன தனதன – தனதான

முகத்தை மினுக்கிகள் அசடிகள் கபடிகள்
விழித்து மருட்டிகள் கெருவிகள் திருடிகள்
மொழிக்குள் மயக்கிகள் வகை தனில் நகை தனில் – விதமாக

முழித்து மயல் கொ(ள்)ளும் அறிவிலி நெறியிலி
புழுக் குடலைப் பொருள் என மிக எ(ண்)ணியவர்
முயக்கம் அடுத்து உழிதரும் அடியவன் இடர் – ஒழிவாக

மிகுத்த அழகைப் பெறும் அறுமுக சரவண
புயத்து இளகிக் கமழ் நறை மலர் தொடை மிக
விசைக் கொடுமைப் பெறு மரகத கலபியும் – வடிவேலும்

வெளிப்பட எனக்கு இனி இரவொடு பகல் அற
திருப் பதியப் புகழ் அமுது இயல் கவி சொ(ல்)லி
விதித் தன் எழுத்து இனை தர வரும் ஒரு பொருள் – அருளாயோ

புகைத்த அழலைக் கொ(ண்)டு திரி புரம் எரி பட
நகைத்தவருக்கு இடம் உறைபவள் வலை மகள்
பொருப்பில் இமக் கிரி பதி பெறும் இமையவள் – அபிராமி

பொது உற்று திமித்திமி நடம் இடு(ம்) பகிரதி
எழுத்து அறி ருத்திரி பகவதி கவுரி கை
பொருள் பயனுக்கு உரை அடுகிய சமைபவள் – அமுதாக

செகத்தை அகட்டு இடு நெடியவர் கடையவள்
அறத்தை வளர்த்திடு பர சிவை குலவதி
திறத் தமிழைத் தரு பழையவள் அருளிய – சிறியோனே

செருக்கும் அரக்கர்கள் பொடி பட வடிவுளகரத்தில்
அயில் கொடு பொருது இமையவர் பணி
திருத்தணி பொன் பதி தனில் மயில் நடவிய – பெருமாளே.

English

mukaththaimi nukkika LasadikaL kapadikaL
vizhiththuma ruttikaL keruvikaL thirudikaL
mozhikkuLma yakkikaL vakaithanil nakaithanil – vithamAka

muzhiththuma yaRkoLu maRivili neRiyili
puzhukkuda laipporu Lenamika eNiyavar
muyakkama duththuzhi tharumadi yavanidar – ozhivAka

mikuththazha kaippeRu maRumuka saravaNa
puyaththiLa kikkamazh naRaimalar thodaimika
visaikkodu maippeRu marakatha kalapiyum – vadivElum

veLippade nakkini yiravodu pakalaRa
thiruppathi yappuka zhamuthiyal kavisoli
vithiththane zhuththinai tharavaru moruporu – LaruLAyO

pukaiththazha laikkodu thiripura meripada
nakaiththava rukkida muRaipavaL valaimakaL
poruppili makkiri pathipeRu mimaiyava – LapirAmi

pothutRuthi miththimi nadamidu pakirathi
ezhuththaRi ruththiri pakavathi kavurikai
porutpaya nukkurai yadukiya samaipavaL – amuthAkac

chekaththaiya kattidu nediyavar kadaiyavaL
aRaththaiva Larththidu parasivai kulavathi
thiRaththami zhaiththaru pazhaiyava LaruLiya – siRiyOnE

serukkuma rakkarkaL podipada vadivuLa
karaththila yiRkodu poruthimai yavarpaNi
thiruththaNi poRpathi thanilmayil nadaviya – perumALE.

English Easy Version

mukaththai minukkikaL asadikaL kapadikaL
vizhiththu maruttikaL keruvikaL thirudikaL
mozhikkuL mayakkikaL vakai thanil nakai thanil – vithamAka

muzhiththu mayal ko(L)Lum aRivili neRiyili
puzhuk kudalaip poruL ena mika e(N)Niyavar
muyakkam aduththu uzhitharum adiyavan idar – ozhivAka

mikuththa azhakaip peRum aRumuka saravaNa
puyaththu iLakik kamazh naRai malar thodai mika
visaik kodumaip peRu marakatha kalapiyum – vadivElum

veLippada enakku ini iravodu pakal aRa
thirup pathiyap pukazh amuthu iyal kavi so(l)li
vithith than ezhuththu inai thara varum oru poruL – aruLAyO

pukaiththa azhalaik ko(N)du thiri puram eri pada
nakaiththavarukku idam uRaipavaL valai makaL
poruppil imak kiri pathi peRum imaiyavaL – apirAmi

pothu utRu thimiththimi nadam idu(m) pakirathi
ezhuththu aRi ruththiri pakavathi kavuri kai
poruL payanukku urai adukiya samaipavaL – amuthAka

sekaththai akattu idu nediyavar kadaiyavaL
aRaththai vaLarththidu para sivai kulavathi
thiRath thamizhaith tharu pazhaiyavaL aruLiya – siRiyOnE

serukkum arakkarkaL podi pada vadivuLa
karaththil ayil kodu poruthu imaiyavar paNi
thiruththaNi pon pathi thanil mayil nadaviya – perumALE.