திருப்புகழ் 349 முத்து ரத்ந சூத்ர (காஞ்சீபுரம்)

Thiruppugal 349 Muththurathnasuthra

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்த தத்த தாத்த தத்த தத்த தாத்த
தத்த தத்த தாத்த – தனதான

முத்து ரத்ந சூத்ர மொத்த சித்ர மார்க்கர்
முற்செ மத்து மூர்க்கர் – வெகுபாவர்

முத்து திர்த்த வார்த்தை யொத்த பத்ர வாட்கண்
முச்சர் மெத்த சூட்சர் – நகையாலே

எத்தர் குத்தி ரார்த்தர் துட்ட முட்ட காக்கர்
இட்ட முற்ற கூட்டர் – விலைமாதர்

எக்கர் துக்கர் வாழ்க்கை யுற்ற சித்த நோய்ப்புண்
இப்ப டிக்கு மார்க்கம் – உழல்வேனோ

தித்தி மித்தி மீத்த னத்த னத்த மூட்டு
சிற்று டுக்கை சேட்டை – தவில்பேரி

திக்கு மக்க ளாக்கை துக்க வெற்பு மீக்கொள்
செக்க டற்கு ளாழ்த்து – விடும்வேலா

கற்பு ரத்தை வீட்டி நட்ட மிட்ட நீற்றர்
கத்தர் பித்தர் கூத்தர் – குருநாதா

கற்கு றிச்சி வாழ்ப்பெ ணொக்க வெற்றி வேற்கொள்
கச்சி நத்தி நாட்கொள் – பெருமாளே.

பதம் பிரித்தது

தத்த தத்த தாத்த தத்த தத்த தாத்த
தத்த தத்த தாத்த – தனதான

முத்து ரத்ந சூத்ரம் ஒத்த சித்ர மார்க்கர்
முன் செ(ன்) மத்து மூர்க்கர் – வெகு பாவர்

முத்து உதிர்த்த வார்த்தை ஒத்த பத்ரம் வாள் கண்
மு(ஞ்)சர் மெத்த சூட்சர் – நகையாலே

எத்தர் குத்திர அர்த்தர் துட்ட முட்ட காக்கர்
இட்டம் உற்ற கூட்டர் – விலை மாதர்

எக்கர் துக்கர் வாழ்க்கை உற்ற சித்த நோய்ப்புண்
இப்படிக்கு மார்க்கம் – உழல்வேனோ

தித்தி மித்தி மீத் தனத்த நத்தம் மூட்டு
சிற்று உடுக்கை சேட்டை – தவில் பேரி

திக்கு மக்கள் ஆக்கை துக்க வெற்பு மீக்கொள்
செம் கடற்குள் ஆழ்த்து – விடும் வேலா

கல் புரத்தை வீட்டி நட்டமிட்ட நீற்றர்
கத்தர் பித்தர் கூத்தர் – குரு நாதா

கல் குறிச்சி வாழ்ப்பெண் ஒக்க வெற்றி வேல் கொள்
கச்சி நத்தி நாள் கொள் – பெருமாளே.

English

muththu rathna cUthra moththa sithra mArkkar
muRche maththu mUrkkar – vekupAvar

muththu thirththa vArththai yoththa pathra vAtkaN
mucchar meththa cUtchar – nakaiyAlE

eththar kuththi rArththar thutta mutta kAkkar
itta mutRa kUttar – vilaimAthar

ekkar thukkar vAzhkkai yutRa siththa nOyppuN
ippa dikku mArkkam – uzhalvEnO

thiththi miththi meeththa naththa naththa mUttu
sitRu dukkai sEttai – thavilpEri

thikku makka LAkkai thukka veRpu meekkoL
sekka daRku LAzhththu – vidumvElA

kaRpu raththai veetti natta mitta neetRar
kaththar piththar kUththar – gurunAthA

kaRku Ricchi vAzhppe Nokka vetRi vERkoL
kacchi naththi nAtkoL – perumALE.

English Easy Version

muththu rathna cUthram oththa sithra mArkkar
mun se(n)maththu mUrkkar – veku pAvar

muththu uthirththa vArththai oththa pathram vAL kaN
munjar meththa cUtchar – nakaiyAlE

eththar kuththira arththar thutta mutta kAkkar
ittam utRa kUttar – vilai mAthar

ekkar thukkar vAzhkkai utRa siththa nOyppuN
ippadikku mArkkam – uzhalvEnO

thiththi miththi meeth thanaththa naththam mUttu
sitRu udukkai sEttai – thavil pEri

thikku makkaL Akkai thukka veRpu meekkoL
sem kadaRkuL Azhththu – vidum vElA

kal puraththai veetti nattamitta neetRar
kaththar piththar kUththar – guru nAthA

kal kuRicchi vAzhppeN okka vetRi vEl koL
kacchi naththi nAL koL – perumALE.