திருப்புகழ் 341 கொத்தார் பற் கால் (காஞ்சீபுரம்)

Thiruppugal 341 Koththarparkal

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தா – தனதான

கொத்தார் பற்கா லற்றே கப்பாழ்
குப்பா யத்திற் – செயல்மாறிக்

கொக்கா கிக்கூ னிக்கோல் தொட்டே
கொட்டா விக்குப் – புறவாசித்

தித்தா நிற்றார் செத்தார் கெட்டேன்
அஆ உஉ- எனவேகேள்

செற்றே சுட்டே விட்டே றிப்போ
மப்பே துத்துக் – கமறாதோ

நித்தா வித்தா ரத்தோ கைக்கே
நிற்பாய் கச்சிக் – குமரேசா

நிட்டூ ரச்சூர் கெட்டோ டப்போர்
நெட்டோ தத்திற் – பொருதோனே

முத்தா ரத்தோ ளிற்கோ டற்பூ
முட்டா திட்டத் – தணிவோனே

முற்றா நித்தா அத்தா சுத்தா
முத்தா முத்திப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தா – தனதான

கொத்தார் பற் கால் அற்று ஏகப் பாழ்
குப்பாயத்திற் – செயல்மாறி

கொக்காகிக் கூனிக் கோல் தொட்டே
கொட்டாவிக் குப்புற – வாசித்

தித்தா நிற்றார் செத்தார் கெட்டேன்
அஆ உஉ – எனவேகேள்

செற்றே சுட்டே விட்டு ஏறிப்போம்
அப்பேதுத் துக்கம் – அறாதோ

நித்தா வித்தாரத் தோகைக்கே
நிற்பாய் கச்சிக் – குமரேசா

நிட்டூரச் சூர் கெட்டோடப் போர்
நெட்டு ஓதத்திற் – பொருதோனே

முத்தாரத் தோளிற் கோடற்பூ
முட்டாது இட்டத்து – அணிவோனே

முற்றா நித்தா அத்தா சுத்தா
முத்தா முத்திப் – பெருமாளே.

English

koththAr paRkA latRE kappAzh
kuppA yaththiR – seyalmARik

kokkA kikkU nikkOl thottE
kottA vikkup – puRavAsith

thiththA nitRAr seththAr kettEn
aA u u – enavEkEL

setRE suttE vittE RippO
mappE thuththuk – kamaRAthO

niththA viththA raththO kaikkE
niRpAy kacchik – kumarEsA

nittU raccUr kettO dappOr
nettO thaththiR – poruthOnE

muththA raththO LiRkO daRpU
muttA thittath – thaNivOnE

mutRA niththA aththA suththA
muththA muththip – perumALE.

English Easy Version

koththAr paR kAl atRu Ekap pAzh
kuppAyaththiR – seyalmARi

kokkAkik kUnik kOl thottE
kottAvik kuppuRa – vAsith

thiththA niRRAr seththAr kettEn
aA u u – enavEkEL

setRE suttE vittu ERippOm
appEthuth – thukkam aRAthO

niththA viththArath thOkaikkE
niRpAy kacchik – kumarEsA

nittUrac cUr kettOdap pOr
nettu OthaththiR – poruthOnE

muththArath thOLiR kOdaRpU
muttAthu ittaththu – aNivOnE

mutRA niththA aththA suththA
muththA muththip – perumALE.