திருப்புகழ் 338 கமலரு சோகம் (காஞ்சீபுரம்)

Thiruppugal 338 Kamalarusogam

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தானாந்தன தனதன தானாந்தன
தனதன தானாந்தன – தனதான

கமலரு சோகாம்பர முடிநடு வேய்பூங்கணை
கலகமர் வாய்தோய்ந்தம – ளியின்மீதே

களையற மீதூர்ந்தெழ மதனவி டாய்போம்படி
கனவிய வாரேந்தின – இளநீர்தோய்ந்

தெமதுயிர் நீலாஞ்சன மதர்விழி யால்வாங்கிய
இவளுடன் மால்கூர்ந்திடு – மநுபோகம்

இனிவிட வேதாந்தப ரமசுக வீடாம்பொருள்
இதவிய பாதாம்புய – மருள்வாயே

அமகர ஆசாம்பர அதுகர ஏகாம்பர
அதுலன நீலாம்பர – மறியாத

அநகர நாளாங்கிதர் தமையுமை யாள்சேர்ந்தருள்
அறமுறு சீகாஞ்சியி – லுறைவோனே

விமலகி ராதாங்கனை தனகிரி தோய்காங்கெய
வெடிபடு தேவேந்திர – னகர்வாழ

விரிகடல் தீமூண்டிட நிசிசரர் வேர்மாண்டிட
வினையற வேல்வாங்கிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதன தானாந்தன தனதன தானாந்தன
தனதன தானாந்தன – தனதான

கமல(ம்) அரு சோகு ஆம்பர(ம்) முடி நடு ஏய் பூங்கணை
கலக அமர் வாய் தோய்ந்து – அமளியின் மீதே

களை அற மீது ஊர்ந்து எழ மதன விடாய் போம்படி
கன இய வார் ஏந்தின – இள நீர் தோய்ந்து

எமது உயிர் நீல அஞ்சன மதர் விழியால் வாங்கிய
இவளுடன் மால் கூர்ந்திடும் – அநுபோகம்

இனி விட வேதாந்த பரம சுக வீடு ஆம் பொருள்
இத(ம்) இய பாத அம்புயம் – அருள்வாயே

அமகர ஆசாம்பர அதுகர ஏக ஆம்பரம்
அதுல அ(ன்)ன நீல அம்பரம் – அறியாத

அநகர நாள அங்கிதர் தமை உமையாள் சேர்ந்து அருள்
அறம் உறு சீ(ர்) காஞ்சியில் – உறைவோனே

விமல கிராத அங்கனை தன கிரி தோய் காங்கெய
வெடி படு தேவேந்திர – நகர் வாழ

விரி கடல் தீ மூண்டிட நிசிசரர் வேர் மாண்டிட
வினை அற வேல் வாங்கிய – பெருமாளே.

English

kamalaru sOgAmbara mudinadu vEypUngaNai
kalakamar vAythOynthama – LiyinmeethE

kaLaiyaRa meethUrnthezha mathanavi dAypOmpadi
kanaviya vArEnthina – iLaneerthOyn

themathuyir neelAnjana matharvizhi yAlvAngiya
ivaLudan mAlkUrnthidu – manupOkam

inivida vEthAnthapa ramasuka veedAmporuL
ithaviya pAthAmpuya – maruLvAyE

amakara AsAmbara athukara EkAmpara
athulana neelAmpara – maRiyAtha

anakara nALAngithar thamaiyumai yALsErntharuL
aRamuRu seekAnjiyi – luRaivOnE

vimalaki rAthAnganai thanakiri thOykAngeya
vedipadu thEvEnthira – nagarvAzha

virikadal theemUNdida nisisarar vErmANdida
vinaiyaRa vElvAngiya – perumALE.

English Easy Version

kamala(m) aru sOgu Ambara(m) mudi nadu Ey pUngaNai
kalaka amar vAy thOynthu amaLiyin – meethE

kaLai aRa meethu Urnthu ezha mathana vidAy pOmpadi
kana iya vAr Enthina – iLa neer thOynthu

emathu uyir neela anjana mathar vizhiyAl vAngiya
ivaLudan mAl kUrnthidum – anupOkam

ini vida vEthAntha parama suka veedu Am poruL
itha(m) iya pAtha ampuyam – aruLvAyE

amakara AsAmbara athukara Eka Amparam
athula a(n)na neela amparam – aRiyAtha

anakara nALa angithar thamai umaiyAL sErnthu aruL
aRam uRu see(r) kAnjiyil – uRaivOnE

vimala kirAtha anganai thana kiri thOy kAngeya
vedi padu thEvEnthira – nagar vAzha

viri kadal thee mUNdida nisisarar vEr mANdida
vinai aRa vEl vAngiya – perumALE.