திருப்புகழ் 352 அறிவிலாப் பித்தர் (காஞ்சீபுரம்)

Thiruppugal 352 Arivilappiththar

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனாத் தந்த தந்த தனதனாத் தந்த தந்த
தனதனாத் தந்த தந்த – தனதான

அறிவிலாப் பித்த ருன்ற னடிதொழாக் கெட்ட வஞ்சர்
அசடர்பேய்க் கத்தர் நன்றி – யறியாத

அவலர்மேற் சொற்கள் கொண்டு கவிகளாக் கிப்பு கழ்ந்து
அவரைவாழ்த் தித்தி ரிந்து – பொருள்தேடிச்

சிறிதுகூட் டிக்கொ ணர்ந்து தெருவுலாத் தித்தி ரிந்து
தெரிவைமார்க் குச்சொ ரிந்து – அவமேயான்

திரியுமார்க் கத்து நிந்தை யதனைமாற் றிப்ப ரிந்து
தெளியமோ க்ஷத்தை யென்று – அருள்வாயே

இறைவர்மாற் றற்ற செம்பொன் வடிவம்வேற் றுப்பி ரிந்து
இடபமேற் கச்சி வந்த – உமையாள்தன்

இருளைநீக் கத்த வஞ்செய் தருளநோக் கிக்கு ழைந்த
இறைவர்கேட் கத்த குஞ்சொ – லுடையோனே

குறவர்கூட் டத்தில் வந்து கிழவனாய்ப் புக்கு நின்று
குருவியோட் டித்தி ரிந்த – தவமானைக்

குணமதாக் கிச்சி றந்த வடிவுகாட் டிப்பு ணர்ந்த
குமரகோட் டத்த மர்ந்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதனாத் தந்த தந்த தனதனாத் தந்த தந்த
தனதனாத் தந்த தந்த – தனதான

அறிவிலாப் பித்தர் உன்றன் அடிதொழாக் கெட்ட வஞ்சர்
அசடர்பேய்க் கத்தர் நன்றி – யறியாத

அவலர் மேற் சொற்கள் கொண்டு கவிகளாக்கிப் புகழ்ந்து
அவரைவாழ்த்தித் திரிந்து – பொருள்தேடி

சிறிதுகூட்டிக் கொணர்ந்து தெருவுலாத்தித் திரிந்து
தெரிவைமார்க்குச் சொரிந்து – அவமேயான்

திரியுமார்க்கத்து நிந்தை யதனை மாற்றி பரிந்து
தெளிய மோக்ஷத்தை யென்று – அருள்வாயே

இறைவர் மாற்றற்ற செம்பொன் வடிவம் வேற்றுப்பி ரிந்து
இடபமேற் கச்சி வந்த – உமையாள் தன்

இருளைநீக்கத் தவஞ்செய்து அருளநோக்கிக் குழைந்த
இறைவர் கேட்கத் தகுஞ்சொல் – உடையோனே

குறவர்கூட்டத்தில் வந்து கிழவனாய்ப் புக்கு நின்று
குருவியோட்டித்திரிந்த – தவமானை

குணமதாக்கிச் சிறந்த வடிவுகாட்டிப் புணர்ந்த
குமரகோட்டத்து அமர்ந்த – பெருமாளே.

English

aRivilAp piththar undran adithozhAk ketta vanjar
asadarpEyk kaththar nandri – aRiyAdha

avalarmER soRkaL koNdu kavigaL Akki pugazhndhu
avarai vAzhththith thirindhu – poruLthEdi

siRidhu kUttik koNarndhu theru ulAththi thirindhu
therivaimArkku chorindhu – avamEyAn

thiriyumArg gaththu nindhai adhanai mAtrip parindhu
theLiya mOkshaththai endru – aruLvAyE

iRaivar mAtratra sempon vadivam vEtrup pirindhu
idabamEr kachchi vandha – umaiyALthan

iruLai neekkath thavansey dharuLanOkkik kuzhaindha
iRaivar kEtkath thagunsol – udaiyOnE

kuRavar kUttaththil vandhu kizhavanAy pukku nindru
kuruvi Ottiththi rindha – thavamAnai

guNamadhAkki chiRandha vadivukAttip puNarndha
kumarakOttath amarndha – perumALE.

English Easy Version

aRivilAp piththar undran adithozhAk ketta vanjar
asadarpEyk kaththar nandri – aRiyAdha

avalar mER soRkaL koNdu kavigaL Akki pugazhndhu
avarai vAzhththith thirindhu – poruLthEdi

siRidhu kUttik koNarndhu theru ulAththi thirindhu
therivaimArkku chorindhu – avamEyAn

thiriyumArg gaththu nindhai adhanai mAtrip parindhu
theLiya mOkshaththai endru – aruLvAyE

iRaivar mAtratra sempon vadivam vEtrup pirindhu
idabamEr kachchi vandha – umaiyALthan

iruLai neekkath thavansey dharuLanOkkik kuzhaindha
iRaivar kEtkath thagunsol – udaiyOnE

kuRavar kUttaththil vandhu kizhavanAy pukku nindru
kuruvi Ottiththi rindha – thavamAnai

guNamadhAkki chiRandha vadivukAttip puNarndha
kumarakOttath amarndha – perumALE.