திருப்புகழ் 345 படிறொழுக்கமும் (காஞ்சீபுரம்)

Thiruppugal 345 Padirozhukkamum

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தத்தன தனன தத்தன
தனன தத்தன – தனதான

படிறொ ழுக்கமு மடம னத்துள
படிப ரித்துட – னொடிபேசும்

பகடி கட்குள மகிழ மெய்ப்பொருள்
பலகொ டுத்தற – உயிர்வாடா

மிடியெ னப்பெரு வடவை சுட்டிட
விதன முற்றிட – மிகவாழும்

விரகு கெட்டரு நரகு விட்டிரு
வினைய றப்பத – மருள்வாயே

கொடியி டைக்குற வடிவி யைப்புணர்
குமர கச்சியி – லமர்வோனே

குரவு செச்சைவெண் முளரி புத்தலர்
குவளை முற்றணி – திருமார்பா

பொடிப டப்பட நெடிய விற்கொடு
புரமெ ரித்தவர் – குருநாதா

பொருதி ரைக்கடல் நிருத ரைப்படை
பொருது ழக்கிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தத்தன தனன தத்தன
தனன தத்தன – தனதான

படிறொழுக்கமும் மடம னத்து உளபடி
பரித்து உடன் – நொடிபேசும்

பகடிகட்கு உள மகிழ மெய்ப்பொருள்
பலகொடுத்து அற – உயிர்வாடா

மிடியெ னப்பெரு வடவை சுட்டிட
விதன முற்றிட – மிகவாழும்

விரகு கெட்டு அரு நரகு விட்டு
இருவினையறப் பதம் – அருள்வாயே

கொடியிடைக்குற வடிவியைப்புணர்
குமர கச்சியில் – அமர்வோனே

குரவு செச்சைவெண் முளரி புத்தலர்
குவளை முற்றணி – திருமார்பா

பொடிபடப்பட நெடிய விற்கொடு
புரமெ ரித்தவர் – குருநாதா

பொருதிரைக்கடல் நிருதரைப்படை
பொருது உழக்கிய – பெருமாளே.

English

padiRo zhukkamu madama naththuLa
padipa riththuda – nodipEsum

pagadi gatkuLa magizha meypporuL
palako duththaRa – uyirvAdA

midi enapperu vadavai suttida
vidhana mutrida – migavAzhum

viragu kett aru naragu vittiru
vinai aRappadham – aruLvAyE

kodiyi daikkuRa vadivi yaippuNar
kumara kachchiyil – amarvOnE

kuravu chechchaiveN muLari puththalar
kuvaLai mutraNi – thirumArbA

podipa dappada nediya viRkodu
puram eriththavar – gurunAthA

poru thiraikkadal nirudha raippadai
porudhu zhakkiya – perumALE.

English Easy Version

padiRo zhukkamu madama naththuLa
padipariththu uda – nodipEsum

pagadigatku uLa magizha meypporuL
palako duththu aRa – uyirvAdA

midi enapperu vadavai suttida
vidhana mutrida – migavAzhum

viragu kettu aru naragu vittu iru
vinai aRa padham – aruLvAyE

kodiyidaik kuRa vadiviyaip puNar
kumara kachchiyil – amarvOnE

kuravu chechchaiveN muLari puththalar
kuvaLai mutra aNi – thirumArbA

podipa dappada nediya viRkodu
puram eriththavar – gurunAthA

poru thiraikkadal nirudharai padai
porudhu zhakkiya – perumALE.