திருப்புகழ் 311 செடியுடம் பத்தி (காஞ்சீபுரம்)

Thiruppugal 311 Sediyudampaththi

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் – தனதான

செடியுடம் பத்தித் தெற்றியி ரத்தஞ்
செறிநரம் பிட்டுக் கட்டிய சட்டஞ்
சிறைதிரண் டொக்கத் தொக்கவி னைப்பந் – தவிகாரம்

திமிரதுங் கத்தத் துத்திரை யெற்றுஞ்
செனனபங் கத்துத் துக்கக டற்கண்
திருகுரும் பைப்பட் டுச்சுழல் தெப்பங் – கரணாதி

குடிபுகும் பொக்கப் புக்கிலி றப்பின்
குடிகலம்வெந் தொக்குக் கொட்டில்ம லத்தின்
குசைசுமந் தெட்டுத் திக்கிலு முற்றுந் – தடுமாறுங்

குவலயங் கற்றுக் கத்தியி ளைக்குஞ்
சமயசங் கத்தைத் தப்பியி ருக்குங்
குணமடைந் துட்பட் டொக்கஇ ருக்கும் – படிபாராய்

படிதருங் கற்புக் கற்பக முக்கண்
கொடிபசுஞ் சித்ரக் குத்தர முத்தம்
பணிநிதம் பத்துச் சத்தியு கக்குங் – குமரேசா

பரவசங் கெட்டெட் டக்கர நித்தம்
பரவுமன் பர்க்குச் சித்திய ளிக்கும்
பரமர்வந் திக்கத் தக்கப தத்தன் – குருநாதா

தொடியிடும் பத்மக் கைக்குமி டைக்குஞ்
சுருள்படும் பத்திப் பட்டகு ழற்குந்
துகிர்கடைந் தொப்பித் திட்டஇ தழ்க்குங் – குறமானின்

சுடர்படுங் கச்சுக் கட்டுமு லைக்குந்
துவளுநெஞ் சத்தச் சுத்தஇ ருக்கும்
சுரரும்வந் திக்கக் கச்சியில் நிற்கும் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் – தனதான

செடி உடம்பு அத்தித் தெற்றி இரத்தம்
செறி நரம்பு இட்டுக் கட்டிய சட்டம்
சிறை திரண்டு ஒக்கத் தொக்க வினைப் – பந்த விகாரம்

திமிர துங்கத் தத்துத் திரை எற்றும்
செனன பங்கத்துத் துக்க கடல் கண்
திரு(கு) குரும்பைப் பட்டுச் சுழல் தெப்பம் – கரண ஆதி

குடி புகும் பொக்கப் புக்கில் இறப்பின்
குடிலம் வெந்து ஒக்குக் கொட்டில் மலத்தின்
குகை சுமந்து எட்டுத் திக்கிலு(ம்) முற்றும் – தடுமாறும்

குவலயம் கற்றுக் கத்தி இளைக்கும்
சமய சங்கத்தைத் தப்பி இருக்கும்
குணம் அடைந்து உட்பட்டு ஒக்க இருக்கும்படி – பாராய்

படி தரும் கற்புக் கற்பக முக்கண்
கொடி பசும் சித்ரக்குத் தர(ம்) முத்தம்
பணி நிதம்பத்துச் சத்தி உகக்கும் – குமரேசா

பரவசம் கெட்டு எட்டு அக்கரம் நித்தம்
பரவும் அன்பர்க்கு சித்தி அளிக்கும்
பரமர் வந்திக்க தக்க பதத்தன் – குரு நாதா

தொடி இடும் பத்ம கைக்கும் இடைக்கும்
சுருள்படும் பத்தி பட்ட குழற்கும்
துகிர் கடைந்து ஒப்பித்திட்ட இதழ்க்கும் – குற மானின்

சுடர் படும் கச்சு கட்டு முலைக்கும்
துவளும் நெஞ்சத்த சுத்த இருக்கும்
சுரரும் வந்திக்க கச்சியில் நிற்கும் – பெருமாளே.

English

chediyudam paththith thetRiyi raththanj
cheRinaram pittuk kattiya sattanj
chiRaithiraN dokkath thokkavi naippan – thavikAram

thimirathung kaththath thuththirai yetRunj
jenanapang kaththuth thukkaka daRkaN
thirukurum paippat tucchuzhal theppang – karaNAthi

kudipukum pokkap pukkili Rappin
kudilamven thokkuk kottilma laththin
kukaisuman thettuth thikkilu mutRun – thadumARung

kuvalayang katRuk kaththiyi Laikkunj
chamayasang kaththaith thappiyi rukkung
kuNamadain thutpat tokka-i rukkum – padipArAy

paditharung kaRpuk kaRpaka mukkaN
kodipasunj chithrak kuththara muththam
paNinitham paththuc chaththiyu kakkung – kumarEsA

paravasang kettet takkara niththam
paravuman parkkuc chiththiya Likkum
paramarvan thikkath thakkapa thaththan – gurunAthA

thodiyidum pathmak kaikkumi daikkunj
churuLpadum paththip pattaku zhaRkun
thukirkadain thoppith thitta-i thazhkkung – kuRamAnin

sudarpadung kacchuk kattumu laikkun
thuvaLunen jaththac chuththa-i rukkum
surarumvan thikkak kacchiyil niRkum – perumALE.

English Easy Version

chedi udampu aththith thetRi iraththam
cheRi narampu ittuk kattiya sattam
chiRai thiraNdu okkath thokka vinaip pantha – vikAram

thimira thungkath thaththuth thirai etRum
jenana pangaththuth thukka kadal kaN
thiru(ku) kurumpaip pattuc chuzhal theppam – karaNa Athi

kudi pukum pokkap pukkil iRappin
kudilam venthu okkuk kottil malaththin
kukai sumanthu ettuth thikkilu(m) mutRum – thadumARum

kuvalayam katRuk kaththi iLaikkum
chamaya sangaththaith thappi irukkum
kuNam adainthu udpattu okka irukkum – padi pArAy

padi tharum kaRpuk kaRpaka mukkaN
kodi pasum chithrakkuth thara(m) muththam
paNi nithampaththuc chaththi ukakkum – kumarEsA

paravasam kettu ettu akkaram niththam
paravum anparkku siththi aLikkum
paramar vanthikka thakka pathaththan – guru nAthA

thodi idum pathma kaikkum idaikkum
churuLpadum paththi patta kuzhaRkum
thukir kadainthu oppiththitta ithazhkkum – kuRa mAnin

chudar padum kacchu kattu mulaikkum
thuvaLum nenjaththa suththa irukkum
surarum vanthikka kacchiyil niRkum – perumALE.