Thiruppugal 350 Vambarachchila
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தந்த தாத்தன தன்ன தனந்தன
தத்தத் தத்தத் – தனதானா
வம்ப றாச்சில கன்ன மிடுஞ்சம
யத்துக் கத்துத் – திரையாளர்
வன்க லாத்திரள் தன்னை யகன்றும
னத்திற் பற்றற் – றருளாலே
தம்ப ராக்கற நின்னை யுணர்ந்துரு
கிப்பொற் பத்மக் – கழல்சேர்வார்
தங்கு ழாத்தினி லென்னையு மன்பொடு
வைக்கச் சற்றுக் – கருதாதோ
வெம்ப ராக்ரம மின்னயில் கொண்டொரு
வெற்புப் பொட்டுப் – படமாசூர்
வென்ற பார்த்திப பன்னிரு திண்புய
வெட்சிச் சித்ரத் – திருமார்பா
கம்ப ராய்ப்பணி மன்னு புயம்பெறு
கைக்குக் கற்புத் – தவறாதே
கம்பை யாற்றினி லன்னை தவம்புரி
கச்சிச் சொக்கப் – பெருமாளே.
பதம் பிரித்தது
தந்த தாத்தன தன்ன தனந்தன
தத்தத் தத்தத் – தனதானா
வம்பறாச்சில கன்னமிடும் சம
யத்துக் கத்துத் – திரையாளர்
வன்கலாத்திரள் தன்னை யகன்று
மனத்திற் பற்றற்று – அருளாலே
தம் பராக்கு அற நின்னை யுணர்ந்
துருகி பொற் பத்மக் – கழல்சேர்வார்தம்
குழாத்தினில் என்னையும் அன்பொடு
வைக்கச் சற்றுக் – கருதாதோ
வெம்பராக்ரம மின்னயில் கொண்டு ஒரு
வெற்புப் பொட்டுப் – பட மாசூர்
வென்ற பார்த்திப பன்னிரு திண்புய
வெட்சிச் சித்ரத் – திருமார்பா
கம்ப ராய்ப்பணி மன்னு புயம்பெறு
கைக்கு கற்புத் – தவறாதே
கம்பை யாற்றினில் அன்னை தவம்புரி
கச்சிச் சொக்கப் – பெருமாளே.
English
vampa RAcchila kanna midunjchama
yaththuk kaththuth – thiraiyALar
vanka lAththiraL thannai yakanRuma
naththiR paRRaR – RaruLAlE
thampa rAkkaRa ninnai yuNarnthuru
kippoR pathmak – kazhalsErvAr
thangu zhAththini lennaiyu manpodu
vaikkach chaRRuk – karuthAthO
vempa rAkrama minnayil koNdoru
veRpup pottup – padamAchUr
venRa pArththipa panniru thiNpuya
vetchich chithrath – thirumArpA
kampa rAyppaNi mannu puyampeRu
kaikkuk kaRputh – thavaRAthE
kampai yARRini lannai thavampuri
kachchich chokkap – perumALE.
English Easy Version
vampa RAcchila kanna midum chama
yaththuk kaththuth – thiraiyALar
vanka lAththiraL thannai yakanRu
manaththiR paRRaRRu – aruLAlE
thampa rAkkaRa ninnai yuNarnthu
urukippoR pathmak – kazhalsErvAr
thangu zhAththini lennaiyu manpodu
vaikkach chaRRuk – karuthAthO
vempa rAkrama minnayil koNdu oru
veRpup pottup – pada mAchUr
venRa pArththipa panniru thiNpuya
vetchich chithrath – thirumArpA
kampa rAyppaNi mannu puyampeRu
kaikku kaRputh – thavaRAthE
kampai yARRini lannai thavampuri
kachchich chokkap – perumALE.