Thiruppugal 337 Kacchuittaani
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தத்தத் தனதன தத்தத் தனதன
தத்தத் தனதன – தனதான
கச்சிட் டணிமுலை தைச்சிட் டுருவிய
மச்சக் கொடிமதன் – மலராலுங்
கச்சைக் கலைமதி நச்சுக் கடலிடை
அச்சப் படவெழு – மதனாலும்
பிச்சுற் றிவளுள மெய்ச்சுத் தளர்வது
சொச்சத் தரமல – இனிதான
பிச்சிப் புதுமலர் வைச்சுச் சொருகிய
செச்சைத் தொடையது – தரவேணும்
பச்சைத் திருவுமை யிச்சித் தருளிய
கச்சிப் பதிதனி – லுறைவோனே
பற்றிப் பணிபவர் குற்றப் பகைகெட
உற்றுப் பொரவல – கதிர்வேலா
இச்சித் தழகிய கொச்சைக் குறமகள்
மெச்சித் தழுவிய – திருமார்பா
எட்டுக் குலகிரி முட்டப் பொடிபட
வெட்டித் துணிசெய்த – பெருமாளே.
பதம் பிரித்தது
தத்தத் தனதன தத்தத் தனதன
தத்தத் தனதன – தனதான
கச்சு இட்ட அணி முலை தைச்சிட்டு உருவிய
மச்சக் கொடி மதன் – மலராலும்
கச்சைக் கலை மதி நச்சுக் கடல் இடை
அச்சப் பட எழும் – அதனாலும்
பிச்சு உற்று இவள் உளம் எய்ச்சுத் தளர்வது
சொச்சத் தரம் அல – இனிதான
பிச்சிப் புது மலர் வைச்சுச் சொருகிய
செச்சைத் தொடை அது – தரவேணும்
பச்சைத் திரு உமை இச்சித்து அருளிய
கச்சிப் பதி தனில் – உறைவோனே
பற்றிப் பணிபவர் குற்றப் பகை கெட
உற்றுப் பொர வல – கதிர் வேலா
இச்சித்து அழகிய கொச்சைக் குறமகள்
மெச்சித் தழுவிய – திருமார்பா
எட்டுக் குலகிரி முட்டப் பொடிபட
வெட்டித் துணி செய்த – பெருமாளே.
English
kacchit taNimulai thaicchit turuviya
macchak kodimathan – malarAlum
kacchaik kalaimathi nacchuk kadalidai
acchap padavezhu – mathanAlum
picchut RivaLuLa meycchuth thaLarvathu
socchath tharamala – inithAna
picchip puthumalar vaicchuc chorukiya
secchaith thodaiyathu – tharavENum
pacchaith thiruvumai yicchith tharuLiya
kacchip pathithani – luRaivOnE
patRip paNipavar kutRap pakaikeda
utRup poravala – kathirvElA
icchith thazhakiya kocchaik kuRamakaL
mecchith thazhuviya – thirumArpA
ettuk kulakiri muttap podipada
vettith thuNiseytha – perumALE.
English Easy Version
kacchu itta aNi mulai thaicchittu uruviya
macchak kodi mathan – malarAlum
kacchaik kalai mathi nacchuk kadal idai
acchap pada ezhum – athanAlum
picchu utRu ivaL uLam eycchuth thaLarvathu
socchath tharam ala – inithAna
picchip puthu malar vaicchuc chorukiya
secchaith thodai athu – tharavENum
pacchaith thiru umai icchiththu aruLiya
kacchip pathi thanil – uRaivOnE
patRip paNipavar kutRap pakai keda
utRup pora vala – kathir vElA
icchiththu azhakiya kocchaik kuRamakaL
mecchith thazhuviya – thirumArpA
ettuk kulakiri muttap podipada
vettith thuNi seytha – perumALE.