Thiruppugal 346 Magudakkoppada
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனனத்தத் தானத் தானன
தனனத்தத் தானத் தானன
தனனத்தத் தானத் தானன – தந்ததான
மகுடக்கொப் பாடக் காதினில்
நுதலிற்பொட் டூரக் கோதிய
மயிரிற்சுற் றோலைப் பூவோடு – வண்டுபாட
வகைமுத்துச் சோரச் சேர்நகை
யிதழிற்சொற் சாதிப் பாரியல்
மதனச்சொற் பாடுக் கோகில – ரம்பைமாதர்
பகடிச்சொற் கூறிப் போர்மயல்
முகவிச்சைப் பேசிச் சீரிடை
பவளப்பட் டாடைத் தோளிரு – கொங்கைமேலாப்
பணமெத்தப் பேசித் தூதிடு
மிதயச்சுத் தீனச் சோலிகள்
பலரெச்சிற் காசைக் காரிகள் – சந்தமாமோ
தகுடத்தத் தானத் தானன
திகுடத்தித் தீதித் தோதிமி
தடுடுட்டுட் டாடப் பேரிகை – சங்குவீணை
தடமிட்டுப் பாவக் கார்கிரி
பொடிபட்டுப் போகச் சூரர்கள்
தலையிற்றிட் டாடப் போர்புரி – கின்றவேலா
திகிரிப்பொற் பாணிப் பாலனை
மறைகற்புத் தேளப் பூமனை
சினமுற்றுச் சேடிற் சாடிய – கந்தவேளே
தினையுற்றுக் காவற் காரியை
மணமுற்றுத் தேவப் பூவொடு
திகழ்கச்சித் தேவக் கோன்மகிழ் – தம்பிரானே.
பதம் பிரித்தது
தனனத்தத் தானத் தானன
தனனத்தத் தானத் தானன
தனனத்தத் தானத் தானன – தந்ததான
மகுடக் கொப்பு ஆடக் காதினில்
நுதலில் பொட்டு ஊரக் கோதிய
மயிரில் சுற்று ஓலைப் பூவோடு – வண்டு பாட
வகை முத்துச் சோரச் சேர் நகை
இதழில் சொல் சாதிப்பார் இயல்
மதனச் சொல் பாடுக் கோகில – ரம்பை மாதர்
பகடிச் சொல் கூறிப் போர் மயல்
முக இச்சைப் பேசிச் சீர் இடை
பவளப் பட்டாடைத் தோள் இரு – கொங்கை மேலா
பண(ம்) மெத்தப் பேசித் தூது இடும்
இதயச் சுத்த ஈனச் சோலிகள்
பலர் எச்சிற்கு ஆசைக்காரிகள் – சந்தம் ஆமோ
தகுடத்தத் தானத் தானன
திகுடத்தித் தீதித் தோதிமி
தடுட்டுடுட் டாடப் பேரிகை – சங்கு வீணை
தடம் இட்டு பாவக்கார் கிரி
பொடி பட்டுப் போகச் சூரர்கள்
தலை இற்று இட்டு ஆடப் போர் புரிகின்ற – வேலா
திகிரிப் பொன் பாணிப் பாலனை
மறை கல் புத்தேள் அப் பூம(ன்)னை
சினம் உற்றுச் சேடில் சாடிய – கந்த வேளே
தினை உற்றுக் காவல் காரியை
மணம் உற்றுத் தேவ பூவொடு
திகழ் கச்சித் தேவக் கோன் மகிழ் – தம்பிரானே.
English
makudakkop pAdak kAthinil
nuthaliRpot tUrak kOthiya
mayiriRchut ROlaip pUvOdu – vaNdupAda
vakaimuththuc chOrac chErnakai
yithazhiRchoR chAthip pAriyal
mathanacchoR pAduk kOkila – rampaimAthar
pakadicchoR kURip pOrmayal
mukavicchaip pEsic cheeridai
pavaLappat tAdaith thOLiru – kongaimElAp
paNameththap pEsith thUthidu
mithayacchuth theenac chOlikaL
palarecchiR kAsaik kArikaL – santhamAmO
thakudaththath thAnath thAnana
thikudaththith theethith thOthimi
thaduduttut tAdap pErikai – sanguveeNai
thadamittup pAvak kArkiri
podipattup pOkac cUrarkaL
thalaiyitRit tAdap pOrpuri – kinRavElA
thikirippoR pANip pAlanai
maRaikaRputh thELap pUmanai
sinamutRuc chEdiR chAdiya – kandhavELE
thinaiyutRuk kAvaR kAriyai
maNamutRuth thEvap pUvodu
thikazhkacchith thEvak kOnmakizh – thambirAnE.
English Easy Version
makudak koppu Adak kAthinil
nuthalil pottu Urak kOthiya
mayiril chutRu Olaip pUvOdu – vaNdu pAda
vakai muththuc chOrac chEr nakai
ithazhil chol chAthippAr iyal
mathanac chol pAduk kOkila – rampai mAthar
pakadic chol kURip pOr mayal
muka icchaip pEsic cheer idai
pavaLap pattAdaith thOL iru – kongai mElA
paNa(m) meththap pEsith thUthu
idum ithayac chuththa eenac chOlikaL
palar ecchiRku AsaikkArikaL – santham AmO
thakudaththath thAnath thAnana
thikudaththith theethith thOthimi
thaduttudud dAdap pErikai – sangu veeNai
thadam ittu pAvakkAr kiri
podi pattup pOkac cUrarkaL
thalai itRu ittu Adap pOr – purikinRa vElA
thikirip pon pANip pAlanai
maRai kal puththEL ap pUma(n)nai
sinam utRuc chEdil chAdiya – kandha vELE
thinai utRuk kAval kAriyai
maNam utRuth thEva pUvodu
thikazh kacchith thEvak kOn makizh – thambirAnE.