திருப்புகழ் 343 சீசி முப்புர (காஞ்சீபுரம்)

Thiruppugal 343 Cheechimuppura

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தான தத்தனத் தான தத்தனத்
தான தத்தனத் தான தத்தனத்
தான தத்தனத் தான தத்தனத் – தனதான

சீசி முப்புரக் காடு நீறெழச்
சாடி நித்திரைக் கோசம் வேரறச்
சீவன் முத்தியிற் கூட வேகளித் – தநுபூதி

சேர அற்புதக் கோல மாமெனச்
சூரி யப்புவிக் கேறி யாடுகச்
சீலம் வைத்தருட் டேறி யேயிருக் – கறியாமற்

பாசம் விட்டுவிட் டோடி போனதுப்
போது மிப்படிக் காகி லேனினிப்
பாழ்வ ழிக்கடைக் காம லேபிடித் – தடியேனைப்

பார டைக்கலக் கோல மாமெனத்
தாப ரித்துநித் தார மீதெனப்
பாத பத்மநற் போதை யேதரித் – தருள்வாயே

தேசில் துட்டநிட் டூர கோதுடைச்
சூரை வெட்டியெட் டாசை யேழ்புவித்
தேவர் முத்தர்கட் கேத மேதவிர்த் – தருள்வோனே

சீர்ப டைத்தழற் சூல மான்மழுப்
பாணி வித்துருப் பாத னோர்புறச்
சீர்தி கழ்ப்புகழ்ப் பாவை யீனபொற் – குருநாதா

காசி முத்தமிழ்க் கூட லேழ்மலைக்
கோவ லத்தியிற் கான நான்மறைக்
காடு பொற்கிரிக் காழி யாருர்பொற் – புலிவேளூர்

காள அத்தியப் பால்சி ராமலைத்
தேச முற்றுமுப் பூசை மேவிநற்
காம கச்சியிற் சால மேவுபொற் – பெருமாளே.

பதம் பிரித்தது

தான தத்தனத் தான தத்தனத்
தான தத்தனத் தான தத்தனத்
தான தத்தனத் தான தத்தனத் – தனதான

சீசி முப்புரக் காடு நீறெழச்
சாடி நித்திரைக் கோசம் வேரற
சீவன் முத்தியிற் கூடவே களித்து – அநுபூதி

சேர அற்புதக் கோல மாமென
சூரியப்புவிக் கேறி யாடுக
சீலம் வைத்தருள் தேறியேயிருக்க – அறியாமல்

பாசம் விட்டுவிட் டோடி போனது
போது மிப்படிக்கு ஆகிலேன் இனிப்
பாழ்வழிக்கு அடைக்காமலே பிடித்து – அடியேனைப்

பார் அடைக்கலக் கோலமாமென
தாபரித்து நித்த ஆரம் ஈதென
பாத பத்மநற் போதை யேதரித் – தருள்வாயே

தேசில் துட்டநிட்டூர கோதுடைச்
சூரை வெட்டி யெட் டாசை யேழ்புவித்
தேவர் முத்தர்கட்கு ஏத மேதவிர்த் – தருள்வோனே

சீர்ப டைத்தழற் சூல மான்மழுப்
பாணி வித்துருப் பாதன் ஓர்புறச்
சீர்தி கழ்ப்புகழ்ப் பாவை யீனபொற் – குருநாதா

காசி முத்தமிழ்க் கூட லேழ்மலைக்
கோவ லத்தியிற் கான நான்மறைக்
காடு பொற்கிரிக் காழி யாருர்பொற் – புலிவேளூர்

காள அத்தியப் பால்சி ராமலை
தேச முற்றுமுப் பூசை மேவி
நற் காம கச்சியிற் சால மேவுபொற் – பெருமாளே.

English

cheechi muppurak kAdu neeRezhach
chAdi nidhdhiraik kOsam vEraRa
jeevan mukthiyiR kUdavE kaLiththu – anubUthi

sEra aRbudhak kOla mAmena
sUri yabbuvik kERi yAduga
seelam vaiththaruL thERi yEyiruk – kaRiyAmal

pAsam vittuvit Odi pOnadhup
pOdhu mippadik kAgi lEninip
pAzh vazhik adaikkAmalE pidiththu – adiyEnaip

pAra daikkalak kOla mAm enath
thApa riththunith thAra meedhenap
pAdha padmanaR bOdhaiyE dharith – aruLvAyE

dhEsil dhushta nishtUra kOdhudai
sUrai vettiyet tAsai yEzhbuvith
dhEvar muththarkat kEdha mEthavirthth – aruLvOnE

seerpa daiththazhaR sUla mAn mazhup
pANi viththurup pAdha nOrpuRa
seer thigazh pughazh pAvai yeenapoR – gurunAtha

kAsi muththamizhk kUda lEzhmalaik
kOva laththiyiR kAna nAnmaRaik
kAdu poRkirik kAzhi yArurpoR – pulivELUr

kALa hasthi appAl sirAmalai
dhEsa mutrumup pUjai mEvi naR
kAma kachchiyiR sAla mEvupoR – perumALE.

English Easy Version

cheechi muppurak kAdu neeRezhach
chAdi nidhdhiraik kOsam vEraRa
jeevan mukthiyiR kUdavE kaLiththu – anubUthi

sEra aRbudhak kOla mAmena sUri
yabbuvik kERi yAduga
seelam vaiththaruL thERi yEyiruk – kaRiyAmal

pAsam vittuvit Odi pOnadhup
pOdhu mippadik kAgi lEn inip pAzh
vazhik adaikkAmalE pidiththu – adiyEnai

pAra daikkalak kOla mAm enath
thApariththu nith thAra meedhenap
pAdha padmanaR bOdhaiyE dharith – aruLvAyE

dhEsil dhushta nishtUra kOdhudai
sUrai vetti yet tAsai yEzhbuvith
dhEvar muththarkat kEdha mEthavirthth – aruLvOnE

seerpa daiththazhaR sUla mAn mazhup
pANi viththurup pAdhan OrpuRa
seer thigazh pughazh pAvai yeenapoR – gurunAtha

kAsi muththamizhk kUda lEzhmalai
kOva laththiyiR kAna nAnmaRaik
kAdu poRkirik kAzhi yArurpoR – pulivELUr

kALa hasthi appAl sirAmalai
dhEsa mutrumup pUjai mEvi naR
kAma kachchiyiR sAla mEvupoR – perumALE.