திருப்புகழ் 313 தெரியல் அம் செச்சை (காஞ்சீபுரம்)

Thiruppugal 313 Theriyalamsechchai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் – தனதான

தெரியலஞ் செச்சைக் கொத்துமு டிக்கும்
பரிதிகந் தத்தைச் சுற்றந டத்துஞ்
சிறைவிடுஞ் சொர்க்கத் துச்சுர ரைக்கங் – கையில்வாழுஞ்

சிறுவனென் றிச்சைப் பட்டுப ஜிக்கும்
படிபெரும் பத்திச் சித்ரக வித்வஞ்
சிறிதுமின் றிச்சித் தப்பரி சுத்தம் – பிறவாதே

பரிகரஞ் சுத்தத் தக்கப்ர புத்வம்
பதறியங் கட்டப் பட்டனர் தத்வம்
பலவையுங் கற்றுத் தர்க்கம தத்வம் – பழியாதே

பரபதம் பற்றப் பெற்றஎ வர்க்கும்
பரவசம் பற்றிப் பற்றற நிற்கும்
பரவ்ரதம் பற்றப் பெற்றிலன் மற்றென் – துயர்போமோ

சரியுடன் துத்திப் பத்திமு டிச்செம்
பணதரங் கைக்குக் கட்டிய நெட்டன்
தனிசிவன் பக்கத் தற்புதை பற்பந் – திரிசூலந்

தரிகரும் பொக்கத் தக்கமொ ழிச்சுந்
தரியரும் பிக்கப் பித்தத னத்தந்
தரிசுரும் பிக்குப் பத்ரையெ வர்க்குந் – தெரியாத

பெரியபண் டத்தைச் சத்திய பித்தன்
பிரிதியுண் கற்புப் பச்சையெ றிக்கும்
ப்ரபையள்தண் டிற்கைப் பத்மம டப்பெண் – கொடிவாழ்வே


பிரமரண் டத்தைத் தொட்டதொர் வெற்பும்
பிளவிடுஞ் சத்திக் கைத்தல நித்தம்
பெருமிதம் பெற்றுக் கச்சியில் நிற்கும் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் – தனதான

தெரியல் அம் செச்சைக் கொத்து முடிக்கும்
பரி திக் அந்தத்தைச் சுற்ற நடத்தும்
சிறை விடும் சொர்க்கத்துச் சுரரைக் – கங்கையில் வாழும்

சிறுவன் என்று இச்சைப்பட்டு பஜிக்கும்படி
பெரும் பத்திச் சித்ர கவித்வம்
சிறிதும் இன்றிச் சித்தப் பரிசுத்தம் – பிறவாதே

பரிகரம் சுத்தத் தக்க ப்ரபுத்வம்
பதறி அங்கு அட்டம் பட்டனர் தத்வம்
பலவையும் கற்றுத் தர்க்க மதத்(து) வம்பு – அழியாதே

பர பதம் பற்றப் பெற்ற எவர்க்கும்
பரவசம் பற்றிப் பற்று அற நிற்கும்
பர வ்ரதம் பற்றப் பெற்றிலன் மற்று என் – துயர் போமோ

சரியுடன் துத்திப் பத்தி முடிச் செம்
பண தரம் கைக்குக் கட்டிய நெட்டன்
தனி சிவன் பக்கத்து அற்புதை பற்பம் – திரி சூலம்

தரி கரும்பு ஒக்கத் தக்க மொழிச்
சுந்தரி அரும்பி கப்பித்த தனத்து
அந்தரி சுரும்பு இக்குப் பத்ரை எவர்க்கும் – தெரியாத

பெரிய பண் தத்தைச் சத்திய பித்தன்
பிரிதி உண் கற்புப் பச்சை எறிக்கும்
ப்ரபையள் தண்டில் கைப் பத்ம மடப் பெண் – கொடி வாழ்வே

பிரமர் அண்டத்தைத் தொட்டது ஒர் வெற்பும்
பிளவிடும் சத்திக் கைத்தல நித்தம்
பெருமிதம் பெற்றுக் கச்சியில் நிற்கும் – பெருமாளே.

English

theriyalam checchaik koththumu dikkum
parithikan thaththaic chutRana daththum
chiRaividum sorkkath thucchura raikkan – gaiyilvAzhum

chiRuvanen Ricchaip pattuba jikkum
padiperum paththic chithraka vithvam
siRithumin Ricchith thappari suththam – piRavAthE

parikaram suththath thakkapra puthvam
pathaRiyang kattap pattanar thathvam
palavaiyung katRuth tharkkama thathvam – pazhiyAthE

parapatham patRap petRae varkkum
paravasam patRip patRaRa niRkum
paravratham patRap petRilan matRen – thuyarpOmO

sariyudan thuththip paththimu dicchem
paNatharam kaikkuk kattiya nettan
thanisivan pakkath thaRputhai paRpan – thiricUlan

tharikarum pokkath thakkamo zhicchun
thariyarum pikkap piththatha naththan
tharisurum pikkup pathraiye varkkun – theriyAtha

periyapaN daththaic chaththiya piththan
pirithiyuN kaRpup pacchaiye Rikkum
prapaiyaLthaN diRkaip pathmama dappeN – kodivAzhvE

piramaraN daththaith thottathor veRpum
piLavidum saththik kaiththala niththam
perumitham petRuk kacchiyil niRkum – perumALE.

English Easy Version

theriyal am secchaik koththu mudikkum
pari thik anthaththaic chutRa nadaththum
siRai vidum sorkkaththuc churaraik – kangaiyil vAzhum

siRuvan enRu icchaip pattu pajikkumpadi
perum paththic chithra kavithvam
siRithum inRic chiththap parisuththam – piRavAthE

parikaram suththath thakka praputhvam
pathaRi angu attam pattanar thathvam
palavaiyum katRuth tharkka mathath(thu) vampu – azhiyAthE

para patham patRap petRa evarkkum
paravasam patRip patRu aRa niRkum
para vratham patRap petRilan matRu en – thuyar pOmO

sariyudan thuththip paththi mudic chem
paNa tharam kaikkuk kattiya nettan
thani sivan pakkaththu aRputhai paRpam – thiri cUlam

thari karumpu okkath thakka mozhic
chunthari arumpi kappiththa thanaththu
anthari surumpu ikkup pathrai evarkkum – theriyAtha

periya paN thaththaic chaththiya piththan
pirithi uN kaRpup pacchai eRikkum
prapaiyaL thaNdil kaip pathma madap peN – kodi vAzhvE

piramar aNdaththaith thottathu or veRpum
piLavidum saththik kaiththala niththam
perumitham petRuk kacchiyil niRkum – perumALE.