Thiruppugal 323 Idhaththuppatri
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்
தனத்தத்தத் தனத்தத்தத் – தனதான
இதத்துப்பற் றிதழ்த்துப்பற் றிருட்பொக்கக் கருத்திட்டத்
தியக்கத்திற் றியக்குற்றுச் – சுழலாதே
எலுப்புச்சுக் கிலக்கத்தத் தடித்தொக்குக் கடத்தைப்பெற்
றெடுத்துப்பற் றடுத்தற்பத் – துழலாதே
சுதத்தத்தச் சதத்தத்தப் பதத்தர்க்குற் றவற்றைச்சொற்
றுவக்கிற்பட் டவத்தைப்பட் – டயராதே
துணைச்செப்பத் தலர்கொத்துற் பலச்செச்சைத் தொடைப்பத்திக்
கடப்பப்பொற் கழற்செப்பித் – தொழுவேனோ
கொதித்துக்குத் திரக்கொக்கைச் சதித்துப்பற் றிகைக்குட்பொற்
குலத்தைக்குத் திரத்தைக்குத் – தியவேலா
குறத்தத்தைக் கறத்தத்திக் குமுத்தத்தத் தமொக்கிக்குக்
குலத்துக்குக் குடக்கொற்றக் – கொடியோனே
கதச்சுத்தச் சுதைச்சித்ரக் களிற்றுக்கொற் றவற்குக்கற்
பகச்சொர்க்கப் புரப்பொற்பைப் – புரிவோனே
கடுக்கைக்கட் செவிக்கற்றைச் சடைப்பக்கக் கொடிக்கற்புக்
கடற்கச்சிப் பதிச்சொக்கப் – பெருமாளே.
பதம் பிரித்தது
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்
தனத்தத்தத் தனத்தத்தத் – தனதான
இதத்துப் பற்று இதழ்த் துப்பு அற்று இருள் பொக்கக் கருத்து
இட்டத்து
இயக்கத்தில் தியக்கு உற்றுச் – சுழலாதே
எலுப்புச் சுக்கிலம் கத்தம் தடித் தொக்குக் கடத்தைப் பெற்று
எடுத்துப் பற்று அடுத்தத் தற்பத்து – உழலாதே
சுதத் தத் தத் சதத்து அத்தம் பதத்தர்க்கு உற்றவற்றைச் சொல்
துவக்கில் பட்டு அவத்தைப் பட்டு – அயராதே
துணைச் செப்பத்து அலர்க் கொத்து உற்பலம் செச்சைத்
தொடைப் பத்திக்
கடப்பம் பொற்கழல் செப்பித் – தொழுவேனோ
கொதித்துக் குத்திரக் கொக்கைச் சதித்துப் பற்றி கைக்குள்
பொற்
குலத்தைக் குத்திரத்தைக் – குத்திய வேலா
குறத் தத்தைக்கு அறத்து அத்திக்கு முத்த அத்தத்து அம் ஒக்கு இக்குக்
குலத்துக்குக் குக்குடற் கொற்றக் – கொடியோனே
கதம் சுத்தச் சுதைச் சித்ரம் களிற்றுக் கொற்றவற்குக் கற்
பகச் சொர்க்கப்புரப் பொற்பைப் – புரிவோனே
கடுக்கைக் கண் செவிக் கற்றைச் சடைப் பக்கக் கொடிக்
கற்புக்
கடல் கச்சிப் பதிச் சொக்கப் – பெருமாளே.
English
ithaththuppat Rithazhththuppat Rirutpokkak karuththittath
thiyakkaththit RiyakkutRuc – chuzhalAthE
eluppucchuk kilakkaththath thadiththokkuk kadaththaippet
Reduththuppat RaduththaRpath – thuzhalAthE
suthaththaththac chathaththaththap pathaththarkkut RavatRaicchot
RuvakkiRpat tavaththaippat – tayarAthE
thuNaiccheppath thalarkoththuR palacchecchaith thodaippaththik
kadappappoR kazhaRcheppith – thozhuvEnO
kothiththukkuth thirakkokkaic chathiththuppat RikaikkutpoR
kulaththaikkuth thiraththaikkuth – thiyavElA
kuRaththaththaik kaRaththaththik kumuththaththath thamokkikkuk
kulaththukkuk kudakkotRak – kodiyOnE
kathacchuththac chuthaicchithrak kaLitRukkot RavaRkukkaR
pakacchorkkap purappoRpaip – purivOnE
kadukkaikkat chevikkatRaic chadaippakkak kodikkaRpuk
kadaRkacchip pathicchokkap – perumALE.
English Easy Version
ithaththup patRu ithazhth thuppu atRu iruL pokkak karuththu ittaththu
iyakkaththil thiyakku utRuc – chuzhalAthE
eluppuc chukkilam kaththam thadith thokkuk kadaththaip petRu
eduththup patRu aduththath thaRpaththu – uzhalAthE
suthath thath thath sathaththu aththam pathaththarkku utRavatRaic chol
thuvakkil pattu avaththaip pattu – ayarAthE
thuNaic cheppaththu alark koththu uRpalam secchaith thodaip paththik
kadappam poRkazhal seppith – thozhuvEnO
kothiththuk kuththirak kokkaic chathiththup patRi kaikkuL poR
kulaththaik kuththiraththaik – kuththiya vElA
kuRath thaththaikku aRaththu aththikku muththa aththaththu am okku ikkuk
kulaththukkuk kukkudaR kotRak – kodiyOnE
katham suththac chuthaic chithram kaLitRuk kotRavaRkuk kaR
pakac chorkkappurap poRpaip – purivOnE
kadukkaik kaN sevik katRaic chadaip pakkak kodik kaRpuk
kadal kacchip pathic chokkap – perumALE.