Thiruppugal 321 Salamalamvitta
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன – தனதான
சலமலம் விட்டத் தடம்பெ ருங்குடில்
சகலவி னைக்கொத் திருந்தி டும்படி
சதிரவு றுப்புச் சமைந்து வந்தொரு – தந்தைதாயும்
தரவரு பொய்க்குட் கிடந்த கந்தலி
லுறையுமு யிர்ப்பைச் சமன்து ரந்தொரு
தனியிலி ழுக்கப் படுந்த ரங்கமும் – வந்திடாமுன்
பலவுரு வத்தைப் பொருந்தி யன்றுயர்
படியுநெ ளிக்கப் படர்ந்த வன்கண
படமயில் புக்குத் துரந்து கொண்டிகல் – வென்றிவேலா
பரிமள மிக்கச் சிவந்த நின்கழல்
பழுதற நற்சொற் றெரிந்து அன்பொடு
பகர்வதி னிச்சற் றுகந்து தந்திட – வந்திடாயோ
சிலையுமெ னப்பொற் சிலம்பை முன்கொடு
சிவமய மற்றுத் திடங்கு லைந்தவர்
திரிபுர மத்தைச் சுடுந்தி னந்தரி – திண்கையாளி
திருமகள் கச்சுப் பொருந்தி டுந்தன
தெரிவையி ரக்கத் துடன்பி றந்தவள்
திசைகளி லொக்கப் படர்ந்தி டம்பொரு – கின்றஞானக்
கலைகள ணைக்கொத் தடர்ந்து வம்பலர்
நதிகொள கத்திற் பயந்து கம்பர்மெய்
கருகஇ டத்திற் கலந்தி ருந்தவள் – கஞ்சபாதங்
கருணைமி குத்துக் கசிந்து ளங்கொடு
கருதும வர்க்குப் பதங்கள் தந்தருள்
கவுரிதி ருக்கொட் டமர்ந்த இநதிரர் – தம்பிரானே.
பதம் பிரித்தது
தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன – தனதான
சல மலம் விட்டத் தடம் பெரும் குடில்
சகல வினைக் கொத்து இருந்திடும்படி
சதிர உறுப்புச் சமைந்து வந்த ஒரு – தந்தை தாயும்
தர வரு பொய்க்குள் கிடந்த கந்தலில்
உறையும் உயிர்ப்பை சமன் துரந்து ஒரு
தனியில் இழுக்கப்படும் தரங்கமும் – வந்திடா முன்
பல உருவத்தைப் பொருந்தி அன்று உயர்
படியு(ம்) நெளிக்கப் படர்ந்த வன் கண
பட மயில் புக்குத் துரந்து கொண்டு இகல் – வென்றி வேலா
பரிமள மிக்கச் சிவந்த நின் கழல்பழுது
அற நல் சொல் தெரிந்து அன்பொடு
பகர்வது இனி சற்று உகந்து தந்திட – வந்திடாயோ
சிலையும் எனப் பொன் சிலம்பை முன் கொடு
சிவ மயம் அற்றுத் திடம் குலைந்தவர்
திரி புரம் அத்தை சுடும் தினம் தரி – திண் கையாளி
திரு மகள் கச்சுப் பொருந்திடும் தன
தெரிவை இரக்கத்துடன் பிறந்தவள்
திசைகளில் ஒக்கப் படர்ந்து இடம் பொரு – கின்ற ஞானக்
கலைகள் அணை கொத்து அடர்ந்து வம்பு அலர்
நதி கொள் அகத்தில் பயந்து கம்பர் மெய்
கருக இடத்தில் கலந்து இருந்தவள் – கஞ்ச பாதம்
கருணை மிகுத்துக் கசிந்த உளம் கொடு
கருதும் அவர்க்குப் பதங்கள் தந்து அருள்
கவுரி திருக் கொட்டு அமர்ந்த இந்திரர் – தம்பிரானே.
English
salamalam vittath thadampe rungudil
sakalavi naikkoth thirunthi dumpadi
sathiravu Ruppuc camainthu vanthoru – thanthaithAyum
tharavaru poykkut kidantha kanthali
luRaiyumu yirppaic camanthu ranthoru
thaniyili zhukkap paduntha rangamum – vanthidAmun
palavuru vaththaip porunthi yanRuyar
padiyune Likkap padarntha vankaNa
padamayil pukkuth thuranthu koNdikal – venRivElA
parimaLa mikkac civantha ninkazhal
pazhuthaRa naRchot Rerinthu anpodu
pakarvathi nicchat Rukanthu thanthida – vanthidAyO
silaiyume nappoR cilampai munkodu
sivamaya matRuth thidamku lainthavar
thiaipura maththaic cudunthi nanthiri – thiNkaiyALi
thirumakaL kacchup porunthi dunthana
therivaiyi rakkath thudanpi RanthavaL
thisaikaLi lokkap padarnthi damporu – kinRanjAnak
kalaikaLa Naikkoth thadarnthu vampalar
nathikoLa kaththiR payanthu kamparmey
karukai daththiR kalanthi runthavaL – kanjapAthang
karuNaimi kuththuk kasinthu Lamkodu
karuthuma varkkup pathangaL thantharuL
kavurithi rukkot tamarntha inathirar – thambirAnE.
English Easy Version
sala malam vittath thadam perum kudil
sakala vinaik koththu irunthidumpadi
sathira uRuppuc camainthu vantha oru – thanthai thAyum
thara varu poykkuL kidantha kanthalil
uRaiyum uyirppai saman thuranthu oru
thaniyil izhukkappadum tharangamum – vanthidA mun
pala uruvaththaip porunthi anRu uyar
padiyu(m) neLikkap padarntha van kaNa
pada mayil pukkuth thuranthu koNdu ikal – venRi vElA
parimaLa mikkac civantha nin kazhal
pazhuthu aRa nal sol therinthu anpodu
pakarvathu ini satRu ukanthu thanthida – vanthidAyO
silaiyum enap pon silampai mun kodu
siva mayam atRuth thidam kulainthavar
thiri puram aththai sudum thinam thari – thiN kaiyALi
thiru makaL kacchup porunthidum thana
therivai irakkaththudan piRanthavaL
thisaikaLil okkap padarnthu idam poru – kinRa njAnak
kalaikaL aNai koththu adarnthu vampu alar
nathi koL akaththil payanthu kampar mey
karuka idaththil kalanthu irunthavaL – kanja pAtham
karuNai mikuththuk kasintha uLam kodu
karuthum avarkkup pathangaL thanthu aruL
kavuri thiruk kottu amarntha inthirar – thambirAnE.