Thiruppugal 334 Thaththiththaththi
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தத்தத் தத்தத் தத்தத் தத்தத்
தத்தத் தத்தத் – தனதான
தத்தித் தத்திச் சட்டப் பட்டுச்
சத்தப் படுமைக் – கடலாலே
சர்ப்பத் தத்திற் பட்டுக் கெட்டுத்
தட்டுப் படுமப் – பிறையாலே
சித்தத் துக்குப் பித்துற் றுச்சச்
சித்ரக் கொடியுற் – றழியாதே
செப்பக் கொற்றச் சிற்பப் பத்திச்
செச்சைத் தொடையைத் – தரவேணும்
கொத்துத் திக்குப் பத்துட் புக்குக்
குத்திக் கிரியைப் – பொரும்வேலா
கொச்சைப் பொச்சைப் பொற்பிற் பச்சைக்
கொச்சைக் குறவிக் – கினியோனே
சுத்தப் பத்தத் தர்க்குச் சித்தத்
துக்கத் தையொழித் – திடும்வீரா
சொர்க்கத் துக்கொப் புற்றக் கச்சிச்
சொக்கப் பதியிற் – பெருமாளே.
பதம் பிரித்தது
தத்தத் தத்தத் தத்தத் தத்தத்
தத்தத் தத்தத் – தனதான
தத்தித் தத்திச் சட்டப்பட்டுச்
சத்தப்படு மைக் – கடலாலே
சர்ப்பத் தத்தில் பட்டுக் கெட்டுத்
தட்டுப்படும் அப் – பிறையாலே
சித்தத்துக்குப் பித்து உற்று உச்சச்
சித்ரக் கொடி உற்று – அழியாதே
செப்பக் கொற்ற(ம்) சிற்ப(ம்) பத்திச்
செச்சைத் தொடையைத் – தர வேணும்
கொத்துத் திக்குப் பத்துள் புக்கு
குத்திக் கிரியைப் – பொரும் வேலா
கொச்சைப் பொச்சைப் பொற்பில் பச்சைக்
கொச்சைக் குறவிக்கு – இனியோனே
சுத்தப் பத்த அத்தர்க்குச் சித்த
துக்கத்தை ஒழித் – திடும் வீரா
சொர்க்கத்துக்கு ஒப்பு உற்றக் கச்சிச்
சொக்கப் பதியில் – பெருமாளே.
English
thaththith thaththic cattap pattu
thap padumaik – kadalAlE
sarppath thaththiR pattuk kettuth
thattup padumap – piRaiyAlE
siththath thukkup piththut Rucchac
cithrak kodiyut – RazhiyAthE
seppak kotRac ciRpap paththic
cecchaith thodaiyaith – tharavENum
koththuth thikkup paththut pukkuk
kuththik kiriyaip – porumvElA
kocchaip pocchaip poRpiR pacchaik
kocchaik kuRavik – kiniyOnE
suththap paththath tharkkuc ciththath
thukkath thaiyozhith – thidumveerA
sorkkath thukkop putRak kacchic
cokkap pathiyiR – perumALE.
English Easy Version
thaththith thaththic cattap pattu
saththappadu maik – kadalAlE
sarppath thaththiR pattuk kettuth
thattup padumap – piRaiyAlE
siththath thukkup piththutRu ucchac
cithrak kodi yutR – azhiyAthE
seppak kotRac ciRpap paththic
cecchaith thodaiyaith – tharavENum
koththuth thikkup paththut pukkuk
kuththik kiriyaip – porumvElA
kocchaip pocchaip poRpiR pacchaik
kocchaik kuRavik – kiniyOnE
suththap paththath tharkkuc ciththath
thukkath thaiyozhith – thidumveerA
sorkkath thukkop putRak kacchic
cokkap pathiyiR – perumALE.