Thiruppugal 317 Ariaiyanputpi
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் – தனதான
அரியயன் புட்பிக் கக்குழு மிக்கொண்
டமரர்வந் திக்கத் தட்டுரு வச்சென்
றவுணரங் கத்தைக் குத்திமு றித்தங் – கொருகோடி
அலகைநின் றொத்தித் தித்திய றுத்தும்
பலவியங் கொட்டச் சக்கடி கற்றந்
தரியுடன் பற்றிக் குச்சரி மெச்சும் – படிபாடிப்
பரிமுகங் கக்கச் செக்கண்வி ழித்தும்
பவுரிகொண் டெட்டுத் திக்கையு டைத்தும்
படுகளம் புக்குத் தொக்குந டிக்கும் – படிமோதிப்
படைபொருஞ் சத்திப் பத்மநி னைத்துஞ்
சரவணன் கச்சிப் பொற்பனெ னப்பின்
பரவியுஞ் சித்தத் துக்குவ ரத்தொண் – டடைவேனோ
பெரியதண் செச்சைக் கச்சணி வெற்பும்
சிறியவஞ் சிக்கொத் தெய்த்தநு சுப்பும்
ப்ரிதியொழிந் தொக்கக் கைக்கிளை துத்தங் – குரலாதி
பிரிவில்கண் டிக்கப் பட்டவு ருட்டும்
கமுகமுஞ் சிற்பச் சித்ரமு ருக்கும்
பிரதியண் டத்தைப் பெற்றருள் சிற்றுந் – தியும்நீலக்
கரியகொண் டற்கொப் பித்தக துப்புந்
திலதமுஞ் செப்பொற் பட்டமு முத்தின்
கனவடங் கட்டப் பட்டக ழுத்துந் – திருவான
கருணையுஞ் சுத்தப் பச்சைவ னப்புங்
கருதுமன் பர்க்குச் சித்திய ளிக்குங்
கவுரியம் பைக்குப் புத்ரஎ வர்க்கும் – பெருமாளே.
பதம் பிரித்தது
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் – தனதான
அரி அயன் புட்பிக்கக் குழுமிக் கொண்டு
அமரர் வந்திக்க தட்டு உருவச் சென்று
அவுணர் அங்கத்தைக் குத்தி முறித்து அங்கு – ஒரு கோடி
அலகை நின்று ஒத்தித் தித்தி அறுத்தும்
பல இயம் கொட்டச் சக்கடி கற்று
அந்தரியுடன் பற்றிக் குச்சரி மெச்சும் – படி பாடி
பரி முகம் கக்கச் செக்கண் விழித்தும்
பவுரி கொண்டு எட்டுத் திக்கை உடைத்தும்
படு களம் புக்குத் தொக்கு நடிக்கும் – படி மோதி
படை பொரும் சத்திப் பத்ம நினைத்தும்
சரவணன் கச்சி பொற்பன் எனப் பின்
பரவியும் சித்தத்துக்கு வரத் தொண்டு – அடைவேனோ
பெரிய தண் செச்சைக் கச்சு அணி வெற்பும்
சிறிய வஞ்சிக் கொத்து எய்த்த நுசுப்பும்
ப்ரிதி ஒழிந்து ஒக்கக் கைக்கிளை துத்தம் – குரல் ஆதி
பிரிவில் கண்டு இக்கப்பட்ட உருட்டும்
கமுகமும் சிற்பச் சித்ரம் உருக்கும்
பிரதி அண்டத்தைப் பெற்று அருள் சிற்று – உந்தியும் நீலக்
கரிய கொண்டற்கு ஒப்பித்த கதுப்பும்
திலகமும் செம் பொன் பட்டமும் முத்தின்
கன வடம் கட்டப்பட்ட கழுத்தும் – திருவான
கருணையும் சுத்தப் பச்சை வனப்பும்
கருதும் அன்பர்க்குச் சித்தி அளிக்கும்
கவுரி அம்பைக்கு புத்ர எவர்க்கும் – பெருமாளே.
English
ariyayan putpik kakkuzhu mikkoN
damararvan thikkath thatturu vacchen
RavuNaran gaththaik kuththimu Riththan – gorukOdi
alakainin Roththith thiththiya Ruththum
palaviyang kottac chakkadi katRan
thariyudan patRik kucchari mecchum – padipAdip
parimukang kakkac chekkaNvi zhiththum
pavurikoN dettuth thikkaiyu daiththum
padukaLam pukkuth thokkuna dikkum – padimOthip
padaiporunj caththip pathmani naiththum
saravaNan kacchip poRpane nappin
paraviyum siththath thukkuva raththoN – dadaivEnO
periyathaN secchaik kacchaNi veRpum
siRiyavan jikkoth theyththanu suppum
prithiyozhin thokkak kaikkiLai thuththang – kuralAthi
pirivilkaN dikkap pattavu ruttum
kamukamum siRpac chithramu rukkum
pirathiyaN daththaip petRaruL sitRun – thiyumneelak
kariyakoN daRkop piththaka thuppum
thilathamum ceppoR pattamu muththin
kanavadang kattap pattaka zhuththum – thiruvAna
karuNaiyum suththap pacchaiva nappum
karuthuman parkkuc chiththiya Likkum
kavuriyam paikkup puthrae varkkum – perumALE.
English Easy Version
ari ayan putpikkak kuzhumik koNdu
amarar vanthikka thattu uruvac chenRu
avuNar angaththaik kuththi muRiththu – angu oru kOdi
alakai ninRu oththith thiththi aRuththum
pala iyam kottac chakkadi katRu
anthariyudan patRik kucchari mecchum – padi pAdi
pari mukam kakkac chekkaN vizhiththum
pavuri koNdu ettuth thikkai udaiththum
padu kaLam pukkuth thokku nadikkum – padi mOthi
padai porum saththip pathma ninaiththum
saravaNan kacchi poRpan enap pin
paraviyum siththaththukku varath thoNdu – adaivEnO
periya thaN secchaik kacchu aNi veRpum
siRiya vanjik koththu eyththa nusuppum
prithi ozhinthu okkak kaikkiLai thuththam – kural Athi
pirivil kaNdu ikkappatta uruttum
kamukamum siRpac chithram urukkum
pirathi aNdaththaip petRu aruL sitRu – unthiyum neelak
kariya koNdaRku oppiththa kathuppum
thilakamum sem pon pattamum muththin
kana vadam kattappatta kazhuththum – thiruvAna
karuNaiyum suththap pacchai vanappum
karuthum anparkkuc chiththi aLikkum
kavuri ampaikku puthra evarkkum – perumALE.