திருப்புகழ் 326 கடத்தைப் பற்று (காஞ்சீபுரம்)

Thiruppugal 326 Kadaththaippatru

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்
தனத்தத்தத் தனத்தத்தத் – தனதான

கடத்தைப்பற் றெனப்பற்றிக் கருத்துற்றுக் களித்திட்டுக்
கயற்கட்பொற் பிணைச்சித்ரத் – தனமாதர்

கலைக்குட்பட் டறக்கத்திச் சலித்துக்கட் டளைச்சொற்பொய்த்
திரைக்குட்பட் டறச்செத்திட் – டுயிர்போனால்


எடுத்துக்கொட் டிடக்கட்டைப் படத்தெட்டத் தணற்றட்டக்
கொளுத்திச்சுற் றவர்ப்பற்றற் – றவர்போமுன்


இணக்கிப்பத் திமைச்செச்சைப் பதத்தைப்பற் றுகைக்குச்சொற்
றமிழ்க்கொற்றப் புகழ்செப்பித் – திரிவேனோ

அடைத்திட்டுப் புடைத்துப்பொற் பதச்சொர்க்கத் தனைச்சுற்றிட்
டலைப்புப்பற் றெனச்சொற்றிட் – டறுசூரை

அடித்துச்செற் றிடித்துப்பொட் டெழப்பொர்ப்புப் படக்குத்திட்
டலைத்துச்சுற் றலைத்தெற்றுக் – கடல்மாயப்


புடைத்திட்டுப் படிக்குட்செற் றடப்புக்குக் கதத்துக்கக்
கயிற்கொக்கைப் படக்குத்திப் – பொருவோனே

புனத்திற்பொற் குறத்திக்குப் புணர்க்கொத்தப் பசப்பெத்திப்
புணர்க்கச்சிப் பதிச்சொக்கப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்
தனத்தத்தத் தனத்தத்தத் – தனதான

கடத்தைப் பற்று எனப் பற்றிக் கருத்து உற்றுக் களித்திட்டுக்
கயல் கண் பொற்பு இணைச் சித்ரத் – தன மாதர்

கலைக்குள் பட்டு அறக் கத்திச் சலித்துக் கட்டளைச் சொல்
பொய்த்
திரைக்குள் பட்டு அறச் செத்திட்டு – உயிர் போனால்

எடுத்துக் கொட்டு இடக் கட்டைப் படத் தெட்டத் தணல் தட்டக்
கொளுத்தி சுற்று அவர் பற்று அற்று – அவர் போ முன்

இணக்கிப் பத்திமைச் செச்சைப் பதத்தைப் பற்றுகைக்குச்
சொல்
தமிழ்க் கொற்றப் புகழ்ச் செப்பித் – திரிவேனோ

அடைத்திட்டுப் புடைத்துப் பொன் பதச் சொர்க்கத்தனைச்
சுற்றிட்டு அலைப்புப் பற்று எனச் சொற்றிட்ட – அறு சூரை


அடித்துச் செற்று இடித்துப் பொட்டு எழப் பொர்ப்புப் படக்
குத்திட்டு
அலைத்துச் சுற்று அலைத் தெற்றுக் – கடல் மாயப்

புடைத்திட்டு படிக்குள் செற்று அடப் புக்குக் கதத் துக்கக் கயில் கொக்கைப் படக் குத்திப் – பொருவோனே

புனத்தில் பொன் குறத்திக்குப் புணர்க்கு ஒத்தப் பசப்பு எத்திப்
புணர்க் கச்சிப் பதிச் சொக்கப் – பெருமாளே.

English

kadaththaippat RenappatRik karuththutRuk kaLiththittuk
kayaRkatpoR piNaicchithrath – thanamAthar

kalaikkutpat taRakkaththic chaliththukkat taLaicchoRpoyth
thiraikkutpat taRaccheththit – tuyirpOnAl

eduththukkot tidakkattaip padaththettath thaNatRattak
koLuththicchut RavarppatRat – RavarpOmun

iNakkippath thimaicchecchaip pathaththaippat Rukaikkucchot
RamizhkkotRap pukazhcheppith – thirivEnO

adaiththittup pudaiththuppoR pathacchorkkath thanaicchutRit
talaippuppat RenacchotRit – taRucUrai


adiththucchet Ridiththuppot tezhapporppup padakkuththit
talaiththucchut RalaiththetRuk – kadalmAyap


pudaiththittup padikkutchet Radappukkuk kathaththukkak
kayiRkokkaip padakkuththip – poruvOnE

punaththiRpoR kuRaththikkup puNarkkoththap pasappeththip
puNarkkacchip pathicchokkap – perumALE.

English Easy Version

kadaththaip patRu enap patRik karuththu utRuk kaLiththittuk
kayal kaN poRpu iNaic chithrath – thana mAthar

kalaikkuL pattu aRak kaththic chaliththuk kattaLaic chol poyth
thiraikkuL pattu aRac cheththittu – uyir pOnAl

eduththuk kottu idak kattaip padath thettath thaNal thattak
koLuththi sutRu avar patRu atRu – avar pO mun

iNakkip paththimaic checchaip pathaththaip patRukaikkuc chol
thamizhk kotRap pukazhc cheppith – thirivEnO

adaiththittup pudaiththup pon pathac chorkkaththanaic chutRittu
alaippup patRu enac chotRitta – aRu cUrai

adiththuc chetRu idiththup pottu ezhap porppup padak kuththittu
alaiththuc chutRu alaith thetRuk – kadal mAyap

pudaiththittu padikkuL setRu adap pukkuk kathath thukkak
kayil kokkaip padak kuththip – poruvOnE

punaththil pon kuRaththikkup puNarkku oththap pasappu eththip
puNark kacchip pathic chokkap – perumALE.