திருப்புகழ் 310 கனக தம்பத்தை (காஞ்சீபுரம்)

Thiruppugal 310 Kanagathampaththai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் – தனதான

கனகதம் பத்தைச் செச்சையை மெச்சுங்
கடகசங் கத்துப் பொற்புய வெற்பன்
கடலுள்வஞ் சித்துப் புக்கதொர் கொக்கும் – பொடியாகக்

கறுவுசெஞ் சத்திப் பத்மக ரத்தன்
குமரனென் றர்ச்சித் தப்படி செப்புங்
கவிமொழிந் தத்தைக் கற்றற வுற்றும் – புவியோர்போய்

குனகியுங் கைக்குக் கற்பக மொப்பென்
றனகனென் றிச்சைப் பட்டத ளிக்குங்
குமணனென் றொப்பிட் டித்தனை பட்டிங் – கிரவான


குருடுகொண் டத்தச் சத்தம னைத்துந்
திருடியுஞ் சொற்குத் தக்கதொ டுத்துங்
குலவியுங் கத்தப் பட்டக லக்கந் – தெளியாதோ

சனகனன் புற்றுப் பெற்றம டப்பெண்
தனிப்பெருங் கற்புச் சக்ரந டத்துந்
தகையிலங் கைச்சுற் றத்தைமு ழுத்துஞ் – சுடவேவெஞ்

சமரசண் டக்கொற் றத்தவ ரக்கன்
கதிர்விடும் பத்துக் கொத்துமு டிக்குந்
தனியொரம் பைத்தொட் டுச்சுரர் விக்னங் – களைவோனும்

தினகரன் சொர்க்கத் துக்கிறை சுக்ரன்
சசிதரன் திக்குக் கத்தர கத்யன்
திசைமுகன் செப்பப் பட்டவ சிட்டன் – திரள்வேதஞ்

செகதலஞ் சுத்தப் பத்தியர் சித்தம்
செயலொழிந் தற்றுப் பெற்றவர் மற்றும்
சிவனும்வந் திக்கக் கச்சியில் நிற்கும் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் – தனதான

கனக தம்பத்தைச் செச்சையை மெச்சும்
கடக சங்கத்துப் பொன் புய வெற்பன்
கடலுள் வஞ்சித்துப் புக்கது ஒர் கொக்கும் – பொடியாகக்

கறுவு செம் சத்திப் பத்ம கரத்தன்
குமரன் என்று அர்ச்சித்து அப்படி செப்பும்
கவி மொழிந்து அத்தைக் கற்று அற உற்றும் – புவியோர் போய்

குனகியும் கைக்குக் கற்பகம் ஒப்பென்று
அனகன் என்று இச்சைப் பட்டது அளிக்கும்
குமணன் என்று ஒப்பிட்டு இத்தனை பட்டு இங்கு – இரவு ஆன

குருடு கொண்டு அத்தச் சத்தம் அனைத்தும்
திருடியும் சொற்குத் தக்க தொடுத்தும்
குலவியும் கத்தப்பட்ட கலக்கம் – தெளியாதோ

சனகன் அன்புற்றுப் பெற்ற மடப் பெண்
தனிப் பெரும் கற்புச் சக்ரம் நடத்தும்
தகை இலங்கைச் சுற்றத்தை முழுத்தும் – சுடவே வெம்

சமர சண்டக் கொற்றத்து அவ் அரக்கன்
கதிர் விடும் பத்துக் கொத்து முடிக்கும்
தனி ஒர் அம்பைத் தொட்டுச் சுரர் விக்னம் – களைவோனும்

தினகரன் சொர்க்கத்துக்கு இறை சுக்ரன்
சசிதரன் திக்குக் கத்தர் அகத்(தி)யன்
திசை முகன் செப்பப்பட்ட வசிட்டன் – திரள் வேதம்

செகதலம் சுத்தப் பத்தியர் சித்தம்
செயல் ஒழிந்து அற்றுப் பெற்றவர் மற்றும்
சிவனும் வந்திக்கக் கச்சியில் நிற்கும் – பெருமாளே.

English

kanakatham paththaic checchaiyai mecchum
kadakasang kaththup poRpuya veRpan
kadaluLvan jiththup pukkathor kokkum – podiyAkak

kaRuvusen jaththip pathmaka raththan
kumaranen Rarcchith thappadi seppum
kavimozhin thaththaik katRaRa vutRum – puviyOrpOy

kunakiyum kaikkuk kaRpaka moppen
Ranakanen Ricchaip pattatha Likkum
kumaNanen Roppit tiththanai patting – kiravAna

kurudukoN daththac chaththama naiththum
thirudiyum soRkuth thakkatho duththum
kulaviyum kaththap pattaka lakkan – theLiyAthO

sanakanan putRup petRama dappeN
thanipperum kaRpuc chakrana daththun
thakaiyilan gaicchut Raththaimu zhuththum – sudavEvem

samarasaN dakkot Raththava rakkan
kathirvidum paththuk koththumu dikkun
thaniyoram paiththot tucchurar vignam – kaLaivOnum

thinakaran sorkkath thukkiRai sukran
sasitharan thikkuk kaththara kathyan
thisaimukan seppap pattava sittan – thiraLvEtham

sekathalam suththap paththiyar siththam
seyalozhin thatRup petRavar matRum
sivanumvan thikkak kacchiyil niRkum – perumALE.

English Easy Version

kanaka thampaththaic checchaiyai mecchum
kadaka sangaththup pon puya veRpan
kadaluL vanjiththup pukkathu or kokkum – podiyAkak

kaRuvu sem saththip pathma karaththan
kumaran enRu arcchiththu appadi seppum
kavi mozhinthu aththaik katRu aRa utRum – puviyOr pOy

kunakiyum kaikkuk kaRpakam oppenRu
anakan enRu icchaip pattathu aLikkum
kumaNan enRu oppittu: iththanai pattu ingu – iravu Ana

kurudu koNdu aththac chaththam anaiththum
thirudiyum soRkuth thakka thoduththum
kulaviyum kaththappatta kalakkam – theLiyAthO

sanakan anputRup petRa madap peN
thanip perum kaRpuc chakram nadaththum
thakai ilangaic chutRaththai muzhuththum – sudavE vem

samara saNdak kotRaththu av arakkan
kathir vidum paththuk koththu mudikkum
thani or ampaith thottuc churar vignam – kaLaivOnum

thinakaran sorkkaththukku iRai sukran
sasitharan thikkuk kaththar akath(thi)yan
thisai mukan seppappatta vasittan – thiraL vEtham

sekathalam suththap paththiyar siththam
seyal ozhinthu atRup petRavar matRum
sivanum vanthikkak kacchiyil niRkum – perumALE.