திருப்புகழ் 348 மயல் ஓதும் (காஞ்சீபுரம்)

Thiruppugal 348 Mayalodhum

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதான தந்த தனதான தந்த
தனதான தந்த – தனதான

மயலோது மந்த நிலையாலும் வஞ்ச
வசைபேசு கின்ற – மொழியாலும்

மறிபோலு கின்ற விழிசேரு மந்தி
மதிநேரு கின்ற – நுதலாலும்

அயிலேநி கர்ந்த விழியாலும் அஞ்ச
நடையாலும் அங்கை – வளையாலும்

அறிவேய ழிந்து அயர்வாகி நைந்து
அடியேன்ம யங்கி – விடலாமோ

மயிலேறி யன்று நொடிபோதி லண்டம்
வலமாக வந்த – குமரேசா

மறிதாவு செங்கை அரனா ரிடங்கொள்
மலைமாது தந்த – முருகேசா

நயவானு யர்ந்த மணிமாட மும்பர்
நடுவேநி றைந்த – மதிசூழ

நறைவீசு கும்ப குடமேவு கம்பை
நகர்மீத மர்ந்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதான தந்த தனதான தந்த
தனதான தந்த – தனதான

மயல் ஓதும் அந்த நிலையாலும் வஞ்ச
வசை பேசுகின்ற – மொழியாலும்

மறி போல் உகின்ற விழி சேரும் அந்தி
மதி நேருகின்ற – நுதலாலும்

அயிலே நிகர்ந்த விழியாலும் அஞ்ச(ம்)
நடையாலும் அங்கை – வளையாலும்

அறிவே அழிந்து அயர்வாகி நைந்து
அடியேன் மயங்கி – விடலாமோ

மயில் ஏறி அன்று நொடி போதில் அண்டம்
வலமாக வந்த – குமரேசா

மறி தாவு செங்கை அரனார் இடங்கொள்
மலைமாது தந்த – முருகேசா

நய வான் உயர்ந்த மணி மாடம் உம்பர்
நடுவே நிறைந்த – மதி சூழ

நறை வீசு கும்ப குட(ம்) மேவு கம்பை
நகர் மீது அமர்ந்த – பெருமாளே.

English

mayalOthu mantha nilaiyAlum vanja
vasaipEsu kinRa – mozhiyAlum

maRipOlu kinRa vizhisEru manthi
mathinEru kinRa – nuthalAlum

ayilEni karntha vizhiyAlum anja
nadaiyAlum angai – vaLaiyAlum

aRivEya zhinthu ayarvAki nainthu
adiyEnma yangi – vidalAmO

mayilERi yanRu nodipOthi laNdam
valamAka vantha – kumarEsA

maRithAvu sengai aranA ridamkoL
malaimAthu thantha – murukEsA

nayavAnu yarntha maNimAda mumpar
naduvEni Raintha – mathisUzha

naRaiveesu kumpa kudamEvu kampai
nakarmeetha marntha – perumALE.

English Easy Version

mayal Othum antha nilaiyAlum vanja
vasai pEsukinRa – mozhiyAlum

maRi pOl ukinRa vizhi sErum anthi mathi
nErukinRa – nuthalAlum

ayilE nikarntha vizhiyAlum anja(m)
nadaiyAlum angai – vaLaiyAlum

aRivE azhinthu ayarvAki nainthu
adiyEn mayangi – vidalAmO

mayil ERi anRu nodi pOthil aNdam
valamAka vantha – kumarEsA

maRi thAvu sengai aranAr idamkoL
malaimAthu thantha – murukEsA

naya vAn uyarntha maNi mAdam umpar
naduvE niRaintha – mathi sUzha

naRai veesu kumpa kuda(m) mEvu kampai
nakar meethu amarntha – perumALE.