திருப்புகழ் 351 வாய்ந்தப்பிடை (காஞ்சீபுரம்)

Thiruppugal 351 Vaindhappidai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தாந்தத்தன தானன தானன
தாந்தத்தன தானன தானன
தாந்தத்தன தானன தானன – தனதானா

வாய்ந்தப்பிடை நீடுகு லாவிய
நீந்திப்பது மாதியை மீதினி
லூர்ந்துற்பல வோடையில் நீடிய – உகள்சேலை

வார்ந்துப்பக ழீயெதி ராகிமை
கூர்ந்துப்பரி யாவரி சேரவை
சேர்ந்துக்குழை யோடுச லாடிய – விழியாலே

சாய்ந்துப்பனை யூணவ ரானபொ
லாய்ந்துப்பணி னாரிரு தாளினில்
வீழ்ந்திப்படி மீதினி லேசிறி – தறிவாலே

சாந்தப்பிய மாமலை நேர்முலை
சேர்ந்துப்படி வீணினி லேயுயிர்
மாய்ந்திப்படி போகினு மோர்மொழி – மறவேனே

சார்ந்தப்பெரு நீர்வெள மாகவெ
பாய்ந்தப்பொழு தாருமி லாமலெ
காந்தப்பெரு நாதனு மாகிய – மதராலே

தாந்தக்கிட தாகிட தாகிட
தோந்திக்கிட தோதிமி தோதிமி
சேஞ்செக்கண சேகெண சேகெண – வெனதாளம்

காந்தப்பத மாறியு லாவுய
ராந்தற்குரு நாதனு மாகியெ
போந்தப்பெரு மான்முரு காவொரு – பெரியோனே

காந்தக்கலு மூசியு மேயென
ஆய்ந்துத்தமி ழோதிய சீர்பெறு
காஞ்சிப்பதி மாநகர் மேவிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தாந்தத்தன தானன தானன
தாந்தத்தன தானன தானன
தாந்தத்தன தானன தானன – தனதானா

அப்பு இடை வாய்ந்து நீடு குலாவிய
நீந்து பதும ஆதியை மீதினில்
உற்பல ஓடையில் ஊர்ந்து நீடிய – உகள் சேலை

வார்ந்துப் பகழீ எதிர் ஆகி மை
கூர்ந்துப் பரியா(க) வரி சேர் அவை
சேர்ந்துக் குழையோடு ஊசல் ஆடிய – விழியாலே

சாய்ந்துப் பனை ஊண் அவர் ஆன பொல்
ஆய்ந்துப் ப(பா)ணினார் இரு தாளினில்
வீழ்ந்து இப் படி மீதினிலே சிறிது – அறிவாலே

சாந்து அப்பிய மா மலை நேர் முலை
சேர்ந்துப்படி வீணினி லேயுயிர் மாய்ந்து
இப்படிப் போகினும் ஓர் மொழி – மறவேனே

சார்ந்தப் பெரு நீர் வெ(ள்)ளமாகவே
பாய்ந்த அப் பொழுது ஆரும் இல்லாமலெ
காந்தப் பெரு நாதனும் ஆகிய – மதராலே

தாந்தக்கிட தாகிட தாகிட
தோந்திக்கிட தோதிமி தோதிமி
சேஞ்செக்கண சேகெண சேகெண – வெனதாளம்

காந்தப் பத(ம்) மாறி உலாவு உயர்
ஆந்தன் குரு நாதனும் ஆகியெ
போந்தப் பெருமான முருகா ஒரு – பெரியோனே

காந்தக் க(ல்)லும் ஊசியுமே என
ஆய்ந்துத் தமிழ் ஓதிய சீர் பெறு(ம்)
காஞ்சிப் பதி மா நகர் மேவிய – பெருமாளே.

English

vAynthappidai needuku lAviya
neenthippathu mAthiyai meethini
lUrnthuRpala vOdaiyil neediya – ukaLsElai

vArnthuppaka zheeyethi rAkimai
kUrnthuppari yAvari sEravai
sErnthukkuzhai yOdusa lAdiya – vizhiyAlE

sAynthuppanai yUNava rAnapo
lAynthuppaNi nAriru thALinil
veezhnthippadi meethini lEsiRi – thaRivAlE

sAnthappiya mAmalai nErmulai
sErnthuppadi veeNini lEyuyir
mAynthippadi pOkinu mOrmozhi – maRavEnE

sArnthapperu neerveLa mAkave
pAynthappozhu thArumi lAmale
kAnthapperu nAthanu mAkiya – matharAlE

thAnthakkida thAkida thAkida
thOnthikkida thOthimi thOthimi
sEnjekkaNa sEkeNa sEkeNa – venathALam

kAnthappatha mARiyu lAvuya
rAnthaRkuru nAthanu mAkiye
pOnthapperu mAnmuru kAvoru – periyOnE

kAnthakkalu mUsiyu mEyena
Aynthuththami zhOthiya seerpeRu
kAnjippathi mAnakar mEviya – perumALE.

English Easy Version

appu idai vAynthu needu kulAviya
pathuma Athiyai neenthu uRpala
Odaiyil meethinil Urnthu neediya – ukaL sElai

vArnthup pakazhee ethir Aki mai
kUrnthup pariyA(ka) vari sEr avai
sErnthuk kuzhaiyOdu Usal Adiya – vizhiyAlE

sAynthup panai UN avar Ana pol
Aynthup pa(a)NinAr iru thALinil
Veezhnthu ip padi meethinilE siRithu – aRivAlE

sAnthu appiya mA malai nEr mulai
sErnthuppadi veeNini lEyuyir
mAynthu ippadip pOkinum Or mozhi – maRavEnE

sArnthap peru neer ve(L)LamAkavE
pAyntha ap pozhuthu Arum illAmale
kAnthap peru nAthanum Akiya – matharAlE

thAnthakkida thAkida thAkida
thOnthikkida thOthimi thOthimi
sEnjekkaNa sEkeNa sEkeNa – venathALam

kAnthap patha(m) mARi ulAvu
uyar Anthan kuru nAthanum Akiye
pOnthap perumAna murukA oru – periyOnE

kAnthak ka(l)lum UsiyumE
ena Aynthuth thamizh Othiya seer peRu(m)
kAnjip pathi mA nakar mEviya – perumALE.