திருப்புகழ் 295 முலைபுளகம் எழ (திருத்தணிகை)

Thiruppugal 295 Mulaipulagamezha

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனன தனதந்த தனதனன தனதந்த
தனதனன தனதந்த – தனதான

முலைபுளக மெழஅங்கை மருவுசரி வளைகொஞ்ச
முகிலளக மகில்பொங்க – அமுதான

மொழிபதற வருமந்த விழிகுவிய மதிகொண்ட
முகம்வெயர்வு பெறமன்ற – லணையூடே

கலைநெகிழ வளர்வஞ்சி யிடைதுவள வுடலொன்று
படவுருகி யிதயங்கள் – ப்ரியமேகூர்

கலவிகரை யழியின்ப அலையிலலை படுகின்ற
கவலைகெட நினதன்பு – பெறுவேனோ

அலையெறியு மெழில்சண்ட உததிவயி றழல்மண்ட
அதிரவெடி படஅண்ட – மிமையோர்கள்

அபயமென நடுகின்ற அசுரர்பட அடியுண்டு
அவர்கள்முனை கெடநின்று – பொரும்வேலா

தலைமதிய நதிதும்பை யிளவறுகு கமழ்கொன்றை
சடைமுடியி லணிகின்ற – பெருமானார்

தருகுமர விடவைந்து தலையரவு தொழுகின்ற
தணிமலையி லுறைகின்ற – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதனன தனதந்த தனதனன தனதந்த
தனதனன தனதந்த – தனதான

முலை புளகம் எழ அம் கை மருவு வளை கொஞ்ச
முகில் அளகம் அகில் பொங்க – அமுதான

மொழி பதற அருமந்த விழி குவிய மதி கொண்ட
முகம் வெயர்வு பெற மன்றல் – அணை ஊடே

கலை நெகிழ வளர் வஞ்சி இடை துவள உடல் ஒன்று
பட உருகி இதயங்கள் – ப்ரியமே கூர்

கலவி கரை அழி இன்ப அலையில் அலை படுகின்ற
கவலை கெட நினது அன்பு – பெறுவேனோ

அலை எறியும் எழில் சண்ட உததி வயிறு அழல் மண்ட
அதிர வெடி பட அண்டம் – இமையோர்கள்

அபயம் என நடு நின்ற அசுரர் அடி உண்டு
அவர்கள் முனை கெட நின்று – பொரும் வேலா

தலை மதிய நதி தும்பை இள அறுகு கமழ் கொன்றை
சடை முடியில் அணிகின்ற – பெருமானார்

தரு குமர விட ஐந்து தலை அரவு தொழுகின்ற
தணி மலையில் உறைகின்ற – பெருமாளே.

English

mulaipuLaka mezhaangai maruvusari vaLaikonja
mukilaLaka makilponga – amuthAna

mozhipathaRa varumantha vizhikuviya mathikoNda
mukamveyarvu peRamanRa – laNaiyUdE

kalainekizha vaLarvanji yidaithuvaLa vudalonRu
padavuruki yithayangaL – priyamEkUr

kalavikarai yazhiyinpa alaiyilalai padukinRa
kavalaikeda ninathanpu – peRuvEnO

alaiyeRiyu mezhilchaNda uthathivayi RazhalmaNda
athiravedi padaaNda – mimaiyOrkaL

apayamena nadukinRa asurarpada adiyuNdu
avarkaLmunai kedaninRu – porumvElA

thalaimathiya nathithumpai yiLavaRuku kamazhkonRai
chadaimudiyi laNikinRa – perumAnAr

tharukumara vidavainthu thalaiyaravu thozhukinRa
thaNimalaiyi luRaikinRa – perumALE.

English Easy Version

mulai puLakam ezha am kai maruvu vaLai konja
mukil aLakam akil ponga – amuthAna

mozhi pathaRa arumantha vizhi kuviya mathi koNda
mukam veyarvu peRa manRal – aNai UdE

kalai nekizha vaLar vanji idai thuvaLa udal onRu
pada uruki ithayangaL – priyamE kUr

kalavi karai azhi inpa alaiyil alai padukinRa
kavalai keda ninathu anpu – peRuvEnO

alai eRiyum ezhil chaNda uthathi vayiRu azhal maNda
athira vedi pada aNdam – imaiyOrkaL

apayam ena nadu ninRa asurar adi uNdu
avarkaL munai keda ninRu – porum vElA

thalai mathiya nathi thumpai iLa aRuku kamazh konRai
sadai mudiyil aNikinRa – perumAnAr

tharu kumara vida ainthu thalai aravu thozhukinRa
thaNi malaiyil uRaikinRa – perumALE.