Thiruppugal 327 Karuppatripparuththu
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்
தனத்தத்தத் தனத்தத்தத் – தனதான
கருப்பற்றிப் பருத்தொக்கத் தரைக்குற்றிட் டுருப்பெற்றுக்
கருத்திற்கட் பொருட்பட்டுப் – பயில்காலங்
கணக்கிட்டுப் பிணக்கிட்டுக் கதித்திட்டுக் கொதித்திட்டுக்
கயிற்றிட்டுப் பிடித்திட்டுச் – சமனாவி
பெருக்கப்புத் தியிற்பட்டுப் புடைத்துக்கக் கிளைப்பிற்பொய்ப்
பிணத்தைச்சுட் டகத்திற்புக் – கனைவோரும்
பிறத்தற்சுற் றமுற்றுற்றிட் டழைத்துத்தொக் கறக்கத்துப்
பிறப்புப்பற் றறச்செச்சைக் – கழல்தாராய்
பொருப்புக்கர்ப் புரக்கச்சுத் தனப்பொற்புத் தினைப்பச்சைப்
புனக்கொச்சைக் குறத்தத்தைக் – கினியோனே
புரத்தைச்சுட் டெரித்துப்பற் றலர்க்குப்பொற் பதத்துய்ப்பைப்
புணர்த்தப்பித் தனைக்கற்பித் – தருள்வோனே
செருக்கக்குக் கரைக்குத்திச் செருப்புக்குப் பிடித்தெற்றிச்
சினத்திட்டுச் சிதைத்திட்டுப் – பொரும்வீரா
திருத்தத்திற் புகற்சுத்தத் தமிழ்ச்செப்புத் த்ரயச்சித்ரத்
திருக்கச்சிப் பதிச்சொக்கப் – பெருமாளே.
பதம் பிரித்தது
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்
தனத்தத்தத் தனத்தத்தத் – தனதான
கருப் பற்றிப் பருத்து ஒக்கத் தரைக்கு உற்றிட்டு உருப்
பெற்று
கருத்தின் கண் பொருள் பட்டு – பயில் காலம்
கணக்கிட்டுப் பிணக்கிட்டு கதித்திட்டுக் கொதித்திட்டுக்
கயிற்றிட்டுப் பிடித்திட்டுச் – சமன் ஆவி
பெருக்க புத்தியில் பட்டுப் புடைத் துக்கக் கிளைப் பின் பொய்
பிணத்தைச் சுட்டு அகத்தில் புக்கு – அனைவோரும்
பிறத்தல் சுற்றம் முற்று உற்றிட்டு அழைத்துத் தொக்கு அறக்
கத்து
பிறப்புப் பற்று அறச் செச்சைக் – கழல் தாராய்
பொருப்புக் கர்ப்புரக் கச்சுத் தனப் பொற்புத் தினைப் பச்சைப்புன
கொச்சைக் குறத் தத்தைக்கு – இனியோனே
புரத்தைச் சுட்டு எரித்துப் பற்றலர்க்குப் பொற் பதத் துய்ப்பை
புணர்த்து அப்பித்தனைக் கற்பித்து – அருள்வோனே
செருக்கு அக் குக்கரைக் குத்திச் செருப் புக்குப் பிடித்து எற்றி
சினத்திட்டுச் சிதைத்திட்டுப் – பொரும் வீரா
திருத்தத்தில் புகல் சுத்தத் தமிழ்ச் செப்புத் த்ரய சித்ரத்
திருக் கச்சிப் பதிச் சொக்கப் – பெருமாளே.
English
karuppatRip paruththokkath tharaikkutRit turuppetRuk
karuththiRkat porudpattup – payilkAlam
kaNakkittup piNakkittuk kathiththittuk kothiththittuk
kayitRittup pidiththittuc – camanAvi
perukkapputh thiyiRpattup pudaiththukkak kiLaippiRpoyp
piNaththaicchut takaththiRpuk – kanaivOrum
piRaththaRchut RamutRutRit tazhaiththuththok kaRakkaththup
piRappuppat RaRacchecchaik – kazhalthArAy
poruppukkarp purakkacchuth thanappoRputh thinaippacchaip
punakkocchaik kuRaththaththaik – kiniyOnE
puraththaicchut teriththuppat RalarkkuppoR pathaththuyppaip
puNarththappith thanaikkaRpith – tharuLvOnE
serukkakkuk karaikkuththic cheruppukkup pidiththetRi
cinaththittus sithaiththittup – porumveerA
thiruththaththiR pukaRsuththath thamizhcchepputh thrayacchithrath
thirukkacchip pathicchokkap – perumALE.
English Easy Version
karuppatRip paruththokkath tharaikkutRittu uruppetRu
karuththiRkat porutpattup – payilkAlam
kaNakkittup piNakkittuk kathiththittuk kothiththittuk
kayitRittup pidiththittuc – camanAvi
perukka puth thiyiRpattup pudaiththukkak kiLaippiRpoy
piNaththaicchut takaththiRpuk – kanaivOrum
piRaththaRchut RamutRutRit tazhaiththuththok kaRakkaththu
piRappuppat RaRacchecchaik – kazhalthArAy
poruppukkarp purakkacchuth thanappoRputh thinaippacchaip
punakkocchaik kuRaththaththaik – kiniyOnE
puraththaicchut teriththuppat RalarkkuppoR pathaththuyppai
puNarththappith thanaikkaRpith – tharuLvOnE
serukkakkuk karaikkuththic cheruppukkup pidiththetRi
cinaththittus sithaiththittup – porumveerA
thiruththaththiR pukaRsuththath thamizhcchepputh
thraya: chithrath thirukkacchip pathicchokkap – perumALE.