Thiruppugal 320 Puraipadunjchetra
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் – தனதான
புரைபடுஞ் செற்றக் குற்றம னத்தன்
தவமிலன் சுத்தச் சத்யஅ சத்யன்
புகலிலன் சுற்றச் செத்தையுள் நிற்குந் – துரிசாளன்
பொறையிலன் கொத்துத் தத்வவி கற்பஞ்
சகலமும் பற்றிப் பற்றற நிற்கும்
பொருளுடன் பற்றுச் சற்றுமில் வெற்றன் – கொடியேனின்
கரையறுஞ் சித்ரச் சொற்புகழ் கற்குங்
கலையிலன் கட்டைப் புத்தியன் மட்டன்
கதியிலன் செச்சைப் பொற்புய வெற்புங் – கதிர்வேலுங்
கதிரையுஞ் சக்ரப் பொற்றையு மற்றும்
பதிகளும் பொற்புக் கச்சியு முற்றுங்
கனவிலுஞ் சித்தத் திற்கரு திக்கொண் – டடைவேனோ
குரைதருஞ் சுற்றுச் சத்தச முத்ரங்
கதறிவெந் துட்கக் கட்புர துட்டன்
குலமடங் கக்கெட் டொட்டொழி யச்சென் – றொருநேமிக்
குவடொதுங் கச்சொர்க் கத்தரி டுக்கங்
கெடநடுங் கத்திக் கிற்கிரி வர்க்கங்
குலிசதுங் கக்கைக் கொற்றவ னத்தங் – குடியேறத்
தரைவிசும் பைச்சிட் டித்தஇ ருக்கன்
சதுர்முகன் சிட்சைப் பட்டொழி யச்சந்
ததமும்வந் திக்கப் பெற்றவர் தத்தம் – பகையோடத்
தகையதண் டைப்பொற் சித்ரவி சித்ரந்
தருசதங் கைக்கொத் தொத்துமு ழக்குஞ்
சரணகஞ் சத்திற் பொற்கழல் கட்டும் – பெருமாளே.
பதம் பிரித்தது
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் – தனதான
புரைபடுஞ் செற்றக் குற்றமனத்தன்
தவமிலன் சுத்தச் சத்யஅ சத்யன்
புகலிலன் சுற்றச் செத்தையுள் நிற்குந் – துரிசாளன்
பொறையிலன் கொத்துத் தத்வ விகற்பஞ்
சகலமும் பற்றி பற்றற நிற்கும்
பொருளுடன் பற்றுச் சற்றுமில் வெற்றன் – கொடியேன் நின்
கரையறுஞ் சித்ரச் சொற்புகழ் கற்குங்
கலையிலன் கட்டைப் புத்தியன் மட்டன்
கதியிலன் செச்சைப் பொற்புய வெற்புங் – கதிர்வேலும்
கதிரையுஞ் சக்ரப் பொற்றையு மற்றும்
பதிகளும் பொற்புக் கச்சியு முற்றும்
கனவிலும் சித்தத்தில் கருதிக்கொண்டு – அடைவேனோ
குரைதருஞ் சுற்றுச் சத்தச முத்ரங்
கதறிவெந்து உட்க கட்புர துட்டன்
குலமடங்கக்கெட்டு ஒட்டொழிய – சென்று ஒருநேமிக்
குவடு ஒதுங்க சொர்க்கத்தர் இடுக்கங்
கெட நடுங்கத் திக்கிற் கிரி வர்க்கம்
குலிச துங்கக்கைக் கொற்றவன் நத்தங் – குடியேற
தரைவிசும்பைச் சிட்டித்த இருக்கன்
சதுர்முகன் சிட்சைப் பட்டொழிய
சந்ததமும் வந்திக்கப் பெற்றவர் தத்தம் – பகையோட
தகைய தண்டைப்பொற் சித்ரவி சித்ரந்
தருசதங்கைக் கொத்து ஒத்துமு ழக்குஞ்
சரண கஞ்சத்தில் பொற்கழல் கட்டும் – பெருமாளே.
English
puraipadum cetRak kutRama naththan
thavamilan suththac sathya asathyan
pukalilan sutRac ceththaiyuL niRkum – thurisALan
poRaiyilan koththuth thathvavi kaRpam
sakalamum patRip patRaRa niRkum
poruLudan patRuc catRumil vetRan – kodiyEnin
karaiyaRum cithrac coRpukazh kaRkum
kalaiyilan kattaip puththiyan mattan
kathiyilan ceccaip poRpuya veRpum – kathirvElum
kathiraiyum cakrap potRaiyu matRum
pathikaLum poRpuk kacciyu mutRum
kanavilum siththath thiRkaru thikkoN – dadaivEnO
kuraitharum sutRuc saththasa muthram
kathaRiven thutkak katpura thuttan
kulamadan gakket tottozhi yaccen – RorunEmik
kuvadothun gaccork kaththari dukkam
kedanadun gaththik kiRkiri varkkam
kulisathun gakkaik kotRava naththam – kudiyERath
tharaivisum paiccit tiththa irukkan
cathurmukan sitcaip pattozhi yaccan
thathamumvan thikkap petRavar thaththam – pakaiyOdath
thakaiyathaN daippoR cithravi cithram
tharusathan gaikkoth thoththumu zhakkum
saraNakan jaththiR poRkazhal kattum – perumALE.
English Easy Version
puraipadum cetRak kutRa manaththan
thavamilan suththac sathya asathyan
pukalilan sutRac ceththaiyuL niRkum – thurisALan
poRaiyilan koththuth thathvavi kaRpam
sakalamum patRi patRaRa niRkum
poruLudan patRuc catRumil vetRan – kodiyEn nin
karaiyaRum cithrac coRpukazh kaRkum
kalaiyilan kattaip puththiyan mattan
kathiyilan ceccaip poRpuya veRpum – kathirvElum
kathiraiyum cakrap potRaiyu matRum
pathikaLum poRpuk kacciyu mutRum
kanavilum siththath thiRkaru thikkoNd – adaivEnO
kuraitharum sutRuc saththasa muthram
kathaRiven thutka katpura thuttan
kulamadangakkettottozhiya cenRoru – nEmik
kuvadothunga corkkaththar idukkam
keda nadungath thikkiRkiri varkkam
kulisa thungakkaik kotRava naththam – kudiyERa
tharaivisumpaic cittiththa irukkan
cathurmukan sitcaip pattozhiya canthathamum
vanthikkap petRavar thaththam – pakaiyOda
thakaiyathaN daippoR cithravicithram
tharusathan gaik koththuoththu muzhakkum
saraNakan jaththiR poRkazhal kattum – perumALE.