திருப்புகழ் 301 வினைக்கு இனமாகும் (திருத்தணிகை)

Thiruppugal 301 Vinaikkuinamagum

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத்தன தானம் தனத்தன தானம்
தனத்தன தானம் – தனதான

வினைக்கின மாகுந் தனத்தினர் வேளம்
பினுக்கெதி ராகும் – விழிமாதர்

மிகப்பல மானந் தனிற்புகு தாவெஞ்
சமத்திடை போய்வெந் – துயர்மூழ்கிக்

கனத்தவி சாரம் பிறப்படி தோயுங்
கருக்குழி தோறுங் – கவிழாதே

கலைப்புல வோர்பண் படைத்திட வோதுங்
கழற்புக ழோதுங் – கலைதாராய்

புனத்திடை போய்வெஞ் சிலைக்குற வோர்வஞ்
சியைப்புணர் வாகம் – புயவேளே

பொருப்பிரு கூறும் படக்கடல் தானும்
பொருக்கெழ வானும் – புகைமூளச்

சினத்தொடு சூரன் கனத்திணி மார்பந்
திறக்கம ராடுந் – திறல்வேலா

திருப்புக ழோதுங் கருத்தினர் சேருந்
திருத்தணி மேவும் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனத்தன தானம் தனத்தன தானம்
தனத்தன தானம் – தனதான

வினைக்கு இனமாகும் தனத்தினர் வேள்
அம்பினுக்கு எதிர் ஆகும் – விழி மாதர்

மிகப் பல மானம் தனில் புகுதா வெம்
சமத்திடை போய் வெம் – துயர் மூழ்கி

கனத்த விசாரம் பிறப்பு அடி தோயும்
கருக் குழி தோறும் – கவிழாதே

கலைப் புலவோர் பண் படைத்திட ஓதும்
கழல் புகழ் ஓதும் – கலை தாராய்

புனத்து இடை போய் வெம் சிலை குறவோர்
வஞ்சியைப் புணர் வாகம் – புய வேளே

பொருப்பு இரு கூறும் பட கடல் தானும்
பொருக்கு எழ வானும் – புகை மூள

சினத்தோடு சூரன் கனத்(த) தி(ண்)ணி(ய) மார்பம்
திறக்க அமர் ஆடும் – திறல் வேலா

திருப்புகழ் ஓதும் கருத்தினர் சேரும்
திருத்தணி மேவும் – பெருமாளே.

English

vinaikkina mAkun thanaththinar vELam
pinukkethi rAkum – vizhimAthar

mikappala mAnan thaniRpuku thAvenj
camaththidai pOyven – thuyarmUzhki

kanaththavi sAram piRappadi thOyum
karukkuzhi thORum – kavizhAthE

kalaippula vOrpaN padaiththida vOthum
kazhaRpuka zhOthum – kalaithArAy

punaththidai pOyvenj silaikkuRa vOrvanj
ciyaippuNar vAkam – puyavELE

poruppiru kURum padakkadal thAnum
porukkezha vAnum – pukaimULa

cinaththodu cUran kanaththiNi mArpan
thiRakkama rAdun – thiRalvElA

thiruppuka zhOthum karuththinar sErum
thiruththaNi mEvum – perumALE.

English Easy Version

vinaikku inamAkum thanaththinar vEL
ampinukku ethir Akum – vizhi mAthar

mikap pala mAnam thanil pukuthA vem
samaththidai pOy vem – thuyar mUzhki

kanaththa visAram piRappu adi thOyum
karuk kuzhi thORum – kavizhAthE

kalaip pulavOr paN padaiththida Othum
kazhal pukazh Othum – kalai thArAy

punaththu idai pOy vem silai kuRavOr
vanjiyaip puNar vAkam – puya vELE

poruppu iru kURum pada kadal thAnum
porukku ezha vAnum – pukai mULa

sinaththOdu cUran kanath(tha) thi(N)Ni(ya) mArpam
thiRakka amar Adum – thiRal vElA

thiruppukaz Othum karuththinar sErum
thiruththaNi mEvum – perumALE.