Thiruppugal 319 Thasaidhurunthokku
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் – தனதான
தசைதுறுந் தொக்குக் கட்டளை சட்டஞ்
சரியவெண் கொக்குக் கொக்கந ரைத்தந்
தலையுடம் பெய்த்தெற் புத்தளை நெக்கிந் – த்ரியமாறித்
தடிகொடுந் திக்குத் தப்பந டக்கும்
தளர்வுறுஞ் சுத்தப் பித்தவி ருத்தன்
தகைபெறும் பற்கொத் துக்கள னைத்துங் – கழலாநின்
றசலருஞ் செச்செச் செச்செயெ னச்சந்
ததிகளும் சிச்சிச் சிச்சியெ னத்தங்
கரிவையும் துத்துத் துத்துவெ னக்கண் – டுமியாமற்
றவருநிந் திக்கத் தக்கபி றப்பிங்
கலமலஞ் செச்சைச் சித்ரம ணித்தண்
டையரவிந் தத்திற் புக்கடை தற்கென் – றருள்வாயே
குசைமுடிந் தொக்கப் பக்கரை யிட்டெண்
டிசையினுந் தத்தப் புத்தியை நத்துங்
குரகதங் கட்டிக் கிட்டிந டத்துங் – கதிர்நேமிக்
குலரதம் புக்கொற் றைக்கணை யிட்டெண்
டிரிபுரஞ் சுட்டுக் கொட்டைப ரப்புங்
குரிசில்வந் திக்கக் கச்சியில் நிற்குங் – கதிர்வேலா
திசைமுகன் தட்டுப் பட்டெழ வற்குஞ்
சிகரியுங் குத்துப் பட்டுவி ழத்தெண்
டிரையலங் கத்துப் புக்குல விச்சென் – றெதிரேறிச்
சிரமதுங் கப்பொற் கட்டிகை யிட்டன்
றவுணர்நெஞ் சிற்குத் திக்கறை கட்கஞ்
சிதறிநின் றெட்டிப் பொட்டெழ வெட்டும் – பெருமாளே.
பதம் பிரித்தது
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் – தனதான
தசை துறுந்து ஒக்குக் கட்டு அளை சட்ட(க)ம்
சரிய வெண் கொக்குக்கு ஒக்க நரைத்து அம்
தலை உடம்பு எய்த்து எற்புத் தளை நெக்கி – இந்த்ரிய(ம்)\ மாறி
தடி கொ(ண்)டும் திக்குத் தப்ப நடக்கும்
தளர்வு உறும் சுத்தப் பித்த விருத்தன்
தகை பெறும் பல் கொத்துக்கள் அனைத்தும் – கழலா நின்று
அசலரும் செச்செ செச்செ எனச்
சந்ததிகளும் சிச்சி சிச்சி என தங்கு
அரிவையும் துத்து துத்து எனக் கண்டு – உமியா
மற்றவரு(ம்) நிந்திக்கத் தக்க பிறப்பு
இங்கு அலம் அலம் செச்சைச் சித்ர மணித் தண்டை
அரவிந்தத்தில் புக்கு அடைதற்கு என்று – அருள்வாயே
குசை முடிந்து ஒக்கப் பக்கரை இட்டு எண்
திசையினும் தத்தப் புத்தியை நத்தும்
குரகதம் கட்டிக் கிட்டி நடத்தும் – கதிர் நேமி
குல ரதம் புக்கு ஒற்றைக் கணை இட்டு எண்
திரிபுரம் சுட்டுக் கொட்டைப் பரப்பும்
குரிசில் வந்திக்கக் கச்சியில் நிற்கும் – கதிர் வேலா
திசை முகன் தட்டுப் பட்டு எழ வற்கும்
சிகரியும் குத்துப்பட்டு விழ தெண்
திரை அலங்கத்துப் புக்கு உலவிச் சென்று – எதிர் ஏறிச்
சிரம் அதுங்க பொன் கண் திகை இட்டு அன்று
அவுணர் நெஞ்சில் குத்திக்கறை கட்கம்
சிதறி நின்று எட்டிப் பொட்டு எழ வெட்டும் – பெருமாளே.
English
thasaithuRun thokkuk kattaLai sattam
chariyaveN kokkuk kokkana raiththan
thalaiyudam peyththeR puththaLai nekkin – thriyamARith
thadikodun thikkuth thappana dakkum
thaLarvuRum suththap piththavi ruththan
thakaipeRum paRkoth thukkaLa naiththum- kazhalAnin
Rasalarum checchec checcheye nacchan
thathikaLum chicchic chicchiye naththang
arivaiyum thuththuth thuththuve nakkaN – dumiyAmat
Ravarunin thikkath thakkapi Rapping(u)
alamalam checchaic chithrama NiththaN
daiyaravin thaththiR pukkadai thaRken – RaruLvAyE
kusaimudin thokkap pakkarai yitteN
disaiyinun thaththap puththiyai naththung
kurakathang kattik kittina daththum – kathirnEmik
kularatham pukkot RaikkaNai yitteN
diripuram chuttuk kottaipa rappum
kurisilvan thikkak kacchiyil niRkung – kathirvElA
thisaimukan thattup pattezha vaRkum
sikariyung kuththup pattuvi zhaththeN
diraiyalang kaththup pukkula vicchen – RethirERic
chiramathung kappoR kattikai yittan
RavuNarnen jiRkuth thikkaRai katkam
sithaRinin Rettip pottezha vettum – perumALE.
English Easy Version
thasai thuRunthu okkuk kattu aLai satta(ka)m
sariya veN kokkukku okka naraiththu
am thalai udampu eyththu eRputh thaLai – nekki inthriya(m) mARi
thadi ko(N)dum thikkuth thappa nadakkum
thaLarvu uRum suththap piththa viruththan
thakai peRum pal koththukkaL anaiththum – kazhalA ninRu
asalarum checche checche enac chan
thathikaLum chicchi chicchi ena thangu
arivaiyum thuththu thuththu enak – kaNdu umiyA mat
Ravaru(m) ninthikkath thakka piRappu ingu
alam alam secchaic chithra maNith thaNdai
aravinthaththil pukku adaithaRku enRu – aruLvAyE
kusai mudinthu okkap pakkarai ittu eN
thisaiyinum thaththap puththiyai naththum
kurakatham kattik kitti nadaththum – kathir nEmi
kula ratham pukku otRaik kaNai ittu eN
thiripuram suttuk kottaip parappum
kurisil vanthikkak kacchiyil niRkum – kathir vElA
thisai mukan thattup pattu ezha vaRkum
sikariyum kuththuppattu vizha theN
thirai alangaththup pukku ulavic chenRu – ethir ERic
chiram athunga pon kaN thikai ittu anRu
avuNar nenjsil kuththik kaRai kadkam
sithaRi ninRu ettip pottu ezha vettum – perumALE.