திருப்புகழ் 298 வட்ட வாள் தன (திருத்தணிகை)

Thiruppugal 298 Vattavalthana

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்தனாத் தனன தத்தனாத் தனன
தத்தனாத் தனன – தனதான

வட்டவாட் டனம னைச்சிபாற் குதலை
மக்கள்தாய்க் கிழவி – பதிநாடு

வைத்ததோட் டமனை யத்தமீட் டுபொருள்
மற்றகூட் டமறி – வயலாக

முட்டவோட் டிமிக வெட்டுமோட் டெருமை
முட்டர்பூட் டியெனை – யழையாமுன்

முத்திவீட் டணுக முத்தராக் கசுரு
திக்குராக் கொளிரு – கழல்தாராய்

பட்டநாற் பெரும ருப்பினாற் கரஇ
பத்தின்வாட் பிடியின் – மணவாளா

பச்சைவேய்ப் பணவை கொச்சைவேட் டுவர்ப
திச்சிதோட் புணர்த – ணியில்வேளே

எட்டுநாற் கரவொ ருத்தல்மாத் திகிரி
யெட்டுமாக் குலைய – எறிவேலா

எத்திடார்க் கரிய முத்தபாத் தமிழ்கொ
டெத்தினார்க் கெளிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தத்தனாத் தனன தத்தனாத் தனன
தத்தனாத் தனன – தனதான

வட்ட வாள் தன மனைச்சி பால் குதலை
மக்கள் தாய்க் கிழவி – பதி நாடு

வைத்த தோட்டம் மனை அத்தம் ஈட்டு பொருள்
மற்ற கூட்டம் அறிவு – அயலாக

முட்ட ஓட்டி மிக எட்டும் மோட்டு எருமை
முட்டர் பூட்டி எனை – அழையா முன்

முத்தி வீடு அணுக முத்தர் ஆக்க சுரு
தி(க்குள்) குராக்குள் ஒளிர் இரு – கழல் தாராய்

பட்ட(ம்) நால் பெரும் மருப்பினால் கர
இபத்தின் வாள் பிடியின் – மணவாளா

பச்சை வேய்ப் பணவை கொச்சை வேட்டுவர்
பதிச்சி தோள் புணர் – தணியில் வேளே

எட்டு(ம்) நால் கர ஒருத்தல் மாத் திகிரி
எட்டும் மாக் குலைய – எறி வேலா

எத்திடார்க்கு அரிய முத்த பாத் தமிழ் கொண்டு
எத்தினார்க்கு எளிய – பெருமாளே.

English

vattavAt tanama naiccipAR kuthalai
makkaLthAyk kizhavi – pathinAdu

vaiththathOt tamanai yaththameet tuporuL
matRakUt tamaRi – vayalAka

muttavOt timika vettumOt terumai
muttarpUt tiyenai – yazhaiyAmun

muththiveet taNuka muththarAk kasuru
thikkurAk koLiru – kazhalthArAy

pattanAR peruma ruppinAR kara
ipaththinvAt pidiyin – maNavALA

paccaivEyp paNavai koccaivEt tuvarpa
thiccithOt puNartha – NiyilvELE

ettunAR karavo ruththalmAth thikiri
yettumAk kulaiya – eRivElA

eththidArk kariya muththapAth thamizhko
deththinArk keLiya – perumALE.

English Easy Version

vattavAt tanama naiccipAR kuthalai
makkaLthAyk kizhavi – pathinAdu

vaiththa thOtta manai yaththam eettuporuL
matRakUt tamaRi – vayalAka

muttavOtti mika vettu mOtterumai
muttar pUttiyenai – yazhaiyAmun

muththiveet taNuka muththarAkka
suruthik kurAkkoLiru – kazhalthArAy

pattanAR peruma ruppinAR kara
ipaththinvAt pidiyin – maNavALA

paccaivEyp paNavai koccaivEt tuvar
pathicci thOt puNar – thaNiyilvELE

ettunAR karavo ruththalmAth thikiri
yettumAk kulaiya – eRivElA

eththidArk kariya muththa pAththamizhko
deththinArk keLiya – perumALE.