திருப்புகழ் 318 கனி தரும் கொக்கு (காஞ்சீபுரம்)

Thiruppugal 318 Kanitharumkokku

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் – தனதான

கனிதருங் கொக்குக் கட்செவி வெற்பும்
பழநியுந் தெற்குச் சற்குரு வெற்புங்
கதிரையுஞ் சொற்குட் பட்டதி ருச்செந் – திலும்வேலும்

கனவிலுஞ் செப்பத் தப்புமெ னைச்சங்
கடவுடம் புக்குத் தக்கவ னைத்துங்
களவுகொண் டிட்டுக் கற்பனை யிற்கண் – சுழல்வேனைப்

புனிதனம் பைக்குக் கைத்தல ரத்நம்
பழையகங் கைக்குற் றப்புது முத்தம்
புவியிலன் றைக்கற் றெய்ப்பவர் வைப்பென் – றுருகாஎப்


பொழுதும் வந்திக்கைக் கற்றஎ னைப்பின்
பிழையுடன் பட்டுப் பத்தருள் வைக்கும்
பொறையையென் செப்பிச் செப்புவ தொப்பொன் – றுளதோதான்

அனனியம் பெற்றற் றற்றொரு பற்றுந்
தெளிதருஞ் சித்தர்க் குத்தெளி சிற்கொந்
தமலைதென் கச்சிப் பிச்சிம லர்க்கொந் – தளபாரை

அறவிநுண் பச்சைப் பொற்கொடி கற்கண்
டமுதினுந் தித்திக் கப்படு சொற்கொம்
பகிலஅண் டத்துற் பத்திசெய் முத்தின் – பொலமேருத்

தனிவடம் பொற்புப் பெற்றமு லைக்குன்
றிணைசுமந் தெய்க்கப் பட்டநு சுப்பின்
தருணிசங் குற்றுத் தத்துதி ரைக்கம் – பையினூடே

தவமுயன் றப்பொற் றப்படி கைக்கொண்
டறமிரண் டெட்டெட் டெட்டும் வளர்க்கும்
தலைவிபங் கர்க்குச் சத்யமு ரைக்கும் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் – தனதான

கனி தரும் கொக்கு கண் செவி வெற்பும்
பழனியும் தெற்குச் சற்குரு வெற்பும்
கதிரையும் சொற்கு உட்பட்ட – திருச்செந்திலும் வேலும்

கனவிலும் செப்பத் தப்பும் எ(ன்)னை சங்கட
உடம்புக்குத் தக்க அனைத்தும்
களவு கொண்டிட்டு கற்பனையில் கண் – சுழல்வேனை

புனிதன் அம்பைக்குக் கைத்தல ரத்நம்
பழைய கங்கைக்கு உற்ற புது முத்தம்
புவியில் அன்றைக்கு அற்று எய்ப்பவர் வைப்பு என்று – உருகா எப்

பொழுதும் வந்திக்கைக்கு அற்ற எ(ன்)னை பின்
பிழையுடன் பட்டு பத்தருள் வைக்கும்
பொறையை என் செப்பி செப்புவது ஒப்பு ஒன்று – உளதோ தான்

அனனியம் பெற்று அற்று அற்று ஒரு பற்றும்
தெளி தரும் சித்தர்க்கு தெளிசில் கொந்த
அமலை தென் கச்சி பிச்சி மலர் – கொந்தள பாரை

அறவி நுண் பச்சை பொன் கொடி கற்கண்டு
அமுதினும் தித்திக்கப்படு சொல் கொம்பு
அகில அண்டத்து உற்பத்தி செய் முத்தின் – பொல(ம்) மேரு

தனி வடம் பொற்பு பெற்ற முலை குன்று
இணை சுமந்து எய்க்கப்பட்ட நுசுப்பின்
தருணி சங்கு உற்று தத்து திரை – கம்பையினூடே

தவம் முயன்று அப் பொற்றப் படி கைக்கொண்டு
அறம் இரண்டு எட்டுஎட்டும் வளர்க்கும்
தலைவி பங்கர்க்கு சத்யம் உரைக்கும் – பெருமாளே.

English

kanitharung kokkuk katchevi veRpum
pazhaniyum theRku saRguru veRpung
kadhiraiyum soRkut patta thiruchchendh – dhilumvElum

kanavilum seppath thappum enaiccang
kata udambukkuth thakka anaiththung
kaLavukoN dittuk kaRpanaiyiR kaN – suzhalvEnaip

punidhanam baikkuk kaiththala rathnam
pazhaiya gangaikku utrappudhu muththam
buviyilan draikkatr traippavar vaippen – drurugAep

pozhudhum vandhikkaik katra enaippin
pizhaiyudan pattup baththaruL vaikkum
poRaiyaiyen ceppi ceppuvadh oppondr – uLadhOthAn

ananiyam petratr tratroru patrun
theLitharum chiththark kuththeLi siRkon
dhamalaithen kachchip pichchima larkkon – dhaLa pArai

aRavinuN pachchaip poRkodi kaRkaNd
amudhinum thiththik kappadu soRkomb
akila aNdaththuR paththisey muththin – polamEruth

thanivadam poRpup petra mulaik kun
driNaisumandh dheykkap patta nusuppin
tharuNisang kutruth thaththuthi raikkam – baiyinUdE

thavamuyan drappotr trappadi kaikkkoN
daRamiraN dettet tettum vaLarkkum
thalaivipang karkku sathyamu raikkum – perumALE.

English Easy Version

kanitharung kokkuk katchevi veRpum
pazhaniyum theRku saRguru veRpung
kadhiraiyum soRkut patta thiruchchendh – dhilum vElum

kanavilum seppath thappum enai sangkata
udambukkuth thakka anaiththung
kaLavukoN dittuk kaRpanaiyiR kaN – suzhalvEnaip

punidhanam baikkuk kaiththala rathnam
pazhaiya gangaikku utrappudhu muththam
buviyilan draikkatr traippavar vaippen – drurugA ep

pozhudhum vandhikkaik katra enai pin
pizhaiyudan pattup baththaruL vaikkum
poRaiyaiyen seppi seppuvadh oppondr – uLadhOthAn

ananiyam petratr tratroru patrun
theLitharum chiththark kuththeLi siR kondham
alaithen kachchip pichchima larkkon – dhaLa pArai

aRavinuN pachchaip poRkodi kaRkaN
damudhinum thiththik kappadu soRkombu
akila aNdaththuR paththisey muththin – polamEru

thanivadam poRpup petra mulaik kun
driNaisumandh dheykkap patta nusuppin
tharuNi sang kutruth thaththuthi raikkam – baiyinUdE

thavamuyan drappotr trappadi kaikkkoNdu
aRamiraN dettet tettum vaLarkkum
thalaivi pang karkku sathyamu raikkum – perumALE.