திருப்புகழ் 30 அனைவரும் மருண்டு (திருச்செந்தூர்)

Thiruppugal 30 Anaivarum Marundu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தனந்த தந்த தனதன தனந்த தந்த
தனதன தனந்த தந்த – தனதான

அனைவரு மருண்ட ருண்டு கடிதென வெகுண்டி யம்ப
அமரஅ டிபின்தொ டர்ந்து – பிணநாறும்

அழுகுபிணி கொண்டு விண்டு புழுவுட னெலும்ப லம்பு
மவலவுட லஞ்சு மந்து – தடுமாறி

மனைதொறு மிதம்ப கர்ந்து வரவர விருந்த ருந்தி
மனவழி திரிந்து மங்கும் – வசைதீர

மறைசதுர் விதந்தெ ரிந்து வகைசிறு சதங்கை கொஞ்சு
மலரடி வணங்க என்று – பெறுவேனோ

தினைமிசை சுகங்க டிந்த புனமயி லிளங்கு ரும்பை
திகழிரு தனம்பு ணர்ந்த – திருமார்பா

ஜெகமுழு துமுன்பு தும்பி முகவனொ டுதந்தை முன்பு
திகிரிவ லம்வந்த செம்பொன் – மயில்வீரா

இனியக னிமந்தி சிந்து மலைகிழ வசெந்தில் வந்த
இறைவகு ககந்த என்று – மிளையோனே

எழுகட லுமெண்சி லம்பும் நிசிசர ருமஞ்ச அஞ்சு
மிமையவ ரையஞ்ச லென்ற – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதன தனந்த தந்த தனதன தனந்த தந்த
தனதன தனந்த தந்த – தனதான

அனைவரு மருண்டு அருண்டு கடிதென வெகுண்டி யம்ப
அமரஅடி பின்தொடர்ந்து – பிணநாறும்

அழுகுபிணி கொண்டு விண்டு புழுவுடன் எலும்பு அலம்பும்
அவல உட லஞ்சுமந்து – தடுமாறி

மனைதொறும் இதம்பகர்ந்து வரவர விருந்தருந்தி
மனவழி திரிந்து மங்கும் – வசைதீர

மறைசதுர் விதந்தெரிந்து வகை சிறு சதங்கை கொஞ்சு
மலரடி வணங்க என்று – பெறுவேனோ

தினைமிசை சுகங் கடிந்த புனமயில் இளங்குரும்பை
திகழிரு தனம்புணர்ந்த – திருமார்பா

ஜெகமுழுது முன்பு தும்பி முகவனொடு தந்தை முன்பு
திகிரிவலம் வந்த செம்பொன் – மயில்வீரா

இனியகனி மந்தி சிந்து மலைகிழவ செந்தில் வந்த
இறைவகுக கந்த என்றும் – இளையோனே

எழுகடலும் எண்சிலம்பும் நிசிசரருமஞ்ச அஞ்சும்
இமையவரை யஞ்ச லென்ற – பெருமாளே.

English

anaivaru maruNda ruNdu kadithena vegunNdi yamba
amara a dipintho darnthu – piNanARum

azhugupiNi koNdu viNdu puzhuvuda nelumba lambu
mavalavu dalanju manthu – thadumARi

manaithoRu mithampa karnthu varavara viruntha runthi
manavazhi thirinthu mangum – vasaitheera

maRaicathur vithanthe rinthu vakaiciRu cathangai konju
malaradi vaNanga enRu – peRuvEnO

thinaimisai cukanka dintha punamayi liLanku rumbai
thikazhiru thanampu Narntha – thirumArbA

jegamuzhu thumunpu thumpi mukavano duthanthai munpu
thikiriva lamvantha cempon – mayilveerA

iniyaka nimanthi cinthu malaikizha vacenthil vantha
iRaivagu kakantha enRu – mizhaiyOnE

ezhukada lumeNci lambum nicicararu manja anju
mimaiyava raiyanja lenRa – perumALE.

English Easy Version

anaivaru maruNda ruNdu kadithena vegunNdi yamba:
amara adipintho darnthu – piNanARum

azhugupiNi koNdu viNdu puzhuvuda nelumba lambum
avalavu dalanju manthu – thadumARi

manaithoRu mithampa karnthu varavara viruntha runthi
manavazhi thirinthu mangum – vasaitheera

maRaicathur vithanthe rinthu vakai ciRu cathangai konju
malaradi vaNanga enRu – peRuvEnO

thinaimisai cukanka dintha punamayil iLanku rumbai
thikazhiru thanampu Narntha – thirumArbA

jegamuzhu thumunpu thumpi mukavano duthanthai munpu
thikiriva lamvantha: cempon – mayilveerA

iniyaka nimanthi cinthu malaikizhava centhil vantha
iRaivagu kakantha enRum – izhaiyOnE

ezhukada lumeNci lambum nicicararum anja
anjum imaiyavarai yanjalenRa – perumALE.