திருப்புகழ் 309 அதி மதம் கக்க (காஞ்சீபுரம்)

Thiruppugal 309 Adhimadhamkakka

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் – தனதான

அதிமதங் கக்கப் பக்கமு கக்குஞ்
சரிதனந் தைக்கச் சிக்கென நெக்கங்
கணைதருஞ் செச்சைப் பொற்புய னத்தன் – குறவாணார்

அடவியந் தத்தைக் கெய்த்துரு கிச்சென்
றடிபணிந் திட்டப் பட்டும யற்கொண்
டயர்பவன் சத்திக் கைத்தல னித்தன் – குமரேசன்

துதிசெயும் சுத்தப் பத்தியர் துக்கங்
களைபவன் பச்சைப் பக்ஷிந டத்துந்
துணைவனென் றர்ச்சித் திச்சைத ணித்துன் – புகழ்பாடிச்


சுருதியின் கொத்துப் பத்தியு முற்றுந்
துரியமுந் தப்பித் தத்வம னைத்துந்
தொலையுமந் தத்துக் கப்புற நிற்கும் – படிபாராய்

கதிபொருந் தக்கற் பித்துந டத்துங்
கனல்தலம் புக்குச் சக்ரமெ டுக்குங்
கடவுளும் பத்மத் தச்சனு முட்கும் – படிமோதிக்

கதிரவன் பற்குற் றிக்குயி லைத்திண்
சிறகரிந் தெட்டுத் திக்கர்வ குக்குங்
கடகமுந் தட்டுப் பட்டொழி யக்கொன் – றபிராமி

பதிவ்ரதம் பற்றப் பெற்றம கப்பெண்
பரிவொழிந் தக்கிக் குட்படு தக்கன்
பரிபவம் பட்டுக் கெட்டொழி யத்தன் – செவிபோயப்

பணவிபங் கப்பட் டப்படி வெட்கும்
படிமுனிந் தற்றைக் கொற்றம்வி ளைக்கும்
பரமர்வந் திக்கக் கச்சியில் நிற்கும் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் – தனதான

அதி மதம் கக்கப் பக்கம் உகக் குஞ்சரி
தனம் தைக்கச் சிக்கென நெக்கு அங்கு
அணை தரும் செச்சைப் பொற்புயன் அத்தன் – குற வாணர்

அடவி அம் தத்தைக்கு எய்த்து உருகிச் சென்று
அடி பணிந்து இட்டப்பட்டு மயல் கொண்டு
அயர்பவன் சத்திக் கைத்தலம் நித்தன் – குமரேசன்

துதி செயும் சுத்தப் பத்தியர் துக்கம்
களைபவன் பச்சைப் பக்ஷி நடத்தும்
துணைவன் என்று அர்ச்சித்து இச்சை தணித்து உன் – புகழ்பாடி

சுருதியின் கொத்துப் பத்தியும் முற்றும்
துரியமும் தப்பித் தத்வம் அனைத்தும்
தொலையும் அந்தத்துக்கு அப்புறம் நிற்கும் – படி பாராய்

கதி பொருந்தக் கற்பித்து நடத்தும்
கனல் தலம் புக்கு சக்ரம் எடுக்கும்
கடவுளும் பத்ம தச்சனும் உட்கும் – படி மோதிக்

கதிரவன் பல் குற்றி குயிலைத் திண்
சிறகு அரிந்து எட்டுத் திக்கர் வகுக்கும்
கடகமும் தட்டுப் பட்டு ஒழியக் கொன்ற – அபிராமி

பதிவ்ரதம் பற்றப் பெற்ற மகப் பெண்
பரிவு ஒழிந்து அக்கிக்கு உட்படு தக்கன்
பரிபவம் பட்டுக் கெட்டு ஒழிய தன் – செ(வ்)வி போய்

அப் பனவி பங்கப்பட்டு அப்படி வெட்கும்படி
முனிந்து அற்றைக் கொற்றம் விளைக்கும்
பரமர் வந்திக்கக் கச்சியில் நிற்கும் – பெருமாளே.

English

athimatham kakkap pakkamu kakkunj
charithanan thaikkac chikkena nekkang
kaNaitharunj secchaip poRpuya naththan – kuRavANAr

adaviyan thaththaik keyththuru kicchen
RadipaNin thittap pattuma yaRkoN
dayarpavan saththik kaiththala niththan – kumarEsan

thuthiseyum suththap paththiyar thukkam
kaLaipavan pacchaip pakshina daththun
thuNaivanen Rarcchith thicchaitha Niththun – pukazhpAdi

suruthiyin koththup paththiyu mutRun
thuriyamun thappith thathvama naiththun
tholaiyuman thaththuk kappuRa niRkum – padipArAy

kathiporun thakkaR piththuna daththung
kanalthalam pukkuc chakrame dukkung
kadavuLum pathmath thacchanu mutkum – padimOthik

kathiravan paRkut Rikkuyi laiththiN
siRakarin thettuth thikkarva kukkung
kadakamun thattup pattozhi yakkon – RapirAmi

pathivratham patRap petRama kappeN
parivozhin thakkik kutpadu thakkan
paripavam pattuk kettozhi yaththan – sevipOyap

paNavipang kappat tappadi vetkum
padimunin thatRaik kotRamvi Laikkum
paramarvan thikkak kacchiyil niRkum – perumALE.

English Easy Version

athi matham kakkap pakkam ukak
kunjchari thanam thaikkac chikkena nekku
angu aNai tharum secchaip poRpuyan aththan – kuRa vANar

adavi am thaththaikku eyththu urukic chenRu
adi paNinthu ittap pattu mayal koNdu
ayarpavan saththik kaiththalam niththan – kumarEsan

thuthi seyum suththap paththiyar thukkam
kaLaipavan pacchaip pakshi nadaththum
thuNaivan enRu arcchiththu icchai thaNiththu un – pukazhpAdi

suruthiyin koththup paththiyum mutRum
thuriyamum thappith thathvam anaiththum
tholaiyum anthaththukku appuRam niRkum – padi pArAy

kathi porunthak kaRpiththu nadaththum
kanal thalam pukku sakram edukkum
kadavuLum pathma thacchanum utkum – padi mOthik

kathiravan pal kutRi kuyilaith thiN
siRaku arinthu ettuth thikkar vakukkum
kadakamum thattup pattu ozhiyak konRa – apirAmi

pathivratham patRap petRa makap peN
parivu ozhinthu akkikku utpadu thakkan
paripavam pattuk kettu ozhiya than – se(v)vi pOy ap

panavi pangappattu appadi vetkumpadi
muninthu atRaik kotRam viLaikkum
paramar vanthikkak kacchiyil niRkum – perumALE.