திருப்புகழ் 312 கன க்ரவுஞ்சத்தில் (காஞ்சீபுரம்)

Thiruppugal 312 Kanakrounchaththil

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

கனக்ரவுஞ் சத்திற் சத்தியை விட்டன்
றசுரர்தண் டத்தைச் செற்றவி தழ்ப்பங்
கயனைமுன் குட்டிக் கைத்தளை யிட்டும் – பரையாளுங்


கடவுளன் புற்றுக் கற்றவர் சுற்றும்
பெரியதும் பிக்கைக் கற்பக முற்றங்
கரதலம் பற்றப் பெற்றவொ ருத்தன் – ஜகதாதை

புனவிளந் தத்தைக் கிச்சையு ரைக்கும்
புரவலன் பத்தர்க் குத்துணை நிற்கும்
புதியவன் செச்சைப் புட்பம ணக்கும் – பலபாரப்

புயனெனுஞ் சொற்கற் றுப்பிற கற்கும்
பசையொழிந் தத்தத் திக்கென நிற்கும்
பொருடொறும் பொத்தப் பட்டதொ ரத்தம் – பெறுவேனோ

அனல்விடுஞ் செக்கட் டிக்கய மெட்டும்
பொரவரிந் திட்டெட் டிற்பகு திக்கொம்
பணிதருஞ் சித்ரத் தொற்றையு ரத்தன் – திடமாக

அடியொடும் பற்றிப் பொற்கயி லைக்குன்
றதுபிடுங் கப்புக் கப்பொழு தக்குன்
றணிபுயம் பத்துப் பத்துநெ ரிப்புண் – டவனீடுந்

தனதொரங் குட்டத் தெட்பல டுக்குஞ்
சரியலன் கொற்றத் துக்ரவ ரக்கன்
தசமுகன் கைக்குக் கட்கம ளிக்கும் – பெரியோனுந்

தலைவியும் பக்கத் தொக்கவி ருக்குஞ்
சயிலமுந் தெற்குச் சற்குரு வெற்புந்
தணியலும் பெற்றுக் கச்சியில் நிற்கும் – பெருமாளே.

பதம் பிரித்தது

கன க்ரவுஞ்சத்தில் சத்தியை விட்டு அன்று
அசுரர் தண்டத்தைச் செற்று அவ்விதழ்ப்
பங்கயனை முன் குட்டிக் கைத்தளை இட்டு – உம்பரை ஆளும்

கடவுள் அன்புற்றுக் கற்றவர் சுற்றும்
பெரிய தும்பிக்கைக் கற்பக(ம்) முன்
தம் கர தலம் பற்றப் பெற்ற ஒருத்தன் – ஜக தாதை

புன இளம் தத்தைக்கு இச்சை உரைக்கும்
புரவலன் பத்தர்க்குத் துணை நிற்கும்
புதியவன் செச்சைப் புட்பம் மணக்கும் – பல பாரப்

புயன் எனும் சொல் கற்றுப் பிற கற்கும்
பசை ஒழிந்து அத்தத்து இக்கு என நிற்கும்
பொருள் தொறும் பொத்தப் பட்டது ஒர் அத்தம் – பெறுவேனோ

அனல் விடும் செக் கண் திக்(கு) கயம் எட்டும்
பொர அரிந்திட்ட எட்டில் பகுதிக் கொம்பு
அணி தரும் சித்ரத்து ஒற்றை உரத்தன் – திடமாக

அடியொடும் பற்றிப் பொன் கயிலைக் குன்றது
பிடுங்கப் புக்க பொழுது அக் குன்று
அணி புயம் பத்துப் பத்து நெரிப்பு – உண்டவன் நீடும்

தனது ஒர் அங்குட்டத்து எள் பல் அடுக்கும்
சரி அலன் கொற்றத்து உக்ர அரக்கன்
தச முகன் கைக்குக் கட்கம் அளிக்கும் – பெரியோனும்

தலைவியும் பக்கத்து ஒக்க இருக்கும்
சயிலமும் தெற்குச் சற்குரு வெற்பும்
தணியலும் பெற்றுக் கச்சியில் நிற்கும் – பெருமாளே.

English

kanakravunj caththiR saththiyai vittan
RasurarthaN daththaic cetRavi thazhppang
kayanaimun kuttik kaiththaLai yittum – paraiyALung

kadavuLan putRuk katRavar sutRum
periyathum pikkaik kaRpaka mutRang
karathalam patRap petRavo ruththan – jakathAthai

punaviLan thaththaik kicchaiyu raikkum
puravalan paththark kuththuNai niRkum
puthiyavan secchaip putpama Nakkum – palapArap

puyanenunj coRkat RuppiRa kaRkum
pasaiyozhin thaththath thikkena niRkum
porudoRum poththap pattatho raththam – peRuvEnO

analvidunj cekkat tikkaya mettum
poravarin thittet tiRpaku thikkom
paNitharunj cithrath thotRaiyu raththan – thidamAka

adiyodum patRip poRkayi laikkun
Rathupidung kappuk kappozhu thakkun
RaNipuyam paththup paththune rippuN – davaneedun

thanathorang kuttath thetpala dukkunj
cariyalan kotRath thukrava rakkan
thasamukan kaikkuk katkama Likkum – periyOnun

thalaiviyum pakkath thokkavi rukkunj
cayilamun theRkuc caRguru veRpun
thaNiyalum petRuk kacchiyil niRkum – perumALE.

English Easy Version

kana kravunjcaththil saththiyai vittu
anRu asurar thaNdaththaic cetRu avvithazhp
pangayanai mun kuttik kaiththaLai ittu – umparai ALum

kadavuL anputRuk katRavar sutRum
periya thumpikkaik kaRpaka(m)
mun tham kara thalam patRap petRa oruththan – jakathAthai

puna iLam thaththaikku icchai uraikkum
puravalan paththarkkuth thuNai niRkum
puthiyavan secchaip putpam maNakkum – pala pArap

puyan enum sol katRup piRa kaRkum
pasai ozhinthu aththaththu ikku ena niRkum
poruL thoRum poththap pattathu or aththam – peRuvEnO

anal vidum sek kaN thik(ku) kayam ettum
pora arinthitta ettil pakuthik kompu
aNi tharum sithraththu otRai uraththan – thidamAka

adiyodum patRip pon kayilaik kunRathu
pidungap pukka pozhuthu ak kunRu
aNi puyam paththup paththu nerippu – uNdavan needum

thanathu or anguttaththu eL pal adukkum
sari alan kotRaththu ukra arakkan
thasa mukan kaikkuk katkam aLikkum – periyOnum

thalaiviyum pakkaththu okka irukkum
sayilamum theRkuc caRguru veRpum
thaNiyalum petRuk kacchiyil niRkum – perumALE.