திருப்புகழ் 328 கறுக்கப் பற்று (காஞ்சீபுரம்)

Thiruppugal 328 Karukkappatru

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்
தனத்தத்தத் தனத்தத்தத் – தனதான

கறுக்கப்பற் றுவர்ப்பிட்டுச் சிரித்துச்சற் றுறுக்கிக்கட்
பிறக்கிட்டுப் படக்கற்பித் – திளைஞோர்தங்


கழுத்தைச்சிக் கெனக்கட்டித் தனச்செப்புப் படக்குத்திட்
டுருக்கிக்கற் பழிக்கப்பொற் – பெழுகாதல்

புறப்பட்டுக் களிக்கக்கற் புரத்தைப்பிட் டரக்கிப்பொற்
பணிக்கட்டிற் புறத்துற்றுப் – புணர்மாதர்

பொருத்தத்தைத் தவிர்த்துச்சற் றிரக்ஷித்துப் புரப்பப்பொற்
பதத்தைப்பெற் றிருக்கைக்குப் – பெருவேனோ

திறற்கொக்கைப் படக்குத்திச் செருக்கிக்கொக் கரித்துச்சக்
கரிக்குப்புத் திரற்குற்றுத் – தளைபூணச்

சினத்துப்பொற் பொருப்பைப்பொட் டெழுத்தித்திக் கரித்துப்புத்
திரத்தத்திற் சிரித்துற்றுப் – பலபேய்கள்

பறிக்கப்பச் சிறைச்சிக்கட் கறிக்குப்பைச் சிரச்சிக்குப்
பரப்பொய்க்கட் டறப்புக்குப் – பொருதோனே


பணிச்செச்சைத் தொடைச்சித்ரப் புயத்துக்ரப் படைச்சத்திப்
படைக்கச்சிப் பதிச்சொக்கப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்
தனத்தத்தத் தனத்தத்தத் – தனதான

கறுக்கப் பல் துவர்ப்பு இட்டுச் சிரித்துச் சற்று உறுக்கிக் கண்
பிறக்கிட்டுப்படக் கண் பித்தி – இளைஞோர் தம்

கழுத்தைச் சிக்கெனக் கட்டித் தனச்செப்புப் படக் குத்திட்டு
உருக்கிக் கற்பு அழிக்கப் பொற்பு – எழு காதல்

புறப்பட்டுக் களிக்க கற்புரத்தைப் பிட்டு அரக்கிப் பொன் பணிக் கட்டில் புறத்து உற்றுப் – புணர் மாதர்

பொருத்தத்தைத் தவிர்த்து சற்று ரக்ஷித்துப் புரப்பப் பொன்
பதத்தைப் பெற்று இருக்கைக்குப் – பெறுவேனோ

திறல் கொக்கைப் படக் குத்திச் செருக்கிக் கொக்கரித்துச்
சக்கரிக்குப் புத்திரற்கு உற்றுத் – தளை பூண

சினத்து பொன் பொருப்பைப் பொட்டு எழுத்தித் திக்கரித்து புத்(து)
இரத்தத்தில் சிரித்து உற்றுப் – பல பேய்கள்

பச்(சை) இறைச்சிக் கண் கறிக் குப்பை பறிக்க சிரச் சிக்குப்
பரப்பு ஒய்க் கட்டறப் புக்குப் – பொருதோனே

பணிச் செச்சைத் தொடைச் சித்ரப் புயத்து உக்ரப் படைச் சத்திப்
படைக் கச்சிப்பதிச் சொக்கப் – பெருமாளே.

English

kaRukkappat Ruvarppittuc chiriththucchat RuRukkikkat
piRakkittup padakkaRpith – thiLainjOrthang

kazhuththaicchik kenakkattith thanaccheppup padakkuththit
turukkikkaR pazhikkappoR – pezhukAthal

puRappattuk kaLikkakkaR puraththaippit tarakkippoR
paNikkattiR puRaththutRup – puNarmAthar

poruththaththaith thavirththucchat Rirakshiththup purappappoR
pathaththaippet Rirukkaikkup – peRuvEnO

thiRaRkokkaip padakkuththic cherukkikkok kariththucchak
karikkupputh thiraRkutRuth – thaLaipUNac

chinaththuppoR poruppaippot tezhuththiththik kariththupputh
thiraththaththiR chiriththutRup – palapEykaL

paRikkappac chiRaicchikkat kaRikkuppaic chiracchikkup
parappoykkat taRappukkup – poruthOnE

paNicchecchaith thodaicchithrap puyaththukrap padaicchaththip
padaikkacchip pathicchokkap – perumALE.

English Easy Version

kaRukkap pal thuvarppu ittuc chiriththuc chatRu uRukkik kaN
piRakkittuppadak kaN piththi – iLainjOr tham

kazhuththaic chikkenak kattith thanaccheppup padak kuththittu
urukkik kaRpu azhikkap – poRpu ezhu kAthal

puRappattuk kaLikka kaRpuraththaip pittu arakkip pon
paNik kattil puRaththu utRup – puNar mAthar

poruththaththaith thavirththu satRu rakshiththup purappap
pon pathaththaip petRu irukkaikkup – peRuvEnO

thiRal kokkaip padak kuththic cherukkik kokkariththuc chakkarikkup puththiraRku utRuth – thaLai pUNa

sinaththu pon poruppaip pottu ezhuththith thikkariththu puth(thu)
iraththaththil siriththu utRup – pala pEykaL

pac(chai) iRaicchik kaN kaRik kuppai paRikka sirac chikkup
parappu oyk kattaRap pukkup – poruthOnE

paNic checchaith thodaic chithrap puyaththu ukrap padaic chaththip
padaik kacchippathic chokkap – perumALE.