திருப்புகழ் 315 கறை இலங்கும் (காஞ்சீபுரம்)

Thiruppugal 315 Karaiilangkum

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் – தனதான

கறையிலங் குக்ரச் சத்தித ரிக்குஞ்
சரவணன் சித்தத் துக்குளொ ளிக்குங்
கரவடன் கொற்றக் குக்குட வத்தன் – தனிவீரக்

கழலிடும் பத்மக் கட்செவி வெற்பன்
பழநிமன் கச்சிக் கொற்றவன் மற்றுங்
கடகவஞ் சிக்குக் கர்த்தனெ னச்செந் – தமிழ்பாடிக்

குறையிலன் புற்றுக் குற்றம றுக்கும்
பொறைகள்நந் தற்பப் புத்தியை விட்டென்
குணமடங் கக்கெட் டுக்குண மற்றொன் – றிலதான

குணமடைந் தெப்பற் றுக்களு மற்றுங்
குறியொடுஞ் சுத்தப் பத்தரி ருக்குங்
குருபதஞ் சித்திக் கைக்கருள் சற்றுங் – கிடையாதோ

பிறைகரந் தைக்கொத் துப்பணி மத்தந்
தலையெலும் பப்புக் கொக்கிற கக்கம்
பிரமனன் றெட்டற் கற்றதி ருக்கொன் – றையும்வேணிப்

பிறவுநின் றொக்கத் தொக்கும ணக்குஞ்
சரணியம் பத்மக் கைக்கொடி முக்கண்
பெறுகரும் பத்தக் கத்தருள் நற்பங் – கயவாவி

திறைகொளுஞ் சித்ரக் குத்துமு லைக்கொம்
பறியுமந் தத்தைக் கைக்கக மொய்க்குந்
த்ரிபுரைசெம் பட்டுக் கட்டுநு சுப்பின் – திருவான

தெரிவையந் துர்க்கிச் சத்தியெ வர்க்குந்
தெரிவருஞ் சுத்தப் பச்சைநி றப்பெண்
சிறுவதொண் டர்க்குச் சித்திய ளிக்கும் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் – தனதான

கறை இலங்கும் உக்ரச் சத்தி தரிக்கும்
சரவணன் சித்தத்துக்குள் ஒளிக்கும்
கரவடன் கொற்றக் குக்குடவத்தன் – தனி வீரக்

கழல் இடும் பத்ம கண் செவி வெற்பன்
பழநி மன் கச்சி கொற்றவன் மற்றும்
கடக வஞ்சிக்கு கர்த்தன் எனச்செம் – தமிழ் பாடி

குறை இல் அன்புற்று குற்றம் அறுக்கும்
பொறைகள் நந்த அற்பப் புத்தியை விட்டு என்
குணம் அடங்கக் கெட்டு குணம் மற்று ஒன்று – இலதான

குணம் அடைந்து எப்பற்றுக்களும் அற்று
குறியொடும் சுத்த பத்தர் இருக்கும்
குரு பதம் சித்திக்கைக்கு அருள் சற்றும் – கிடையாதோ

பிறை கரந்தை கொத்து பணி மத்தம்
தலை எலும்பு அப்பு கொக்கின் இறகு அக்கம்
பிரமன் அன்று எட்டற்கு அற்ற திரு – கொன்றையும் வேணி

பிறவு நின்று ஒக்க தொக்கு மணக்கும்
சரணி அம் பத்ம கைக் கொடி முக்கண்
பெறு கரும்பு அத் தக்கது அருள் நல் – பங்கய வாவி

திறை கொளும் சித்ரக் குத்து முலைக் கொம்பு
அறியும் அம் தத்தை கைக்கு அகம் மொய்க்கும்
த்ரிபுரை செம்பட்டுக் கட்டு நுசுப்பின் – திருவான

தெரிவை அம் துர்க்கி சத்தி எவர்க்கும்
தெரி அரும் சுத்த பச்சை நிற பெண்
சிறுவ தொண்டர்க்கு சித்தி அளிக்கும் – பெருமாளே.

English

kaRaiyilang ugra saththidha rikkum
saravaNan chiththath thukkuLo Likkung
karavadan kotrak kukkuda vaththan – thaniveerak

kazhalidum padhmak katsevi veRpan
pazhaniman kachchik kotravan matrung
kataka vanjikkuk karthanena sen – thamizhpAdi

kuRaiyilan putruk kutramaRukkum
poRaigaLnan thaRpap buththiyai vitten
guNamadang gakket tuguNa matrondr – iladhAna

guNamadain dheppatr trukkaLu matrung
kuRiyodum suddhap baththarirukkum
gurupadham siddhik kaikkaruL satrung – kidaiyAdhO

piRaikaran dhaikkoth thuppaNi maththam
thalaiyelum bappuk kokkiRa kakkam
biramanan drettaR katrathiruk kon – draiyumvENip

piRavunin drokkath thokku maNakkum
charaNiyam padhmak kaikkodi mukkaN
peRukarum baththak kaththAruL naR – pangayavAvi

thiRaikoLum chithrak kuththu mulaikkombu
aRiyumandh dhaththaik kaikkaga moykkun
thripuraisem pattuk kattunu suppin – thiruvAna

therivaiyan dhurgi saththi evarkkun
therivarum suddhap pachchaini RappeN
siRuvathoN darkku sidhdhi aLikkum – perumALE.

English Easy Version

kaRaiyilang ugra saththidha rikkum
saravaNan chiththath thukkuLo Likkung
karavadan kotrak kukkuda vaththan – thaniveerak

kazhalidum padhmak katsevi veRpan
pazhaniman kachchik kotravan matrung
kataka vanjikkuk karthanena sen – thamizhpAdi

kuRaiyil anputru kutramaRukkum
poRaigaL nantha aRpap buththiyai vittu engu
Namadang gakkettu guNa matrondr – iladhAna

guNamadaindhu: eppatr trukkaLu matrum
kuRiyodum suddhap baththarirukkum
gurupadham siddhik kaikku aruL satrung – kidaiyAdhO

piRaikaran dhaikkoth thuppaNi maththam
thalaiyelum bappuk kokkiRa kakkam
biramanan drettaR katrathiruk kon – draiyumvENi

piRavunin drokkath thokku maNakkum
charaNiyam padhmak kaikkodi mukkaN
peRukarum baththak kaththAruL naR – pangayavAvi

thiRaikoLum chithrak kuththu mulaikkombu
aRiyumandh dhaththaik kaikkaga moykkun
thripurai sem pattuk kattunu suppin – thiruvAna

therivai yan dhurgi saththi evarkkun
therivarum suddhap pachchaini RappeN
siRuva thoN darkku sidhdhi aLikkum – perumALE.