திருப்புகழ் 293 முடித்த குழலினர் (திருத்தணிகை)

Thiruppugal 293 Mudiththakuzhalinar

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத்த தனதன தனத்த தனதன
தனத்த தனதன – தனதான

முடித்த குழலினர் வடித்த மொழியினர்
முகத்தி லிலகிய – விழியாலும்

முலைக்கி ரிகள்மிசை யசைத்த துகிலினும்
இளைத்த இடையினு – மயலாகிப்

படுத்த அணைதனி லணைத்த அவரொடு
படிக்கு ளநுதின – முழலாதே

பருத்த மயில்மிசை நினைத்த பொழுதுன
பதத்து மலரிணை – யருள்வாயே

துடித்து தசமுகன் முடித்த லைகள்விழ
தொடுத்த சரம்விடு – ரகுராமன்

துகைத்தி வுலகையொ ரடிக்கு ளளவிடு
துலக்க அரிதிரு – மருகோனே

தடத்து ளுறைகயல் வயற்கு ளெதிர்படு
தழைத்த கதலிக – ளவைசாயத்

தருக்கு மெழிலுறு திருத்த ணிகையினில்
தழைத்த சரவண – பெருமாளே.

பதம் பிரித்தது

தனத்த தனதன தனத்த தனதன
தனத்த தனதன – தனதான

முடித்த குழலினர் வடித்த மொழியினர்
முகத்தில் இலகிய – விழியாலும்

முலைக் கிரிகள் மிசை அசைத்த துகிலினும்
இளைத்த இடையினும் – மயலாகி

படுத்த அணை தனில் அணைத்த அவரொடு
படிக்குள் அநுதினம் – உழலாதே

பருத்த மயில் மிசை நினைத்த பொழுது உன
பதத்து மலர் இணை – அருள்வாயே

துடித்து தச முகன் முடித் தலைகள் விழ
தொடுத்த சரம் விடு – ரகுராமன்

துகைத்து இவ்வுலகை ஒர் அடிக்குள் அளவிடு
துலக்க அரி திரு – மருகோனே

தடத்துள் உறை கயல் வயற்குள் எதிர் படு
தழைத்த கதலிகள் – அவை சாய

தருக்கும் எழில் உறு திருத்தணிகையினில்
தழைத்த சரவண – பெருமாளே.

English

mudiththa kuzhalinar vadiththa mozhiyinar
mukaththi lilakiya – vizhiyAlum

mulaikki rikaLmisai yasaiththa thukilinum
iLaiththa idaiyinu – mayalAkip

paduththa aNaithani laNaiththa avarodu
padikku Lanuthina – muzhalAthE

paruththa mayilmisai ninaiththa pozhuthuna
pathaththu malariNai – yaruLvAyE

thudiththu thasamukan mudiththa laikaLvizha
thoduththa saramvidu – rakurAman

thukaiththi vulakaiyo radikku LaLavidu
thulakka arithiru – marukOnE

thadaththu LuRaikayal vayaRku Lethirpadu
thazhaiththa kathalika – LavaisAyath

tharukku mezhiluRu thiruththa Nikaiyinil
thazhaiththa saravaNa – perumALE.

English Easy Version

mudiththa kuzhalinar vadiththa mozhiyinar
mukaththil ilakiya – vizhiyAlum

ulaik kirikaL misai asaiththa thukilinum
iLaiththa idaiyinum – mayalAki

paduththa aNai thanil aNaiththa avarodu
padikkuL anuthinam – uzhalAthE

paruththa mayil misai ninaiththa pozhuthu una
pathaththu malar iNai – aruLvAyE

thudiththu thasa mukan mudith thalaikaL vizha
thoduththa saram vidu – rakurAmam

thukaiththu ivvulakai or adikkuL aLavidu
thulakka ari thiru – marukOnE

thadaththuL uRai kayal vayaRkuL ethir padu
thazhaiththa kathalikaL – avai sAya

tharukkum ezhil uRu thiruththaNigaiyinil
thazhaiththa saravaNa – perumALE.