திருப்புகழ் 340 கலகலென (காஞ்சீபுரம்)

Thiruppugal 340 Kalakalena

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தத்தத் தாந்த தானன
தனதன தத்தத் தாந்த தானன
தனதன தத்தத் தாந்த தானன – தனதான

கலகலெ னப்பொற் சேந்த நூபுர
பரிபுர மொத்தித் தாந்த னாமென
கரமல ரச்சிற் றாந்தொ மாடிய – பொறியார்பைங்

கடிதட முற்றுக் காந்த ளாமென
இடைபிடி பட்டுச் சேர்ந்த ஆலிலை
கனதன பொற்பிட் டோங்கு மார்பொடு – வடமாடச்

சலசல சச்சச் சேங்கை பூண்வளை
பரிமள பச்சைச் சேர்ந்து லாவிய
சலசமு கத்துச் சார்ந்த வாள்விழி – சுழலாடத்

தரளந கைப்பித் தாம்ப லாரிதழ்
குலமுகி லொத்திட் டாய்ந்த வோதியர்
சரசமு ரைத்துச் சேர்ந்த தூவைய – ருறவாமோ

திலதமு கப்பொற் காந்தி மாதுமை
யெனையருள் வைத்திட் டாண்ட நாயகி
சிவனுரு வத்திற் சேர்ந்த பார்வதி – சிவகாமி

திரிபுவ னத்தைக் காண்ட நாடகி
குமரிசு கத்தைப் பூண்ட காரணி
சிவைசுடர் சத்திச் சாம்ப வீஅமை – யருள்பாலா

அலகையி ரத்தத் தோங்கி மூழ்கிட
நரிகழு குப்பிச் சீர்ந்து வாயிட
அசுரர்கு லத்தைக் காய்ந்த வேல்கர – முடையோனே

அமரர்ம கட்குப் போந்த மால்கொளும்
விபுதகு றத்திக் காண்ட வாதின
மழகுசி றக்கக் காஞ்சி மேவிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதன தத்தத் தாந்த தானன
தனதன தத்தத் தாந்த தானன
தனதன தத்தத் தாந்த தானன – தனதான

கல கல எனப் பொன் சேந்த நுபுர
பரிபுரம் ஒத்தித் தாம் தனாம் என
கர மலர் அச்சில் தாம் தோம் ஆடிய – பொறியார் பைம்

கடி தடம் உற்றுக் காந்தள் ஆம் என
இடை படி பட்டுச் சேர்ந்த ஆல் இலை
கன தன பொற்பிட்டு ஓங்கு மார்பொடு – வடம் ஆடச்

சல சல சச்சச் சேம் கை பூண் வளை
பரிமள பச்சைச் சேர்ந்து உலாவிய
சலச முகத்துச் சார்ந்த வாள் விழி – சுழல் ஆட

தரள நகைப்பித்து ஆம்பல் ஆர் இதழ்
குல முகில் ஒத்திட்டு ஆய்ந்த ஓதியர்
சரசம் உரைத்துச் சேர்ந்த தூவையர் – உறவு ஆமோ

திலத முக பொன் காந்தி மாது உமை
எனை அருள் வைத்திட்டு ஆண்ட நாயகி
சிவன் உருவத்தில் சேர்ந்த பார்வதி – சிவகாமி

திரி புவனத்தைக் காண்ட நாடகி
குமரி சுகத்தைப் பூண்ட காரணி
சிவை சுடர் சத்திச் சாம்பவீ அ(ம்)மை – அருள் பாலா

அலகை இரத்தத்து ஓங்கி மூழ்கிட
நரி கழுகு உப்பிச் சீர்ந்து வாய் இட
அசுரர் குலத்தைக் காய்ந்த வேல் கரம் – உடையோனே

அமரர் மகட்குப் போந்த மால் கொளும்
விபுத குறத்திக்கு ஆண்டவா தின(ம்)
அழகு சிறக்கக் காஞ்சி மேவிய – பெருமாளே.

English

kalakale nappoR chEntha nUpura
paripura moththith thAntha nAmena
karamala racchiR RAntho mAdiya – poRiyArpaing

kadithada mutRuk kAntha LAmena
idaipidi pattuc chErntha Alilai
kanathana poRpit tOngu mArpodu – vadamAdac

chalasala sacchac chEngai pUNvaLai
parimaLa pacchaic chErnthu lAviya
salasamu kaththuc chArntha vALvizhhi – suzhhalAdath

tharaLana kaippith thAmpa lArithazhh
kulamuki loththit tAyntha vOthiyar
sarasamu raiththuc chErntha thUvaiya – ruRavAmO

thilathamu kappoR kAnthi mAthumai
yenaiyaruL vaiththit tANda nAyaki
sivanuru vaththiR chErntha pArvathi – sivakAmi

thiripuva naththaik kANda nAdaki
kumarisu kaththaip pUNda kAraNi
sivaisudar saththic chAmpa vee-amai – yaruLbAlA

alakaiyi raththath thOngi mUzhhkida
narikazhhu kuppic cheernthu vAyida
asurarku laththaik kAyntha vElkara – mudaiyOnE

amararma katkup pOntha mAlkoLum
viputhaku Raththik kANda vAthina
mazhhakusi Rakkak kAnji mEviya – perumALE.

English Easy Version

kala kala enap pon sEntha nupura
paripuram oththith thAm thanAm ena
kara malar acchil thAm thOm Adiya – poRiyAr paim

kadi thadam utRuk kAnthaL Am ena
idai padi pattuc chErntha Al ilai
kana thana poRpittu Ongu mArpodu – vadam Adac

chala sala sacchac chEm kai pUN vaLai
parimaLa pacchaic chErnthu ulAviya
salasa mukaththuc chArntha vAL vizhi – suzhal Ada

tharaLa nakaippiththu Ampal Ar ithazh
kula mukil oththittu Ayntha Othiyar
sarasam uraiththuc chErntha thUvaiyar – uRavu AmO

thilatha muka pon kAnthi mAthu umai
enai aruL vaiththittu ANda nAyaki
sivan uruvaththil sErntha pArvathi – sivakAmi

thiri puvanaththaik kANda nAdaki
kumari sukaththaip pUNda kAraNi
sivai sudar saththic chAmpavee a(m)mai – aruL bAlA

alakai iraththaththu Ongi mUzhkida
nari kazhuku uppic cheernthu vAy ida
asurar kulaththaik kAyntha vEl karam – udaiyOnE

amarar makatkup pOntha mAl koLum
viputha kuRaththikku ANdavA thina(m)
azhaku siRakkak kAnji mEviya – perumALE.