திருப்புகழ் 316 செறிதரும் செப்பத்து (காஞ்சீபுரம்)

Thiruppugal 316 Seridharumseppaththu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் – தனதான

செறிதரும் செப்பத் துற்பல வெற்பும்
பிறிதுமங் கத்தைக் குற்றவி ருப்புஞ்
சிகரிதுண் டிக்கக் கற்றத னிச்செஞ் – சுடர்வேலும்

திரள்புயங் கொத்துப் பட்டவ னைத்துந்
தெளியநெஞ் சத்துப் புற்றும யக்கம்
திகழ்ப்ரபஞ் சத்தைப் புற்புத மொக்கும் – படிநாடும்

அறிவறிந் தத்தற் கற்றது செப்புங்
கடவுளன் பத்தர்க் கச்சம றுத்தன்
பருள்பவன் பொற்புக் கச்சியுள் நிற்கும் – பெருமானென்

றவிழுமன் புற்றுக் கற்றும னத்தின்
செயலொழிந் தெட்டப் பட்டத னைச்சென்
றடைதரும் பக்வத் தைத்தமி யெற்கென் – றருள்வாயே

குறியவன் செப்பப் பட்டஎ வர்க்கும்
பெரியவன் கற்பிக் கப்படு சுக்ரன்
குலைகுலைந் துட்கக் சத்யமி ழற்றுஞ் – சிறுபாலன்

குதலையின் சொற்குத் தர்க்கமு ரைக்குங்
கனகனங் கத்திற் குத்திநி ணச்செங்
குடர்பிடுங் கித்திக் குற்றமு கச்சிங் – கமுராரி

பொறிவிடுந் துத்திக் கட்செவி யிற்கண்
துயில்கொளுஞ் சக்ரக் கைக்கிரி சுத்தம்
புயலெனும் பொற்புப் பெற்றநி றத்தன் – ஜகதாதை

புனிதசங் கத்துக் கைத்தல நிர்த்தன்
பழையசந் தத்தைப் பெற்றம டப்பெண்
புகலுகொண் டற்குச் சித்திய ளிக்கும் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் – தனதான

செறிதரும் செப்பத்து உற்பல வெற்பும்
பிறிதும் அங்கு அத்தைக்கு உற்ற இருப்பும்
சிகரிதுண்டிக்கக் கற்ற தனிச்செஞ் – சுடர்வேலும்

திரள்புயங் கொத்துப் பட்ட அனைத்தும்
தெளியநெஞ்சத் துப்பு உற்று மயக்கம்
திகழ் ப்ரபஞ்சத்தைப் புற்புதம் ஒக்கும்படி – நாடும்

அறிவறிந்து அத்தற் கற்றது செப்புங்
கடவுளன் பத்தர்க்கு அச்சம் அறுத்தன்
பருள்பவன் பொற்புக் கச்சியுள் நிற்கும் – பெருமானென்று

அவிழும் அன்புற்றுக் கற்று மனத்தின்
செயலொழிந்து எட்டப் பட்டதனைச்சென்று
அடைதரும் பக்வத்தைத் தமியெற்கு – என்றருள்வாயே

குறியவன் செப்பப் பட்டஎவர்க்கும்
பெரியவன் கற்பிக்கப்படு சுக்ரன்
குலைகுலைந்து உட்கக் சத்யமிழற்றுஞ் – சிறுபாலன்

குதலையின் சொற்குத் தர்க்கமு ரைக்குங்
கனகன் அங்கத்தில் குத்தி நிணச்செங்
குடர் பிடுங்கி திக்குற்ற முகச்சிங்க – முராரி

பொறிவிடுந் துத்திக் கட்செவி யிற்கண்
துயில்கொளுஞ் சக்ரக் கைக்கிரி சுத்தம்
புயலெனும் பொற்புப் பெற்றநி றத்தன் – ஜகதாதை

புனிதசங்கத்துக் கைத்தல நிர்த்தன்
பழையசந்தத்தைப் பெற்றமடப்பெண்
புகலுகொண் டற்குச் சித்தியளிக்கும் – பெருமாளே.

English

seRitharum seppath thuRpala veRpum
piRithumang kaththaik kuRRavi ruppunj
sikarithuN dikkak kaRRatha nicchenj – sudarvElum

thiraLpuyang koththup pattava naiththun
theLiyanenj caththup puRRuma yakkam
thikazhprapanj caththaip puRputha mokkum – padinAdum

aRivaRin thaththaR kaRRathu ceppung
kadavuLan paththarkka kacchama Ruththan
paruLpavan poRpuk kacchiyuL niRkum – perumAnen

Ravizhuman puRRuk kaRRuma naththin
seyalozhin thettap pattatha naicchen
Radaitharum pakvath thaiththami yeRken – RaruLvAyE

kuRiyavan ceppap pattae varkkum
periyavan kaRpik kappadu sukran
kulaikulain thutkach cathyami zhaRRunj – ciRupAlan

kuthalaiyin coRkuth tharkkamu raikkung
kanakanang kaththiR kuththini Naccheng
kudarpidung kiththik kuRRamu kacching – kamurAri

poRividun thuththik katchevi yiRkaN
thuyilkoLunj cakrak kaikkiri suththam
puyalenum poRpup peRRani Raththan – jakathAthai

punithasang kaththuk kaiththala nirththan
pazhaiyasan thaththaip peRRama dappeN
pukalukoN daRkuch chiththiya Likkum – perumALE.

English Easy Version

ceRitharum ceppath thuRpala veRpum
piRithumang kaththaik kuRRavi ruppunj
cikarithuN dikkak kaRRatha nicchenjcudar – vElum

thiraLpuyang koththup pattava naiththun
theLiyanenjcath thuppuRRu mayakkam
thikazhprapanj caththaip puRputha mokkum – padinAdum

aRivaRinthu aththaR kaRRathu ceppung
kadavuLan paththarkka kacchama Ruththu
anparuLpavan poRpuk kacchiyuL niRkum – perumAnenRu

avizhum anpuRRuk kaRRu manaththin
seyalozhinthu ettap pattatha naicchenRadaitharum
pakvath thaiththami yeRken – RaruLvAyE

kuRiyavan ceppap pattae varkkum
periyavan kaRpik kappadu sukran
kulaikulain thutkach cathyamizhaRRunj – ciRupAlan

kuthalaiyin coRkuth tharkkamu raikkung
kanakan angkaththiR kuththi niNaccheng
kudarpidung kiththik kuRRa mu kacching – ka murAri

poRividun thuththik katchevi yiRkaN
thuyilkoLunj cakrak kaikkiri suththam
puyalenum poRpup peRRa niRaththan – jakathAthai

punithasang kaththuk kaiththala nirththan
pazhaiyasanthaththaip peRRama dappeN
pukalukoNdaRku chiththiya Likkum – perumALE.